Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Rishabam Rasi Palan 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Rishabam Rasi Palan 2025

Posted DateFebruary 20, 2025

ரிஷபம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2025

இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் அலுவலக நிர்வாகத்தின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பலவிதமான நன்மைகளை அனுபவிக்கலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்கள் கவனமாக செயல்படவேண்டும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது நல்லது. ஏற்கனவே தொழில் செய்யும் அன்பர்கள் இந்த மாதம் தொழிலில் ஆதாயம் மற்றும்  லாபம் காண பொறுமையைக் கையாள வேண்டும். காதலர்கள் இந்த மாதம் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையில் மோதல்கள் வந்தாலும் அவை இந்த மாதபிற்பகுதியில்  தீர்வுக்கு வந்து விடும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நிதிநிலை மேம்பட உதவி புரிவார்கள். இந்த மாதம்  நீங்கள் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரலாம். சளி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மிதமான சூட்டில் தண்ணீரைக் குடியுங்கள்.

 காதல் / குடும்ப உறவு

இந்த மாதம் நீங்கள் கவர்ச்சிகரமான இடங்களுக்கு சென்று மகிழலாம். அதன் மூலம் இனிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் உறவு சார்ந்த விஷயங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் எழலாம். இது தவறான புரிந்துணர்விற்கு வழி வகுக்கும்.  மேலும் இந்த பிரச்சினை உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாலும் வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் பதட்டம் காரணமாகவும் இருக்கலாம். உங்கள் நட்பு வட்டாரத்தின் மூலம் போதிய ஆதரவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்

திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை

நிதிநிலை

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சுமாராக இருக்கும். என்றாலும் நிதி வளர்ச்சிக்கான அறிகுறிகள் காணப்படுகிறது. உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினார்கள் உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.  அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். என்றாலும் சில சமயங்களில் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் ஆலோசனை உங்களை சில சிக்கலான சூழ்நிலைக்கு ஆட்படுத்தலாம்.நிதி சார்ந்த  முடிவுகளை நீங்கள் கவனமாக எடுக்க வேண்டும். புதிய முதலீடுகளை இந்த மேற்கொள்வது ஏற்றமானதாக இல்லை. அதனை தள்ளிப் போடுவது நல்லது..

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை

 உத்தியோகம்

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த  மாதம் ஏற்றம் இருக்கக் காண்பீர்கள். அலுவலக நிர்வாகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். நிர்வாக மேம்பாட்டிற்கான  உங்கள் கருததுகளுக்கு அவர்கள் மதிப்பும் ஆதரவும் அளிக்கலாம். மேலதிகாரிகள் உங்கள் செயல் திறனை பாராட்டி வெகுமதிகள் அளிக்கலாம். தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் காண பொறுமை காக்க வேண்டும். கிரக நிலை தாக்கம் காரணமாக தாமதம் இருக்கலாம். ஊடகம் மற்றும் சினிமா துறையில் இருப்பவர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். மேலதிகாரிகளுடன் மோதல்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது மருத்துவத் துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சட்டத் துரையில்  இருப்பவர்கள் இந்ந்த மாதம் சற்று சிறிய பின்னடவை சந்திக்க  நேரலாம். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மகத்தான  நேரமாக  இருக்கும். ஆராய்ச்சித் துறையில்  இருப்பவர்கள் தங்கள்  ஆய்வறிக்கைக்ககான ஒப்புதலை எளிதாகப் பெறுவார்கள்

உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை

 தொழில்

புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் முயற்சிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். குறைந்த முதலீட்டில் தொடங்குவது நல்லது. ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்துபவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் நீங்கள் கூட்டுத் தொழில் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே  தொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவன விவகாரங்களில் கவனமாகச் செயல் பட வேண்டும்..

ஆரோக்கியம்

இந்த மாதம் நீங்கள் சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சளி, லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருக்கலாம். நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சூடான நீர் பருகுவதன் மூலம் சளி பிரச்சினைகளில் இருந்து ஆறுதல் பெறலாம் மற்றும் தொண்டை நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம். .

உங்கள் ஆரோக்கியம் மேம்பட: சுக்கிரன் பூஜை

மாணவர்கள்

பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் நேரம்  எடுத்துப் படிக்க வேண்டும்.பாடங்களை புரிந்து கொள்ளவும் சிறந்த மதிப்பெண்களைப் பெறவும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் படிப்பது எளிதாகும். வெளிநாட்டில் தங்கள் உயர் கல்வியை தொடர நினைக்கும் மாணவர்கள் தாங்கள் நினைக்கும் இடத்தில் சேர வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைக்கான ஒப்புதல் பெற சிறிது பொறுமை காக்க வேண்டும். சில தடைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : சந்திரன் பூஜை

சுப தேதிகள் : 1,2,4,5,6,7,8,9,10,11,12,16,20,21,24,26,28,30,31

அசுப தேதிகள் : 3,13,14,15,17,18,19,22,23,25,27,29