Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சந்திராஷ்டமம் 2025 - மிதுன ராசிக்கு சந்திராஷ்டம நாள்கள் மற்றும் நேரங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சந்திராஷ்டமம் – மிதுனம்

வேத ஜோதிடத்தில், சந்திரன் மனம், தாய், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு, பெருமை, நடத்தை மற்றும் உணர்ச்சிகளைக் குறிக்கிறது. இது பெண்பால் அம்சத்தைக் குறிக்கிறது. பூமிக்கு மிக அருகாமையில் உள்ள கோள் என்பதால், (ஜோதிடத்தில் சந்திரன் கோளாக கருதப்படுகிறது) அது மனித வாழ்வில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

'சந்திர' என்றால் சந்திரன், 'அஷ்டமம்' என்பது எட்டு. சந்திராஷ்டமம் என்பது சந்திரன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பது ஆகும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சந்திரனுக்கு ஏறக்குறைய இரண்டரை நாட்கள் ஆகும். சந்திரன் உங்கள் எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும் முழு காலமும் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தின் முக்கியமான பகுதி 13-டிகிரி, 20-நிமிட சந்திரனின் இயக்கம் ஆகும்.

சந்திராஷ்டமம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

சந்திரன், உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதால், அதிக மனக் குழப்பங்களை உருவாக்கி, மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுகிறது. உங்கள் மனம் சில வகையான வேதனைகளை அனுபவிக்கிறது, மேலும் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம்.

சந்திராஷ்டம நாட்களில் என்ன செய்ய வேண்டும்?

எதிலும் கவனமாக இருக்க வேண்டும். அவசரம் மற்றும் மனக்கிளர்ச்சியைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வு நிலைகளை உயர்த்துங்கள். நீங்கள் பிரார்த்தனை அல்லது தியானத்தில் ஈடுபடலாம். சந்திரனை வழிபடுங்கள் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

சந்திராஷ்டமம் தரும் நன்மைகள்

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம். பொதுவாக சந்திராஷ்டம நாட்களில் மிதுன ராசிக்காரர்கள் அதிக சிரமத்தினை சந்திப்பார்கள் என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ்பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர்கள்மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நற்பெயர் கிடைக்கும். கௌரவம் உயரும்.

மிதுன ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் (2025).

மிருகசீர்ஷம் - 3 மற்றும் 4 வது பாதங்கள், ஆருத்ரா(திருவாதிரை) 4 பாதங்கள், மற்றும் புனர்பூசம் நட்சத்திரங்கள் - 1, 2 மற்றும் 3 வது பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியின் கீழ் வருகிறார்கள்.

நீங்கள் மிதுன ராசியின் கீழ் மேற்கூறிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருந்தால், கீழே உள்ள விளக்கப்படம் மூலம் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம நாட்களைக் கண்டறிந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உதவும்.

mithunam mithunam Rasi Chandrashtama Days 2025
Month Starting Date & Time Ending Date & Time
January 01.01.2025, 06.01 am 03.01.2025, 10.47 am
28.01.2025, 02.52 pm 30.01.2025, 06.35 pm
February 25.02.2025, 12.56 am 27.02.2025, 04.37 am
March 24.03.2025, 10.25 am 26.03.2025, 03.14 pm
April 20.04.2025, 06.04 pm 23.04.2025, 12.31 am
May 18.05.2025, 12.04 am 20.05.2025, 07.35 am
June 14.06.2025, 05.38 am 16.06.2025, 01.10 pm
july 11.07.2025, 12.08 pm 13.07.2025, 06.53 pm
August 07.08.2025, 08.11 pm 10.08.2025, 02.11 am
September 04.09.2025, 05.21 am 06.09.2025, 11.21 am
October 01.10.2025, 02.27 pm 03.10.2025, 09.27 pm
28.10.2025, 10.14 pm 31.10.2025, 06.48 am
November 25.11.2025, 04.27 am 27.11.2025, 02.07 pm
December 22.12.2025, 10.07 am 24.12.2025, 07.46 pm