Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
ஆடி மாத 2025 சடங்குகளின் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள்.
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆடி மாத சடங்குகளின் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள்

Posted DateJuly 1, 2025

தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. அவற்றுள் நான்காவது மாதமாக வருவது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதம் என்பதுடன், புண்ணிய பலன்கள் மற்றும் வேண்டிய வரங்கள் பலவற்றை பெறுவதற்குரிய மாதமாகும். ஆடி மாதத்தில் கிழமை, நட்சத்திரம், திதி என அனைத்தும் சிறப்புக்குரியதாக கருதப்படும்.  ஒவ்வொரு மாதமும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதச் சிறப்பு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஆன்மீக ரீதியாக சிறந்த மாதமாக திகழும் ஆடி மாதம்

பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்கள் தான். எல்லா மாதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள் விசேஷமான மாதங்கள்.  அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள் என்று சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். அப்படி இருக்க சிலர் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுகின்றனரே? அது ஏன் என்னும் கேள்வி எழலாம். ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம். இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதிலம் அடையும் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.

ஆடி மாதத்தின் சிறப்பை உணர்த்தும் பழமொழிகள்

ஆடிப்பட்டம் தேடி விதை:

இது ஆடி மாதத்தில் விதை விதைக்க ஏற்ற காலம் என்பதை குறிக்கிறது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு:

இது ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழாவைக் குறிக்கிறது. 

 

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்:

ஆடி மாதத்தில் வீசும் காற்றின் வேகத்தை இது குறிக்கிறது.

ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்:

இது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிக்கிறது.

ஆடி செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி:

 

இது ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதன் முக்கியத்துவத்தை குறிக்கிறது

 

ஆடி மாதம் குத்தின குத்து, ஆவணி மாதம் உளைப்பு எடுத்ததாம்:

இது ஆடி மாதத்தில் செய்யப்படும் வேலைகள் ஆவணி மாதத்தில் பலன் தரும் என்பதை குறிக்கிறது.

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி:

இது ஆடி மாதத்தில் பெண்கள் தங்கள் தாய்வீட்டிற்குச் செல்வதை குறிக்கிறது.

ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல

இது ஆடி மாதத்தில் வீசும் காற்றின் வேகத்தை விளக்குகிறது.

 

ஆடி மாத சடங்குகளின் அறிவியல் காரணங்கள்: 

∙ கூழ் ஊற்றுதல்:

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது என்பது, அம்மனின் மனம் குளிரவும், அருள் பெறவும் செய்யப்படும் ஒரு சடங்காக கருதப்படுகிறது. கூழ் என்பது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்பதால், வெப்பமான ஆடி மாதத்தில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

∙ சுப காரியங்களைத் தவிர்த்தல்:

ஆடி மாதம் தட்சிணாயன காலத்தில் தொடங்குவதால், சூரியனின் கதிர்வீச்சு மாறும் நேரம் மற்றும் இது அம்மன் தவம் செய்த மாதம் என்பதால், திருமண போன்ற சுபகாரியங்களை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது என்று கருதப்படுகிறது. மேலும், பருவமழை மாதங்களில் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்கவும் இந்த மாதத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ப்பார்கள்.

∙ சிறப்பு பூஜைகள்:

ஆடி மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஏனென்றால், ஆடி மாதத்தில் அம்மன் தவம் செய்ததாக நம்பப்படுவதால், இந்த நாட்களில் அம்மனை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

∙ பிரணாய வாயு:

ஆடி மாதத்தில் பிராணவாயு அதிகமாக கிடைக்கும் என்று கருதப்படுகிறது, இது உடலுக்கும் மனதிற்கும் நன்மை பயக்கும்.

∙ இயற்கை மாற்றங்கள்:

ஆடி மாதம் தட்சிணாயன காலத்தில் தொடங்குவதால், சூரியனின் கதிர்வீச்சு மாறும் நேரம் மற்றும் அம்மன் தவம் செய்த மாதம் என்பதால், இயற்கையின் மாற்றங்களை மனதில் கொண்டு இந்த சடங்குகள் செய்யப்படுகின்றன.