நம்மில் பெரும்பாலோருக்கு உறங்கும் போது கனவுகள் வருவதுண்டு. பெரும்பாலான கனவுகள், நாம் விழித்துப் பார்த்தால் நமக்கு நினைவில் இருக்காது. அது மட்டும் இன்றி அதிகாலையில் காணும் கனவுகள் தான் பலிக்கும் என்று கூறுவார்கள். அப்படி அதிகாலையில் கனவு வந்தால் நாம் மீண்டும் படுத்து உறங்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். அப்படி இருந்தால் அந்தக் கனவு பலிக்கும் என்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். என்ன கனவுகளுக்கு என்ன பிளான் என்பதை இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
அரிசி கனவில் வந்தால் கனவு காண்பவர் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி மட்டும்தான் கிடைக்கும். கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் பண வரவுகள் அதிகரித்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களில் எவரேனும் ஒருவரை கனவில் காணும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாகப் பெருகும். பண வரவும் அதிகரிக்கும்.
நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.
சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள்.
உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.
உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள். ஒரு நபரின் குழந்தைகள் இறப்பதுபோல் கனவு வந்தால், அவருக்கு வரவிருக்கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும்.
தன்னுடைய மனைவி இறந்து விட்டாற் போல் கனவு உண்டானால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும்.
தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.
ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று பொருள். ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும் என்று பொருள்.
கனவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நீங்கள் கண்டால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியான, மனதிற்கு குளிர்ச்சியான இதமளிக்கக்கூடிய விஷயங்கள் நடக்கும். அதே போல அக்ரூட் பருப்புகள், வால்நட் சாப்பிடுவதை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரப்போகிறது என்று அர்த்தம்.
பிரபலமானோர் கனவில் வந்தால் வெளிப்புற வாழ்க்கையில் அதிக அங்கீகாரம் பெறுவதற்கான பொதுவான விருப்பத்தை பிரதிபலிக்க முடியும்.
பிரபலமானவர்களுடன் அறிமுகம் ஆவது போல கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும்.
மணமாகாத இளம்பெண்கள் மேற்சொன்ன படி கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன்,அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என கொள்ளலாம்.
அரச குடும்பத்தாருடன் பழகுவது போன்ற கனவு வந்தால், உங்களின் நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும்.
நீங்கள் கன்னி பெண்ணை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் செய்கின்ற செயல் அனைத்தும் நன்மையில் நடக்க போகிறது என்பதை குறிக்கிறது.
அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாகமிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள்.
அடிதடி, கலவரம், சண்டை நடப்பது போல் கனவு வந்தால்,அது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு ஏற்படும்.
சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.
ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம்.
உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.
பறவைகளைக் கனவில் கண்டால் அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.பறவை பிடிப்பது போன்று கனவில் காட்சிகள் வந்தால், அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த கனவிற்கு பின்னர் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகளும் உண்டு.
நமது கனவில் இறைவன் வாழும் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும்.
நீங்கள் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும் செயல்களில் முதலில் சில தடங்கல்கள் ஏற்பாட்டாலும் முடிவில் அந்த இறைவனின் அருளால் அனைத்தும் நன்மையாகவே முடியும். கனவில் கோயில் மணியோசையைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் சில பலன்கள் உண்டு. கோயில் மணியோசை ஒரே சீராக ஒலிப்பது போல் உணர்ந்தால் பிள்ளையில்லா தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பணவரவும் அதிகரிக்கும்.
ஆனால் கோயில் மணியோசை சீரற்றதாக ஒலிப்பது போன்று உணர்ந்தால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் உருவாவதோடு பண விரயமும் ஏற்படும்.
உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி ஆகும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும். ஆசிர்வாதம் கனவு பலன்கள் : உங்களை விட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும். ஆரஞ்சு கனவு பலன்கள் : கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடலில் காயம் உண்டாகலாம். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவப்பெயர் ஏற்படக்கூடும். இஞ்சி கனவு பலன்கள் : உங்கள் கனவில் இஞ்சியைக் கண்டால், உங்களுக்கு நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும். இளைப்பு கனவு பலன்கள்: ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும் என்பதற்கான அறிகுறியாகும்.
இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது.
பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் – கனவு பலன்கள்: நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும். நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில் நடக்கலாம். அல்லது நீங்கள் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து அதனால் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், அவர்களின் தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம். உழவு – கனவு பலன்கள்: ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்பது பொருள்.
கோயில் உற்சவம், தேரோட்டம் போன்ற கோயில் திருவிழாக்களைக் கனவில் கண்டால் விரைவில் உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடலாம். உண்ணல் – கனவு பலன்கள்: நீங்கள் மட்டும் தனித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் சில துன்பங்கள் உண்டாகும். உங்கள் உறவினர்களைப் பிரிய நேரிடும். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதே நேரம் இத்தகைய கனவு காண்பவர் விவசாயியாக இருப்பரானால் அவரின் வயலில் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும். நீங்கள் பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், பணியில் பதவி உயர்வு ஏற்படும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள் விருந்து சாப்பிட்டு மகிழ்வது போல் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என பொருள். ஊற்று – கனவு பலன்கள்: கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் உங்கள் கனவில் கண்டால்,உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கடினமான துன்பமும் ஏற்படாது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் கஷ்டங்களைக் குறிப்பிடும்.
உங்கள் கனவில் உங்கள் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும். எலும்பு – கனவு பலன்கள்: கனவில் எலும்பைக் காண்பது விசேஷம் என கூறப்படுகிறது. எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தர் ஆவார் என்று பொருள். ஒரு மனிதனின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும் என்று பொருள். ஓட்டம் – கனவு பலன்கள்: நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும். உங்களின் தொழில், வியாபாரங்கள் அபிவிருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும்
எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக் குளிப்பதாக கனவு ஏற்படக்கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அக்கனவை காண்பவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால் நெடுநாள் நோயாளிகள் மேற்படி கனவைக் கண்டால், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும் நிலை உண்டாகும். ஏழ்மை நிலை – கனவு பலன்கள்: கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார். ஏமாற்றம் – கனவு பலன்கள் : ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், அவருக்கு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி செல்வம் இழக்க நேரிடலாம்.
கனவில் ஏலக்காயைக் காணும் நபர், பிறரால் அதிகம் மதிக்கப் பெறும் நிலையை அடைவார். அதே நேரம் ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால், அவருக்கு மிகுந்த செல்வம் வந்து சேரும் என்பது பொருள். எழுத்தாணி அல்லது எழுதுகோல்: எழுதுவதற்கு பயன்படும் பேனா போன்ற பொருள்களைக் உங்கள் கனவில் கண்டால், கடிதப் போக்குவரத்தால் உங்களுக்கு பொருள் வரவு வரக்கூடும் என்று பொருள். எழுதுதல் கனவு பலன்கள் | Ezhuthuthal Kanavu palangal in Tamil: ஒருவர் தான் எழுதிக் கொண்டிருப்பது போல் கனவு கனவு கண்டால், அவருக்கு விரைவில் நற்செய்திகள் வரும் என பொருள். ஒட்டடை கனவு பலன்கள் : உங்கள் வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் அடர்த்தியாக ஒட்டடை இருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும் என பொருள்.
கன்றுக்குட்டியைக் கனவில் காண்பவர்களுக்கு, செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.
நீங்கள் கனவில் காதணிகளைக் கண்டால், உங்களுக்கு பொன் நகைகள் பலவும் உரிதாகும் என பொருள் கொள்ளலாம்.
கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. அல்லது வெளிநாட்டினாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற நாட்டின் உறவுடைய அலுவலகங்களில் உங்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் பொருள் கொள்ளலாம்.
ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உங்கள் கனவில் ஹோமம் எனப்படும் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் கண்டால், நீங்கள் தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் பெறுவீர்கள் என்பது பொருளாகும். கஷ்ட காலம் – கனவு பலன்கள் : நீங்கள் கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, அதற்கு நேர்மாறான பலனாக உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உயர்வையும், புகழையும் உண்டாக்கும். கற்பூரம் கனவு பலன்கள் : கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக வழக்குகளில் சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம் என பொருள் கொள்ளலாம். புலி,சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால், அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும்.
குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்களுடைய கனவில் நிறைய குதிரைகள் இருப்பது போன்று வந்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு அதிகரித்து காணப்படும்.
பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்கலாம். காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும்.
ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதிதாக காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம்.
பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும்.
கனவில் பாம்பை கையில் பிடிப்பது போன்ற கனவு வந்தால், தனலாபம் உண்டாகும் என அர்த்தம்.
கனவில் வெள்ளை பாம்பு வந்தால், நல்ல அதிர்ஷ்டம், ஆன்மீக வளர்ச்சி, வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என அர்த்தம்.
கனவில் கருநாகம் வந்தால், காலசர்ப்ப தோஷம் இருப்பதற்கான அறிகுறியாகும்.
பாம்பு கனவில் வந்தாலே குலதெய்வ வழிபாட்டை நினைவுப்படுத்தவும் வரும். நேர்த்திக் கடன் செலுத்த வேண்டியிருந்தாலும் பாம்புகள் கனவில் வரும்.
நாய்கள் கனவில் வந்தால், நன்றி, நம்பிக்கை, பாசம், பக்தி ஆகிய உணர்வுகள் வெளிப்படுவதாகவும், ஆன்மிக மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
நாய்கள் குரைப்பது போல கனவு வந்தால், வீண்பழி வந்து சேரும்.
குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்னை அதிகரிக்கும்.
யானை நமது கனவில் வந்தால், நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப்போகிறதென்று பொருள்.
யானை உங்களைத் தாக்குவதைப் போல கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கலாம் என்று அர்த்தம்.
விளை நிலங்களில் யானை உலா வருவதைப் போல கனவு கண்டால் உங்களின் செல்வம் அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம்.
யானையைப் பார்ப்பது சுபமானதாக கூறப்பட்டாலும், யானை தாக்குவது போன்று கனவு வந்தால், அவருடைய வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பொருள்.
யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவிஉயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.
மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பறவையை பிடிப்பது போன்று கனவில் காட்சிகள் வந்தால், அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பறவைகள் பறப்பது போல கனவு வந்தால், அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
குருவியை ஜோடியாக கண்டால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படுமாம்.
கொக்கு கனவில் வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025