இன்றைக்கும் கிராமப்புறங்களில் மட்டும் இன்றி நகரத்திலும் நம் வீட்டு வாசலில் அல்லது வீட்டிற்கு மிக அருகில் வந்து காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதை நாம் கேட்கலாம்.
தமிழ் பஞ்சாங்கங்களில் வரும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் சகுனம் சொல்லும் ஐந்து பறவைகளில் காகமும் ஒன்று.
காக்கை பற்றி சகுன சாஸ்திரங்கள் பலவாறு கூறுகின்றன. பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும். பயணிக்கும் அன்பரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு ஊட்டினால் நாம் மேற்கொள்ளும் பயணம் இனிதாக அமையும்.
ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம்.காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம் பஞ்சம், வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும் இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும். ஒருவரின் மேலே படும் காகம் அவருக்கு உடல் உபாதை நேருதலை குறிக்கும்.காகங்கள் கூட்டமாக ஒடு ஊரின் மேலாகப் பறப்பது அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.
ஒரு கருப்பு காகம் (அண்டங்காக்கை) தனிப்பட்ட முறையில் நமது வீடுகளில் அமர்ந்து கரைகிறது என்று சொன்னால் அது மிக தீய சகுனம் ஆகும். அதேபோல் ஒரு மனிதனின் தலை மேல் ஒரு காக்கை தொட்டுவிட்டால் அதுவும் தீய சகுனம் நமக்கோ நமது குடும்பத்தாருக்கும் ஏதோ ஒரு ஆபத்து நிகழ்வதற்கான அறிகுறியாகும். அவ்வாறு மேலே பட்டால் உடனே தலைக்கு குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்க வசதி இல்லை எனில் தலையில் மஞ்சள் நீரை தெளித்துக் கொள்ள வேண்டும்.
சாதாரண காக்கைக்கும் அண்டங்காக்கக்கும் வித்தியாசம் நன்றாக தெரியும். சாதாரண காக்கை கருப்பாக இருந்தாலும் அதன் கழுத்து சிறிது சாம்பல் நிறத்தில் இருக்கும். அண்டங்காக்கை முழுவதும் கருப்பாக இருக்கும். அண்டங்காக்கை அவ்வளவு சுலபமாக எல்லோருடைய கண்களிலும் தெரிவது கிடையாது. ஆசியா கண்டம் முழுவதும் பரவலாக அண்டங்காக்கை இருந்தாலும், நம்மால் எளிதில் அதனை காண முடிவது கிடையாது.
எப்போதோ என்றாவது ஒரு நாள் நம் கண்களுக்கு தெரியும் இந்த அண்டங்காக்கை, நமக்கு பேரதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது. காக்கை வகைகளில் வித்தியாசமாக இருக்கக் கூடிய இந்த அண்டங்காக்கைக்கும் அதிர்ஷ்ட சகுன பலன்கள் உண்டு. பொதுவாகவே அண்டங்காக்கை துரதிஷ்டம் தரும் என்று தான் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அண்டங்காக்கை சொல்லும் அதிர்ஷ்ட பலன் என்ன? என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ள போகிறோம்.
அண்டங்காக்கையை தனியாக அதாவது ஒரே ஒரு காக்கையை பார்த்தால் துன்பம் நேரும் என்பார்கள். அதையே ஜோடியாக பார்த்தால் நன்மை நடக்கும் என்பார்கள். சகுன சாஸ்திரத்தின் படி அண்டங்காக்கை தலையில் தட்டினாலோ, கொத்தினாலோ பெரிய துன்பம் ஒன்று துரத்த போகிறது என்று அர்த்தம். ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் கிளம்பும் பொழுது திடீரென ஒரு அண்டங்காக்கை குறுக்கே பறந்தால், செல்லும் காரியம் வெற்றி அடையாது என்பார்கள். இப்படி அண்டங்காக்கையை பற்றி அபசகுணமாக நிறைய விஷயங்கள் உள்ளன. சகுன சாஸ்திரத்தின் படி அண்டங்காக்கை அபசகுணம் என்றாலும், அது சுப சகுனமாகவும் பல சமயங்களில் கருதப்படுகிறது.
அண்டங்காக்கையை காலையிலேயே நீங்கள் பார்க்க நேர்ந்தால், அன்றைய நாள் புதிதாக சில நபர்களுடன் உரையாட வேண்டி வரும். புதிய நண்பர்களும், புதிய உறவுகளும் கிடைப்பார்கள். அண்டங்காக்கை கரையாமல் ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருப்பதை, நீங்கள் அதிகாலையிலேயே பார்த்தால் அது சுப சகுனமாக அமையும். இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு நல்ல விஷயங்கள் கேட்கும் படியாக அமையும். அண்டங்காக்கை தலையை சுற்றி வட்டம் அடித்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். வஸ்திரங்கள், நகை, ஆபரணங்கள், பணம், செல்வம் என்று ஏதாவது ஒன்று சேரப் போகிறது என்று அர்த்தம்.
அண்டங்காக்கைக்கு உணவு வைப்பது நற்பலன்களை கொடுக்கும். நீங்கள் வைத்த உணவை அண்டங்காக்கை உங்கள் கண் முன்னே எடுத்து விட்டால், உங்களை பிடித்துள்ள தோஷங்கள் அனைத்தும் விலகுவதாக நீங்கள் நம்பலாம். பித்ரு தோஷம் முதலான எல்லா வகையான தோஷங்களும் போக்கக் கூடியது இந்த அண்டங்காக்கை. அண்டங்காக்கை வைக்கும் உணவை, எடுத்து சாப்பிட்டால் அதை விட அதிர்ஷ்டம் ஏதுமில்லை எனலாம். அண்டங்காக்கையை விரட்ட கூடாது. அதே போல அண்டங்காக்கை வீட்டிற்குள் நுழைய நினைத்தால் அது பெருந்துன்பத்தை கொடுக்கும்.
அண்டங்காக்கையை தினமும் நீங்கள் சந்தித்தால், அது நீங்கள் வைக்கும் உணைவை உண்டால் கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என்று கூறுவார்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025