நாளை 20/08/2025 அன்று ஆவணி மாத தேய்பிறை துவாதசி ஆகும். அன்றைய தினம் விஷ்ணுவை வழிபட்டால் புண்ணியம் பெருகும். குறிப்பாக புத்திர பாக்கியம் கிட்டும்.
ஆவணி மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் துவாதசி திதி மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்ததாகும். ஆவணி மாத தேய்பிறை துவாதசி நாளில், விரதம் இருப்பது செல்வத்தையும், ஞானத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில், மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. மேலும், இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் மிகவும் பலன் தரும்.
விஷ்ணு பக்தர்களுக்கு இந்த நாள் மிகவும் புனிதமானது. ஏனெனில் துவாதசி என்பது ஏகாதசி விரதத்தின் நிறைவு நாள்.ஏகாதசியில் உபவாசம் இருந்தவர்கள் துவாதசியில் பாரணை (உபவாசம் முடித்தல்) செய்வது அவசியம்.எனவே இது விஷ்ணுவின் அருளைப் பெற சிறந்த நாள் எனக் கருதப்படுகிறது.
துவாதசி நாளில் விஷ்ணுவுக்காக நிவேதனம் செய்து, பிராமணர்களுக்கு உணவு அளித்தல் மிகப் புண்ணியம்.அன்னதானம், ஆடைகள், நெய் தீபம் தானம் தருவது நல்ல பலன் தரும். இந்த நாளில் தவறாமல் துளசி பூஜை மேற்கொள்ள வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது நாராயண ஸ்தோத்ரம் பாராயணம் செய்ய வேண்டும். விஷ்ணு கோவில்களில் துவாதசி தீபம் ஏற்றுதல் வழக்கம்.
ஒரு காலத்தில் மண்டாதா என்ற மன்னன் இருந்தான். அவன் மிகப் பெரிய தர்மவான், விஷ்ணு பக்தன். அவன் எப்போதும் விஷ்ணுவை வணங்கிக் கொண்டே இருந்தாலும், அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை மனதில் துயரம் மிகுந்ததால், அவன் வசிஷ்ட முனிவரிடம் சென்று தனது குறைகளை கூறி வழி கேட்டான்:
“ஸ்வாமி! என்னுடைய பாபங்களை நீக்கி சந்தான பாக்கியம் பெற என்ன வழி?”
வசிஷ்டர் கூறினார்:“மன்னா! நீ ஏகாதசி விரதம் செய்து, துவாதசியில் பரணை செய்து விஷ்ணுவைத் தொழு. அதுவே உன் பாவங்களை நீக்கி புண்ணியத்தை தரும்.”மன்னன் அந்த வழிமுறையைப் பின்பற்றினான். ஏகாதசியில் உபவாசம் இருந்து, துவாதசியில் பாரணை செய்து, விஷ்ணுவை ஆராதித்தான். அதன் பலனாக அவனுக்கு சந்தானம் கிடைத்தது, மேலும் அவன் வம்சம் பெருகியது.
பத்மபுராணத்தில் விஷ்ணு சொல்வது:
“ஏகாதசியில் உபவாசம் செய்தாலும், துவாதசியில் பாரணை செய்யாவிட்டால் அந்த விரதத்தின் புண்ணியம் குறைந்து விடும். எனவே துவாதசி பாரணை மிக அவசியம்.”
இந்த நாளில் செய்ய வேண்டியவை (புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை)
துளசி மற்றும் நெய் தீபம் வைத்து விஷ்ணு பூஜை
பிராமணர்களுக்கு அன்னதானம்
விஷ்ணு நாமங்களை ஜபம் செய்தல்
சரியான காலத்தில் பாரணை செய்தல்
சனி பகவான்
ஆவணி மாத தேய்பிறை துவாதசி என்பது சனிபகவானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் பெரும்பாலும் பாவநிவர்த்தி, ஆரோக்கியம், சந்தோஷம், கடன்நிவர்த்தி மற்றும் மன அமைதிக்காக நடத்தப்படுகின்றன.
ஏன் இந்நாள் முக்கியம்?
துவாதசி என்பது விஷ்ணுவுக்குப் பிரியமான திதி.ஆவணி மாதம் சனிபகவானுக்கு முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் செய்த பரிகாரங்கள் புண்ணியம் சேர்க்கும் மற்றும் பாவநிவர்த்தி தரும் என்று நம்பப்படுகிறது.
பரிகாரங்கள்
பசு தானம் அல்லது பசுவிற்கு உணவு: முடிந்தால் பசுவிற்கு பசும்புல், வாழைப்பழம் கொடுக்கலாம்.
எள்ளும் தண்ணீரும் தானம்: சனிபகவானுக்கு பிடித்தது என்பதால், எள் மற்றும் தண்ணீர் தானம் சிறப்பானது.
விஷ்ணு ஆலயத்தில் அன்னதானம்: யாருக்காவது உணவு வழங்கலாம் அல்லது ஆலயத்தில் வழங்கலாம்.
ஹோமம் மற்றும் ஜபம் :சுதர்சன ஹோமம்: சுதர்சன ஹோமம் பாவநிவர்த்திக்காகச் செய்யலாம்.
∙ மந்திர ஜபம்:
o ஓம் நமோ நாராயணாய – 108 முறை
o ஓம் சனேசாய நமஹ – 108 முறை
பெரும்பாலும் இந்த நாளில் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று விரதம் கடைபிடித்து, துளசி, பால், வெல்லம், நெய் நிவேதனம் செய்வது பாவ நிவர்த்தி தரும். குழந்தை பாக்கியம் பெற்றுத் தரும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025