ஆடி மாதம் வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். ஆடி மாதம் என்றால் அம்மன் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். அதனைப் போலவே ஆடி மாதம் குல தெய்வ வழிபாட்டிற்கும் சிறந்த மாதம் ஆகும். பெரும்பாலான குடும்பங்களில் ஆடி மாதம் குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நாம் அனைவரும் குல தெய்வம் பற்றி அறிந்து இருப்போம். ஆடி மாதம் குல தெய்வ வழிபாடு செய்தால், குடும்பத்தின் நலம், வளம், பாதுகாப்பு பெருகி, எதிர்காலம் சிறப்பாக அமையும். இது ஒரு மரபு கடமை என்றும், தெய்வ அருள் பெறும் வழியாகவும் கருதப்படுகிறது. எனவே தான் ஆடி மாதம் (ஜூலை-ஆகஸ்ட்) தமிழ் மக்களின் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பலர் குல தெய்வங்களை வழிபடுவது ஒரு பாரம்பரிய பழக்கம் ஆகும். இதன் முக்கிய காரணங்கள் சில இதோ:
குல தெய்வம் என்பது குடும்பத்தின் கடவுள். அந்த குலத்தின் வளம், நலம், எதிர்காலம் அனைத்தும் அவர்களின் அருள் மூலம் நடக்கும் என நம்பப்படுகிறது. ஆகவே, அந்த தெய்வத்தை ஆடி மாதம் வழிபட்டு, குடும்பத்துக்கு அருள் பெற வேண்டும்.
ஆடி மாதம் குண்டலி நிலவும் காலம். இந்த மாதத்தில் நற்பலன் பெறும் பல வழிபாடுகள் சிறப்பாக இருக்கும். அவற்றுள் குல தெய்வ வழிபாடு சிறப்பாக கருதப்படுகிறது. குண்டலி நிலவும் காலம் என்றால், ஒரு நபரின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள், நட்சத்திரங்கள், மற்றும் இராசிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் தனி கால அவகாசத்தை குறிக்கும். அதாவது, பிறந்த நேரத்தில் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலைகளின் அடிப்படையில், அந்த நபரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் அதிரடியான மாற்றங்கள், பாதிப்புகள், சாதனைகள் அல்லது சவால்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த காலம் பொதுவாக ஒரு கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் அல்லது அதற்குரிய பதவியை (தசா, அந்தர் தசா) போன்றவை) குறிக்கிறது.
குடும்ப மரபுகளை பாதுகாப்பது முக்கியம். அந்த மரபு, கடவுளை வழிபடும் வழக்கத்தில் நீடிக்கிறது. அதனால், குலத்தினரை இணைத்து, உறவுகளை மேலும் வலுப்படுத்த குல தெய்வ வழிபாடு பெரிதும் உதவுகிறது.
குடும்பத்தில் காணப்படும் சிக்கல்கள் நீங்கும்.
இந்த மாதம் குல தெய்வ வழிபாடு மேற்கொள்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள உடல்நிலை, பொருளாதாரம் அல்லது உறவுகளில் வரும் பிரச்சனைகளை தெய்வ வழிபாடு மூலம் குறைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
சுப காரியங்களுக்கு உதவும்
திருமணம், கல்வி, வேலை, தொழில் தொடக்கம் போன்ற முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளில் குல தெய்வத்தின் அருள் அவசியம். எனவே இந்த மாதம் குல தெய்வ வழிபாடு மேற்கொண்டு நன்மை பெறலாம்.
குல தெய்வத்திற்கு பொங்கல் வைப்பது
குல தெய்வத்திற்கு பெர்ம்பாலானோர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள் குல தெய்வத்திற்கு பொங்கல் வைப்பது குடும்பத்திற்கான பாதுகாப்பு, செல்வம் மற்றும் நன்மைகள் விரும்பும் ஆன்மீக மரபின் பகுதியாகும். இது குடும்பத்தின் ஒற்றுமையையும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் உறுதி செய்யும் வழியாகும். இது அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது.
குல தெய்வத்திற்கு பொங்கல் வைப்பதற்கான காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்
தமிழர் பண்பாட்டிலும், வீட்டுத் தெய்வ வழிபாட்டிலும் குல தெய்வத்திற்கு பொங்கல் வைப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. குல தெய்வம் என்பது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கும், செல்வம், ஆரோக்கியம், மற்றும் நலங்களை வழங்குவதற்கும் பொறுப்பான தெய்வமாக கருதப்படுகிறார். பொங்கல் வைப்பதன் மூலம் அந்த தெய்வத்திற்கு நன்றி செலுத்தி, குடும்பத்தில் ஒற்றுமையும் சமாதானமும் நிலவுவதற்கு வழி வகைக்கிறது. குடும்பத்தின் வரலாறும் மரபும் குல தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நிலைத்து நிற்கிறது. . பொங்கல் வைப்பது அந்த மரபு வழிமுறையை பின்பற்றுவதற்கான ஒரு முக்கிய அங்கமாகும். மேலும் குட்டும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று கூடி இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை ஓங்கி நிற்கும். மேலும் தெய்வங்கள் மகிழ அவர்களுக்கு பிடித்தமான சிறப்பு உணவுகள், பொங்கல் போன்றவற்றை செய்து அர்ச்சனை செய்து அர்ப்பணிப்பது வழக்கம்.
குல தெய்வம் வழியாக முன்னோர்களின் ஆசி மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதனால், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களின் ஆசீர்வாதத்தைக் கோரும் விதமாகவும் பொங்கல் வைப்பது நடத்தப்படுகிறது.
மரபு வழிபாடு
சிலர் குடும்பங்களில் பொங்கல் வைக்கும் வழக்கம் இருக்காது. அவர்கள் தகங்கள் குல வழக்கப்படி குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்
ஆனால் குல தெய்வ கோவிலுக்கு வெறும் கையோடு செல்வதோ அல்லது வெறுமனே சென்று வருவதோ கூடாது. இயன்ற அளவு கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி அளிக்கலாம். அர்ச்சனை பூஜைகளை மேற்கொள்ளலாம். வஸ்திரம் வாங்கி அளிக்கலாம்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025