Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
சங்கு எதற்காக ஊதப்படுகிறது? அதன் பொருளும் பயனும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சங்கு எதற்காக ஊதப்படுகிறது? அதன் பொருளும் பயனும்

Posted DateMay 11, 2025

சங்கு என்பது ஒரு கடல் நத்தை அல்லது அதன் ஓடு ஆகும். இது பெரும்பாலும் கூம்பு வடிவில் சுருள் சுருளாய் இருக்கும். சங்கு ஒரு இசைக்கருவியாகவும், இந்து மதத்தில் ஒரு புனிதமான பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் சங்கு பயன்படுத்தப்படுகிறது.  மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் கையில் சங்கு காணப்படும். தமிழ்நாட்டில் சிவன்  கோயில்களில் சுவாமி வழிபாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும் இசைக்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் சென்ற இடங்களிலெல்லாம் சங்கநாதம் முழங்கியதாக  பெரிய புராணத்தில்  குறிப்புகள் உள்ளன.

சங்குகளின் வகைகள்

போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. மேலும் சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, துயிலா சங்கு என பல்வேறு வகைகளுண்டு. ஆனால் அவற்றில் முக்கியமாக நான்கு வகை சங்குகள் மட்டுமே தெய்வீக தன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இப்படி தெய்வீக தன்மை நிறைந்த சங்குகளாக கருதப்படுபவை  வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்னியம் என்பனவையாகும். இவற்றில் பாஞ்சசன்னியம் என்பது மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சங்காகும். பகவத் கீதையில், பெரும் போரின் தொடக்கத்தில், கிருஷ்ணர் இந்த சங்கை  ஊதி போரைத் தொடக்கி வைத்தார்  என்று புராணங்கள் கூறுகின்றன. மற்ற மூன்றும் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுபவை.

சங்கின் பயன்பாடுகள்

சங்கை கோவில் வழிபாட்டில் பயன்படுத்துவார்கள். கோவில்களில் பூஜையைத் துவக்கும் முன்பு சங்கினை ஊதித் தான் பூஜையை துவக்குவார்கள். இவ்வாறு சங்கு ஊதி பூஜையை துவக்கும் முறையானது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. சங்கின் ஓசை மனதை அமைதிப்படுத்தி, கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. சங்கின் ஓசை இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. சங்கு, பிரம்மத்தின் ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. சங்கு மூலம் வெளிவரும் ஓசை, இறைவனின் சக்தியை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. சங்கு கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. சங்கினுள் சென்று வெளியாகும் காற்று கிருமிகளை அழிக்கின்றது. இதனால்தான் சில வீடுகளில் சங்கை வாசலில் மாட்டி வைப்பார்கள். மேலும் கோயில்களில் தீர்த்தத்தில் சங்கை போட்டு வைப்பார்கள். இது நீரில் இருக்கும் கிருமிகளையும் அழித்து விடும்.

 சங்கு ஊதுவதன் பயன்கள்

 லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது. சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும். இந்த ஓலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. எதிர்மறை சக்திகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. எனவே தான் வழிபாட்டின் போது சங்கு ஊதப்படுகிறது. அமைதியான முறையில் வழிபாட்டை மேற்கொள்ளும் கவனத் திறனை இது அளிக்கிறது. எனவேதான் வீட்டிலும் சங்கு வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சுற்றுச்சூழலை நேர்மறையாக சுத்திகரித்து தூய்மையை அளிக்கிறது. தைரியம், மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. சங்கு எந்தவொரு சடங்கிற்கும் முன்பு மூன்று முறை சங்கு ஊதுவது, எதிர்மறை சக்தியைக் குறைகிறது. சத்வ குணத்தை மேம்படுத்துகிறது. ரஜோ மற்றும் தாமச குணத்தை அழிக்கிறது.

இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்து செல்லும் போது சங்கு ஊதுவது சகஜம். இதற்கு  காரணம் இந்த சங்கொலி மூலம் இறப்பின் செய்தியை அக்கம்பக்கத்தினருக்கு தெரிவிப்பதற்கானதாக இருக்கும். மேலும் இறந்த ஆன்மா அமைதி பெறவும் சங்கின் ஓசை உதவும் என்பது ஒரு நம்பிக்கை ஆகும்.

இதைத் தவிர சங்கு ஊதுவதால் பல உடல் ரீதியான ஆரோக்கியமும் நமக்கு கிடைக்கின்றன. சங்கு ஊதும் போது அது நம் மூச்சை சீராக்குவதோடு மட்டுமல்லாமல் நம் நுரையீரலின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.