Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
Tiruvannamalai girivalam dates 2024 : 2024 பெளர்ணமி நாட்களும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நேரமும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

2024 பெளர்ணமி நாட்களும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நேரமும்

Posted DateJanuary 2, 2024

பௌர்ணமி என்பது முழு நிலவு வானில் ஒளிரும் நாள் ஆகும். இது  ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் வரும் மாதாந்திர பண்டிகையாகும், எனவே பௌர்ணமி  ஒரு வருடத்தில் 12 முறையும், கூடுதல் மாதங்களில் 13 முறையும் கூட ஏற்படலாம். பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி நம் உள்ளும் புறமும்  ஒளிர பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்கிறோம்.

பௌர்ணமி அன்று எண்ணற்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகும். தைப்பூசம், மாசி மகம், சித்ரா பெளர்ணமி, திருக்கார்த்திகை என ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.  சில பிரபலமான மற்றும் முக்கியமான பௌர்ணமி  திதிகள் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குரு பூர்ணிமா, வியாஸ் பூர்ணிமா, ஷரத் பூர்ணிமா, ரக்ஷா பந்தன், ஸ்ரீ பைரவ ஜெயந்தி, இந்தியாவின் மிகவும் பிரபலமான வண்ணமயமான பண்டிகையான ஹோலியும்  முழு நிலவு நாளில் வருகிறது.


சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் ஆலய தரிசனம் செய்வது, கோபுர தரிசனம் செய்வது, ஸ்ரீ சத்ய நாராயணா பூஜையில் பங்கு பெறுதல், காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல், சிவபெருமானை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது  மற்றும் மகான்களின் தரிசனம் சிறப்பான பலன்களை தரும். பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது.  

2024 பெளர்ணமி நாட்களும், நேரமும் :

மாதம்ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம்கிரிவல நேரம்
ஜனவரி25 வியாழன்தை 11ஜனவரி 24ம் தேதி இரவு 10.44 முதல் ஜனவரி 25ம் தேதி இரவு 11.56 வரை
பிப்ரவரி24 சனிமாசி 12பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 முதல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.51 வரை
மார்ச்24 ஞாயிறுபங்குனி 11காலை 11.17 முதல் மார்ச் 25 ம் தேதி பகல் 01.16 வரை
ஏப்ரல்23 செவ்வாய்சித்திரை 10காலை 04.21 முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 05.54 வரை
மே23 வியாழன்வைகாசி 10மே 22ம் தேதி இரவு 07.14 முதல் மே 23ம் தேதி இரவு 07.48 வரை
ஜூன்21 வெள்ளிஆனி 07காலை 07.45 முதல் ஜூன் 22ம் தேதி காலை 07.19ம் தேதி வரை
ஜூலை21 ஞாயிறுஆடி 05ஜூலை 20ம் தேதி மாலை 06.10 முதல் ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை
ஆகஸ்ட்19 திங்கள்ஆவணி 03அதிகாலை 03.07 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை
செப்டம்பர்17 செவ்வாய்புரட்டாசி 01காலை 11.22 முதல் செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 வரை
அக்டோபர்17 வியாழன்புரட்டாசி 31அக்டோபர் 16ம் தேதி இரவு 07.56 முதல் அக்டோபர் 17ம் தேதி மாலை 05.25 வரை
நவம்பர்15 வெள்ளிஐப்பசி 29அதிகாலை 03.53 முதல் நவம்பர் 16ம் தேதி அதிகாலை 03.42 வரை
டிசம்பர்15 ஞாயிறுகார்த்திகை 30டிசம்பர் 14ம் தேதி மாலை 04.17 முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை 03.13 வரை