இந்த மாதம் நீங்கள் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் புகழும் பெயரும் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கலாம். ஒரு சிலருக்கு தலைமைப் பொறுப்பு கிட்டலாம். வேலைக்கான போட்டித் தேர்வுகளை நீங்கள் சிறப்பாக எழுதி அரசாங்க வேலை பெற முடியும். இந்த மாதம் நீங்கள் மூட்டு வலி, கால் வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் தொல்லைகள் மற்றும் வழக்கு விவகாரங்கள் போன்றவை காரணமாக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். இதற்கான பணத்தை உங்கள் சேமிப்பில் இருந்து பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிரிகள் அல்லது போட்டியாளர்கள் மூலம் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாகவும் செலவுகள் ஏற்படலாம். எனவே நீங்கள் பொறுமை கடைபிடிக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை. பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஓத்துழைப்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடித்து அளிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவை வழங்குவார்கள். உங்களைச் சுற்றி இருக்கும் வயதான நபர்கள் அளிக்கும் கருத்து உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். குழந்தைகள் குறித்து எடுத்த முடிவுகளை நீங்கள் மாற்றி கொள்ள நேரலாம். அதன் காரணமாக அவர்கள் முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி வெற்றி பெறுவார்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி இருக்கும். என்றாலும் இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம். எனவே வாக்குவாதங்களைத் தவிருங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும்.
ஏப்ரல் மாதத்தில், அன்பானவர்களுடன் காதல் உறவுகளில் ஈடுபடவும், உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் காதல் உறவுகளிலும் ஈடுபடுவதில் வேடிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களுடனான தொடர்பு அதிகரிக்கும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு பரிசுகளை வழங்கலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.தொலைதூர உறவில் இருப்பவர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதம் பெற்றோர் உங்கள் காதலை அங்கீகரிக்கலாம். ஒற்றையர்கள் தங்களுக்கு பிடித்தமானவரிடம் காதலை வெளிப்படுத்தவும், காதல் விவகாரங்களில் ஈடுபடவும் இது சாதகமான மாதமாகத் தெரிகிறது. இருப்பினும், இளைய சகோதரர்களின் செல்வாக்கு காதல் உறவுகளில் சிக்கல்களை உருவாக்கலாம். எனவே, அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். தொலை தூர பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். என்றாலும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் முன்னோர்களை தவறாமல் வழிபடுவது உறவுகளில் உள்ள சவால்களை சமாளிக்க உதவும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
இந்த மாதம் நீங்கள் அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மற்றும் திடீர் பண இழப்புகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க உங்கள் எல்லா நடவடிக்கைகளையும் நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு வரவு செலவுகளை மேற்கொள்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும். மற்றும் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தந்தை அல்லது தந்தை வயதில் உங்கள் குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் உடல்நலப் பிரச்சனைகளுக்காக உங்கள் பணத்தை செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, பெரும் சிரமங்களைத் தவிர்க்க, அவர்களைக் கவனித்து, அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உங்கள் பணத்தை கடன்கள் மற்றும் சட்ட சிக்கல்களில் செலவிட வாய்ப்புகள் உள்ளன, இது இழப்புகளை அதிகரிக்கக்கூடும். உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சமூக சேவை நடவடிக்கைகளுக்கு ஒதுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது, இது இழப்புகளைத் தவிர்க்கவும் உங்கள் நிதி வளர்ச்சிக்கும் உதவும். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு புதிய இடங்களுக்கு இடமாற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள், அது உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். உங்கள் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு தொழில் உறுதுணையாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெற உங்கள் எல்லா முயற்சிகளையும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. புதன் கிழமைகளில் தொடர்ந்து விஷ்ணுவை வழிபடுவது உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
இந்த மாதம் நீங்கள் பணி நிமித்தமாக நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். அது உங்கள் உத்தியோக முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்காக் நீங்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லலாம். புது இடம் உங்கள் உத்தியோகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். நீங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். அதன் மூலம் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். நீங்கள் சிறப்பாக செயலாற்றி பதவி உயர்வு மற்றும் ஊதிய ஊயர்வு பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களால் சாதிக்க முடியும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடித்து முன்னேற குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவது சாத்தியமாகும். தொழிலில் நீங்கள் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். மற்றும் புதிய தயாரிப்புகளை செயல்படுத்துவது சாத்தியமாகும். உங்கள் வாடிக்கையாளர் தளத்தை மேம்படுத்தவும் உங்கள் வணிகத்தை மேம்படுத்தவும் முடியும். இருப்பினும், வணிகம் தொடர்பான முதலீடுகள் ஆதரவாகத் தெரியவில்லை, எனவே நஷ்டத்தைத் தவிர்க்க முதலீட்டுத் திட்டங்களை இந்த மாதம் தள்ளிப் போடுவது நல்லது. கருப்பசாமியை வழிபடுவது இந்த மாதம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற :சனி பூஜை
கணுக்கால், சுவாசம், சைனஸ் மற்றும் ஒவ்வாமை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு ஏப்ரல் ஒரு சாதகமான காலமாகும். எனவே, முழுமையான குணமடைய இந்தப் பகுதிகளில் உங்களுக்குப் பிரச்சனைகள் இருந்தால் சிகிச்சைகளுக்குச் செல்லலாம். இருப்பினும், இந்த பகுதிகளில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், இந்த பகுதிகளில் தற்காலிகமாக புதிய சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க, அவ்வப்போது பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சிவபெருமானை வழிபடுவதும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறைத்து, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட :சூரியன் பூஜை
இந்த மாதம் மாணவர்கள் திட்டமிட்டபடி செயலாற்ற வேண்டியிருக்கும். சக மாணவர்கள் அளிக்கும் கருத்துகளை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது. உங்கள் இலக்கை அடைய உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள். உங்கள் சூழலில் எதிரிகள் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, இது உங்கள் படிப்பில் உங்கள் கவனத்தை இழக்கச் செய்து வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். எதிரிகளிடம் இருந்து விலகி இருக்கவும், படிப்பில் கவனம் செலுத்தவும், மற்றவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் அவற்றைத் தீர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் படிப்பை மேம்படுத்தவும் உங்கள் இலக்கை அடையவும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆதரவைப் பெறவும்.
கல்வியில் மேன்மை பெற : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 1,2,7,11,12,13,14,15,23,24,25,28,29.
அசுப தேதிகள் : 3,4,5,6,16,17,21,22,30.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025