Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2024 | April Matha Dhanusu Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2024 | April Matha Dhanusu Rasi Palan 2024

Posted DateMarch 26, 2024

தனுசு மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம் உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். குறித்த நேரத்தில் உங்கள் அலுவலகப் பணிகளை முடிக்கவும் உங்கள் உத்தியோகத்தில் முன்னேறவும் சாதகமான காலமாக இந்த மாதம் இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். முதலீடுகள் இன்றி எந்தவொரு செயலையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.  நீங்கள் முதலீடு இல்லாத கூட்டாளராக , மத்தியஸ்தராக, தரகராக செயல்பட்டு உங்கள் தொழிலில் வளர்ச்சி காணலாம். உங்களின் புதிய கருத்துகள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும். நீங்கள் அனைவரிடமும் சுமுகமான நல்லுறவை மேற்கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். குழந்தைகள் சார்ந்த நடவடிக்கைகள் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அளிக்கும். மேலும் அவர்கள் தொடர்பான தொழில் மற்றும் உணவுப் பொருள் சார்ந்த தொழில் உங்களுக்கு அனுகூலமான வளர்ச்சியை அளிக்கும். இந்த மாதம் உறவுநிலை சிறப்பாக இருக்கும். பிரிந்தவர்கள் ஓன்று கூடும் காலக்கட்டமாக இந்த மாதம் அமையும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். உங்களில் ஒரு சிலர் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூகத்தில் நல்ல   பெயரும் புகழும் பெறுவீர்கள். இந்த மாதம் சிரமங்களும் நஷ்டங்களும் குறையும். உங்கள் சொந்த ஊர் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், அங்குள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன, இது திருப்தியையும் வளர்ச்சியையும் அளிக்கும். மேலும், உங்கள் எதிர்கால வளர்ச்சிக்காக உங்கள் பணத்தை தாயகத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம். மகான்களை  வழிபடுவதும், குருக்களின் ஆசிகளைப் பெறுவதும் இந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளிக்கும்.                                  

காதல் / குடும்ப உறவு :

உறவுகளில் கடந்த காலத்தில் இருந்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஒரு சிலர் மனதில் காதல் அரும்பு மலரும் என்றாலும் காதலில் வெற்றி பெற எதிர்பாலினத்தவருடன் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். இந்த சூழ்நிலையைக்  கையாள பொறுமை அவசியம். உறவுகளில் சண்டை மற்றும் சச்சரவுகளை தவிர்க்க நண்பர்களின் ஆதரவை நாடுங்கள். ஒரு சிலரின் காதல் உறவு திருமண உறவாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.உறவில் பிணைப்பு அதிகரித்துக் கொள்ள உங்கள் துணையுடன் தரமான நேரத்தை ஒன்றாக செலவு செய்யுங்கள் கணவன் மனைவி உறவில் புரிந்துணர்வு அதிகரிக்கும். பரஸ்பரம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மூலமும் மகிழ்ச்சி காண்பீர்கள்.   இந்த மாதம் உங்கள் குழந்தை மற்றும் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். விஷ்ணுவை தவறாமல் வழிபடுவது உறவுகளை வளர்க்க உதவும்.

   திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் நீங்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் நிர்வாக நிபுணத்துவ செயல்பாட்டின்  மூலம் திடீர் பொருளாதார வளர்ச்சி காண்பீர்கள். தொழில் நிமித்தமாக நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானம் பெருகும். உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரும். பணத்தை பெருக்கும் புதிய வழிகளை நீங்கள்  இந்த மாதம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வீடு, நிலம், மற்றும் சொத்துக்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளின் மூலம் நீங்கள் கணிசமான ஆதாயங்களைப் பெறுவீர்கள்.  கோயில் கட்டுமானப் பணிகளுக்கு நன்கொடை வழங்க வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். மேலும், திருவிழாக்கள் போன்ற கோயில்கள் தொடர்பான விசேஷங்களில் நீங்கள் பங்கு பெறலாம்.  மேலும் உங்கள் சேமிப்பை மக்களுக்குச் சேவை செய்யவும், நிதி வளர்ச்சியில் உள்ள சிக்கல்களைக் குறைக்கவும், பெரிய வளர்ச்சியை வழங்கவும் பயன்படுத்தலாம்.  நீங்கள் உள்ளூர் செயல்பாடுகளில் பங்கேற்கவும், தலைமைப் பாத்திரங்களைச் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன, இது உங்களுக்கு சமூகத்தில் ஒரு பெயரையும் புகழையும் தரலாம் மற்றும் உங்கள் நிதி வளர்ச்சிக்கு உதவும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.     

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம் / தொழில் :

ஏப்ரல் மாதம் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க மற்றும் வளர குழு உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது சாத்தியமாகும். உங்கள் சூழலில் பெயரையும் புகழையும் தரக்கூடிய வேலையில் சாதிக்க நிர்வாகமும் உயரதிகாரிகளும் உங்களை ஆதரிக்கலாம். நிர்வாகம் தொடர்பான புதிய திட்டங்கள் வெற்றியை அளிக்கும் மற்றும் உங்கள் தொழிலை கணிசமாக வளர்க்க உதவும். பிற மாநிலங்கள் அல்லது நாடுகள் போன்ற புதிய இடங்களுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளன, இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நஷ்டத்தைத் தவிர்க்க வியாபார நடவடிக்கைகளில் முதலீடுகளைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், எந்தவொரு தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும் கடன்களைத் தொடராமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக, உங்கள் வணிக வளர்ச்சிக்கு மத்தியஸ்தர் போன்ற முதலீடு அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முதலீடு அல்லாத தொழில்கள் மூலம் லாபம் பெற முடியும்.

        உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற :  புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் தொடை, நரம்பு, தோள்பட்டை, கழுத்து மற்றும் இடுப்பு சம்பந்தமான உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்தப் பகுதிகளில் பிரச்சனைகளை எதிர்கொண்டால் நீங்கள் சிகிச்சைக்கு செல்லலாம். இருப்பினும், இந்தப் பகுதிகளில் உங்களுக்கு இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், இந்தப் பகுதிகளில் தற்காலிகமாக புதிய உடல்நலப் பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் அநாதை குழந்தைகளுக்கு உதவுவதன் மூலம் உங்கள் உடல் நலப் பிரச்சினைகள் தீர்ந்து நீங்கள்  நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் உங்கள் பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்கும். நீங்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி பெற்றுவீர்கள். உங்கள் இடைவிடாத முயற்சிகளின் மூலம் உங்கள் இலக்கை அடைவீர்கள். உங்கள் சூழலில் நீங்கள் நல்ல பெயரையும் புகழையும் பெறுவீர்கள். நீங்கள் கல்வியில் முன்னேற்ற குருமார்களின் ஆசிகள் உங்களுக்கு துணையாக இருக்கும்.  மேல்படிப்பிற்காக நீங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்கள் மூலம் நீங்க அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.  நண்பர்களிடம் இடைவெளிவிட்டுப் பழகுங்கள். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து கல்வி கற்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கடின உழைப்பு உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 3,4,7,9,10,18,19,20,23,24,25,30

அசுப தேதிகள் : 1,2,11,12,13,16,17,26,27,28,29