Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்?

Posted DateDecember 24, 2024

பழைய வருடம் கழிந்து புது வருடம் 2025 தொடங்கப் போகிறது. இந்த வருடமும் நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் விரும்புவோம். வாழ்வில் நலமும் வளமும் பெற நமது முயற்சிகள் தேவை என்றாலும் இறை அருளும் மிகவும் அவசியம். அந்த வகையில் இந்த வருடம் ஒவ்வொரு ராசியினரும் எந்த தெய்வத்தை வணங்கினால் வாழ்வில் நன்மைகளைப் பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

மேஷம் : இந்த ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாய் கிரகத்தை ஆளும் கிரகம் முருகர். எனவே இவர்கள் முருகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. பிரதி செவ்வாய் முருகரை வழிபடலாம். மேலும் இந்த ராசியில் சூரியன் உச்சமாகிறார். இவர்களுக்கு ஐந்தாமிடமாக சிம்மம் ராசி வருகிறது. அதன் அதிபதி சூரியன் ஆவார். இவர்கள் சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக மலை மீது இருக்கும் சிவனை வழிபாடு செய்யலாம்.

ரிஷபம் :  இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார்.  இவர்கள் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். அஷ்ட லக்ஷ்மிகளை இவர்கள் வணங்குவதன் மூலம் ஐஸ்வர்யங்களைப் பெறலாம்.  பிரதி வெள்ளிக்கிழமை அஷ்ட லக்ஷ்மியை வணங்கி வர இவர்கள் வாழ்வில் படிப்படியாக உயரலாம். செல்வ வளத்தைப் பெறலாம். தீபாவளி சமயத்தில் வரும்  அமாவசை திதியில் லட்சுமி பூஜை செய்வது ஐதீகம். இந்நாளில் லெட்சுமி தேவியை மனமுருகி வேண்டி விரதமிருந்து அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும்.இவர்களுக்கு ஐந்தாம் அதிபதி கன்னி. எனவே இவர்கள் திருமாலுடன் கூடிய லக்ஷ்மி தேவியை வணங்குவது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.

மிதுனம்:   இவர்களின் ராசி அதிபதி புதன் ஆவார். எனவே இவர்கள் விஷ்ணுவை ஸ்ரீமன் நாராயணன் வடிவில் வணங்கலாம். விஷ்ணுவின் தசாவதரங்களையும் இவர்கள் வணங்குவது சிறப்பு. இவர்களுக்கு ஐந்தாமிடமாக துலாம் வருகிறது. இவர்கள் லக்ஷ்மி நாராயணனை வழிபடுவது சிறப்பு. பௌர்ணமி அன்று சத்ய நாராயணன் பூஜை செய்வதன் மூலம் இவர்கள் வாழ்வில் மங்களம் பெருகும். ஐஸ்வரியம் பெருகும்.

 கடகம் : இவர்களின் ராசி அதிபதி சந்திரன் ஆவார். இவர்களுக்கு பெண்  தெய்வங்களின் ஆற்றல் எளிதில் கிட்டும். எனவே இவர்களுக்கு  அம்மன் வழிபாடு சிறப்பை அளிக்கும். குறிப்பாக   வெள்ளிக்கிழமை அன்று வீட்டிலோ அல்லது கோவில்களிலோ அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்வது நன்மை அளிக்கும்.  ஆடி, தை போன்ற சிறப்பு  வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து முறையான விரதத்தை கடைபிடிப்பது சகல நன்மைகளையும் அருளும்.

சிம்மம் : இந்த ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இவர்கள் சிவனை வழிபடுவது சாலச் சிறந்தது. மலை மீது உள்ள சிவபெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளமும் அமைதியும் கிட்டும். பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு  சென்று வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம். மகா சிவராத்திரி அன்று பூஜைகளில் கலந்து கொள்வது நன்மை அளிக்கும்.

 கன்னி: இவர்களின் ராசி அதிபதி புதன் ஆவார். எனவே இவர்கள் விஷ்ணுவை ஸ்ரீமன் நாராயணன் வடிவில் வணங்கலாம். விஷ்ணுவின் தசாவதரங்களையும் இவர்கள் வணங்குவது சிறப்பு. இவர்கள் லக்ஷ்மி நாராயணனை வழிபடுவது சிறப்பு. பௌர்ணமி அன்று சத்ய நாராயணன் பூஜை செய்வதன் மூலம் இவர்கள் வாழ்வில் மங்களம் பெருகும். ஐஸ்வரியம் பெருகும். இவர்கள் எல்லை தெய்வத்தையும் வணங்கலாம்.

துலாம்: இவர்களின் ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். இவர்களுக்கு ஐந்தாம் இடத்தின் அதிபதியாக வருவது சனி ஆகும். எனவே இவர்கள் லட்சுமி தேவியை வணங்குவதும் காவல் தெய்வங்களை வணங்குவதும் நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வாழ்வில் எதிர்கொள்ளும் எதையும் வலிமையுடன் சமாளிக்கலாம்.

 விருச்சிகம்: இந்த ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாய் கிரகத்தை ஆளும் கிரகம் முருகர். எனவே இவர்கள் முருகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. பிரதி செவ்வாய் முருகரை வழிபடலாம். இவர்கள் சிவ பெருமானையும் வழிபடுவது சிறப்பு. பிரதோஷ வேளையில் ஆலயம் சென்று சிவனையும் நந்தியையும் வழிபடுவது வாழ்வில் நன்மை  சேர்க்கும்.

தனுசு: இவர்களின் ராசி அதிபதி குரு ஆவார். இவர்கள்  தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தெய்வமான சிவபெருமானின் 64 அம்சங்களுள் ஒன்றாக விளங்குவது தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் குருவிற்கெல்லாம் குருவாக வணங்கப் படுபவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு குருவின் பார்வையை உங்கள் மீது அதிகரித்து பல நன்மைகளை அருளும்.
குருவிற்கு உகந்த நாளான  வியாழக்கிழமையே தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்கு சிறப்பு மிகுந்த நாளாகும். இந்நாளில் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்

மகரம்: இவர்களின் அதிபதி சனி ஆவார். இவர்கள் சனிக்கிழமை அன்று ஆலயம் சென்று ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. மேலும் இவர்கள் காவல் தெய்வங்கள் அல்லது எல்லை தெய்வத்தை வணங்குவது சிறப்பை அளிக்கும்.

கும்பம்: இவர்களின் அதிபதி சனி ஆவார். இவர்கள் சனிக்கிழமை அன்று ஆலயம் சென்று ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. மேலும் இவர்கள் காவல் தெய்வங்கள் அல்லது எல்லை தெய்வத்தை வணங்குவது சிறப்பை அளிக்கும். இவர்கள் சிவ பெருமானையும் வணங்குவது வாழ்வில் மங்களத்தை அருளும்.

 மீனம் : இவர்களின் ராசி அதிபதி குரு ஆவார். இவர்கள்  தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தெய்வமான சிவபெருமானின் 64 அம்சங்களுள் ஒன்றாக விளங்குவது தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் குருவிற்கெல்லாம் குருவாக வணங்கப் படுபவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு குருவின் பார்வையை உங்கள் மீது அதிகரித்து பல நன்மைகளை அருளும்.
குருவிற்கு உகந்த நாளான  வியாழக்கிழமையே தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்கு சிறப்பு மிகுந்த நாளாகும். இந்நாளில் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்