Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
சித்தர் என்பவர் யார்? - 18 சித்தர்களின் அருளை பெற எளிய மந்திரம் இதோ!
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சித்தர் என்பவர் யார்? – 18 சித்தர்களின் அருளை பெற எளிய மந்திரம் இதோ!

Posted DateJanuary 25, 2024

பழங்கால யோகிகளின் அசாதாரண வாழ்க்கை முறைகள் மற்றும் தியானத்தின் மூலம் உயர்ந்த நனவு நிலைகளை அவர்கள் அடைந்ததைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். எனினும் நாம் சித்தர்கள் பற்றி குறைவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். சித்தர்கள் என்பவர்கள் யார். சித்தி நிலை பெற்றவர்களே சித்தர்கள். அவர்கள் அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் .அவர்கள் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள்.  உடலை ஒளியாக மாற்றுவதற்கான ஆன்மீக நுட்பங்களை அறிந்தவர்கள்.  

சித்தர்கள் ஆன்மிகம். மருத்துவம் மற்றும் மனித உடலை முழுவதுமாக ஒளிரும், தெய்வீக ஆற்றலாக மாற்றுவதற்கு பிராணயாமா (அல்லது யோக சுவாச பயிற்சிகள்) அறிந்தவர்கள் மற்றும் மூலிகை தயாரிப்புகள் போன்ற பல்வேறு யோக நுட்பங்களைப் பயன்படுத்துபவர்கள். சித்தர்கள் 1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா என்ற அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்.

தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.

18 சித்தர்களின் அருளை பெற எளிய மந்திரம் இதோ!

ஓம் குருவே சரணம்

ஓம் குருவே சரணம்

ஓம் குருவே சரணம்

ஓம் ஸ்ரீ அகத்திய சித்த குரு சாமியே,

 உன் திருவடி சரணம்! சரணம்!

இந்த மந்திரத்தை அவரவர்களுடைய சித்தர் பெயரை மட்டும் மாற்றி உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களின் சித்தர் திருமூலர் என்றால் அகத்திய என்ற வார்த்தைக்கு பதிலாக ஓம் ஸ்ரீ திருமூலர் சித்த குரு சாமியே, உன் திருவடி சரணம்! சரணம்! என்று மாற்றி உச்சரிக்க வேண்டும்.

18 சித்தர்களின் அருளை பெற தனித்தனியான எளிய மந்திரம் இதோ!

திருமூலர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இராமத்தேவர் மந்திரம் :-

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

அகத்தியர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

தன்வந்த்ரி மந்திரம் :-

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி.

வான்மீகர் மந்திரம் :-

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம் :-

ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

போகர் மூல மந்திரம் :-

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

மச்சமுனி மந்திரம் :-

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

கொங்கணர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

பதஞ்சலி மந்திரம் :-

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

சிவவாக்கியர் மூல மந்திரம் ;-

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

கருவூரார் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

குதம்பை சித்தர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

கோரக்கர் மூல மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி