Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
நாளைய தின நட்சத்திரமும் இறை வழிபாடும் - Astroved Tamil Blogs
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நாளைய தின நட்சத்திரமும் இறை வழிபாடும்.

Posted DateJune 21, 2025

இந்த பூமியில் நாம் வாழும் ஓவ்வொரு நாளும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் என்றே கூற வேண்டும். மேலும் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்து இருப்போம். எனவே ஒவ்வொரு மாதமும் நமது நட்சத்திர நாள் வரும்.  உதாரணமாக நாம் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் ஒவ்வொரு மாதமும் வரும் அசுவினி நட்சத்திர நாள்  நமது பிறந்த நட்சத்திர  நாள் என்று கூறலாம். இந்த நாளில் நாம் அவசியம் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

பொதுவான வழிபாடு

அந்த வகையில் நாளைய நட்சத்திரம் (22.06.2025) பரணி ஆகும். நாளை மாலை வரை பரணி நட்சத்திரம் உள்ளது. எனவே பரணி நட்சத்திரக்  காரர்கள் நாளை ஆலயம் சென்று வழிபட வேண்டும். நம்மால் தினமும் ஆலயம் செல்ல இயலாவிட்டாலும் நமது நட்சத்திர நாள் அன்று சென்று இறைவனை வழிபடுவது சிறப்பு. அவ்வாறு செல்லும் போது முதலில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். குலதெய்வத்தை வணங்க வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் இருந்தால் அதனை வணங்க  வேண்டும். இது பொதுவான வழிபாடு ஆகும்.

துர்கை வழிபாடு

பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக துர்கை தேவி கருதப்படுகிறார். மேலும், பரணி நட்சத்திரத்திற்கு அதிபதியான சுக்கிரன், களத்திர காரகன் என்பதால், துர்கை அல்லது காமாட்சி பரணி நட்சத்திரத்திற்கு அதி தேவதையாக வழிபடப்படுகிறார்கள்.பரணி நட்சத்திரத்தினர் தங்கள் நட்சத்திர நாளில் துர்கை அம்மனை வழிபட்டால், எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ராகு கால வழிபாடு

பொதுவாக துர்கை தேவிக்கு ராகு கால வழிபாடு ஏற்புடையதாக இருக்கும். நாளை ஞாயிற்றுக் கிழமை.மாலை நேரத்தில் ராகு காலம் வரும். அந்த நேரத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்வில் மங்கலங்கள் கூடும்.

அஷ்டபுஜ துர்கை

பரணி நட்சத்திரக் காரர்கள் அஷ்டபுஜ துர்கையை வழிபடுவது சிறந்த பலனை ஏற்படுத்தித் தரும். நவகிரகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் இவளை வணங்குவதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும்.  வாழ்வில் அனைத்து நலன்களும் கிட்டும்.

முருகர் வழிபாடு

நாளை மாலை வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை வருவதால், பரணி நட்சத்திரக்காரர்கள் அன்றைய தினம் முருகனை வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு அதிபதியாக முருகப்பெருமான் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வழிபடுவது மிகவும் சிறந்தது. குறிப்பாக, பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வழிபடுவது சிறப்பு. முருகனை வழிபட்டால், வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறலாம். பரணி நட்சத்திரக்காரர்கள் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. அங்கு சென்று முருகனை வழிபட்டால், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும் மற்றும் சுபிட்சம் உண்டாகும். பரணி நட்சத்திரக்காரர்கள், பழமுதிர்சோலை மட்டுமின்றி, பிற முருகன் கோவில்களிலும் வழிபடலாம். குறிப்பாக, வடபழனி முருகன் கோவிலிலும் வழிபடலாம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கான வழிபாடு

நாளை மாலை கிருத்திகை நட்சத்திரம் என்பதால், கிருத்திகை நட்சத்திரக்காரர்களும்  முருகன் வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். பரணி நட்சத்திரக்காரர்கள் நாளை காலை முருகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மாலை சென்று வழிபடுவது நல்லது. கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி “சுப்பிரமண்யாய நமஹ” என்ற மந்திரத்தை கூற வேண்டும்.