தமிழகத்தின் ஆன்மீக பூமியாகத் திகழும் திருவண்ணாமலை, சிவபெருமானின் அருள் நிறைந்த புண்ணிய பூமி ஆகும். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பழமையான வழக்கம். இதன் காரணம், சிவபெருமான் மலையாகவே இங்கு வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். 14 கிலோமீட்டர் நீளமுள்ள புனித பிரதட்சினை பாதையில் கிரிவலம் வருவது, ஆன்மீக எண்ணத்தையும் புண்ணியத்தையும் பெருக்கி, சிவபெருமானின் அருளை பெருகச் செய்யும். திருவண்ணாமலை, சித்தர்களின் பூமியாகவும் அறியப்படுகிறது. இங்கு அடியில் 108 லிங்கங்கள் உள்ளன என்பதும், அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான அருள் இருப்பதும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
பௌர்ணமி அன்று சந்திரன் முழுமையாக மிகவும் பிரகாசமாக ஒளிரும். இந்த நாளில் சந்திரனின் ஒளி திருவண்ணாமலை முழுவதும் விழும் பொழுது, அந்த ஒளியின் பிரதிபலிப்பு பக்தர்களின் மனம் மற்றும் உடலை சுத்திகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானை வழிபட சிறந்த நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது. பௌர்ணமி இரவில் கிரிவலம் வருபவர்கள் சிவலோக பதவி பெறுவார்கள் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.
இந்த ஆண்டு செப்டம்பர் மாத பௌர்ணமி செப்டம்பர் 07 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. இது தமிழ் மாதமான ஆவணியில் வரும் பௌர்ணமி. ஆவணி மாதம் என்பது சிவ வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பக்தர்களுக்கு மிகப்பெரிய புண்ணியத்தை அளிக்கும். பௌர்ணமி திதி செப்டம்பர் 07 அதிகாலை 01.49 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 08 அதிகாலை 12.32 மணி வரை நீடிக்கும். எனவே, பக்தர்கள் இந்த இரண்டு நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக கிரிவலத்திற்கு ஏற்ற நேரத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் செப்டம்பர் 07 அதிகாலை 01.41 மணியில் தொடங்கி, செப்டம்பர் 08 இரவு 11.38 மணிவரை நீடிக்கும். இரவு நேரங்களில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சந்திர ஒளி மலை மீது பட்டு, அதன் பிரதிபலிப்பு கிரிவலம் வருபவர்களை தொடும் போது, அவர்களின் வாழ்வில் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 07ம் தேதியன்று இரவு 09.56 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 01. 26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணிக்கு துவங்குவதாக சொல்லப்படுகிறது. எனவே கிரகணம் தொடங்கும் முன்னர் (மாலை 8 மணிக்குள்) கிரிவலம் முடித்துவிடலாம்.அல்லது கிரகணம் முடிந்த பின் (அதிகாலை 3 மணி பிறகு) கிரிவலம் தொடங்கலாம் என்பது பல பண்டிதர்க்ளின் கூற்றாக உள்ளது.
மரண பயம் நீக்கும் மிருத்யுஞ்சய மந்திரம்
இந்த பௌர்ணமி நாளின் மற்றொரு சிறப்பு, சதயம் நட்சத்திரமும் இணைவதாகும். சதயம் நட்சத்திரத்தின் அதிபதி மிருத்யுஞ்ஜேஸ்வரர், சிவபெருமானின் ஒரு அவதாரம். மிருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வென்றவர் என்பதாகும். எனவே இந்த நாளில் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபிப்பது மரண பயத்தை நீக்கி, தீய சக்திகளை அகற்றி, நீண்ட ஆயுளை அருளும் என்று நம்பப்படுகிறது. இதோடு, நோய்கள் தீர்ந்து, மன அமைதி பெருகும் என்பது பக்தர்களின் அனுபவம்.
ஞாயிறு கிரிவலம்
ஞாயிற்றுக்கிழமையில் கிரிவலம் வருவது கூடுதல் புண்ணியத்தை அளிக்கும். சூரிய பகவானுக்குரிய இந்த நாளில் கிரிவலம் வருவதால் பதவி உயர்வு, அரசியல் முன்னேற்றம், அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி, வாழ்க்கையில் பெரும் புகழ் ஆகியவை கிடைக்கும். சூரிய பகவானின் அருள் கிடைத்து, வாழ்வில் ஒளிமயமான மாற்றம் ஏற்படும். அதேபோல், செப்டம்பர் 08 திங்கட்கிழமையன்று கிரிவலம் வருவதால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் சேரும். திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய நாள் என்பதால், அந்நாளில் கிரிவலம் வருவது சிவபெருமானின் அருளை பூரணமாக பெறும் வாய்ப்பை தருகிறது.
மந்திர ஜெபத்துடன் கிரிவலம்
கிரிவலம் செய்யும் போது பக்தர்கள் சுத்தமான மனம், உடல் மற்றும் எண்ணத்துடன் இருக்க வேண்டும். காலணி அணியாமல் மலைக்கு மரியாதையுடன் கிரிவலம் வர வேண்டும். வழியில் வரும் 108 லிங்கங்களுக்கும் வணக்கம் செலுத்துவது அவசியம். இயன்ற அளவு பஞ்சாட்சர மந்திரம் “ஓம் நம சிவாய” என ஜபித்துக்கொண்டு செல்ல வேண்டும். மேலும், மகாமிருத்யுஞ்ஜய மந்திரம் ஜெபிப்பது மிகுந்த பயனளிக்கும். இந்த மந்திரங்கள் மனதை சுத்திகரித்து, ஆன்மீக சக்தியை பெருக்கும்.
ஆவணி பௌர்ணமி கிரிவல பலன்
ஆவணி பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதன் பலன்கள் அளவற்றவை. பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும். சிவலோக பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும், நோய்கள் விலகும். வாழ்க்கையில் நிலைத்தன்மை, செல்வம், புகழ் மற்றும் அமைதி கிடைக்கும். இந்த நாளில் கிரிவலம் வருவது மரண பயத்தையும் நீக்கி, மனத்துக்கு நிம்மதியையும் அளிக்கும்.
சிவன் அருள் பொழியட்டும்
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ஆவணி பௌர்ணமி கிரிவலம், ஆன்மீக சாதனைகளில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பௌர்ணமி, சதயம் நட்சத்திரம், ஞாயிறு, திங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து வரும் இந்த நாளை தவறவிடக் கூடாது. இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருபவர்கள் சிவபெருமானின் அருளால் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை காண்பார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிவபெருமானின் அருள் எப்போதும் உங்கள் மீது பொழியட்டும். சிவாய நம:
சந்திர கிரகண சாந்தி பரிகாரம்
நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோவேதில் 4-புரோகிதர்கள் மூலம் நடத்தப்படும் சந்திர கிரக சாந்தி ஹோமம், தனிப்பட்ட சந்திர ஹோமம் மற்றும் நவகிரக பூஜை போன்றவை ஆன்மீக அன்பர்களின் நலன் கருதி நடத்தப்பட உள்ளது. எங்களின் ஹோமங்கள் மற்றும் பூஜையில் பங்கு கொண்டு சந்திர கிரக சாந்தி மற்றும் தோஷ நிவர்த்தி பெறுங்கள்.
சந்திர கிரகணம் குறித்த எங்களின் சேவை பற்றி அறிந்து கொள்ளவும் நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும் கீழ்கண்ட லிங்கை அழுத்தவும். https://www.astroved.com/us/specials/lunar-eclipse
October 27, 2025
September 19, 2025
September 17, 2025