Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிய கனகதாரா ஸ்தோத்திர மகிமை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிய கனகதாரா ஸ்தோத்திர மகிமை

Posted DateJanuary 17, 2025

ஆதிசங்கராச்சாரியார்,  தனது பிரம்மச்சரிய பிக்ஷாடனத்தின் போது,  ஒரு நாள் ஒரு ஏழை பிராமணப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். அந்த சமயத்தில் அவளுடைய  கணவரும் கிராமத்திற்கு பிட்சை பெற்று வரச்  சென்றிருந்தார்.  மேலும் வீட்டில் அவருக்கு  பிட்ச்சை அளிக்க எதுவும் கிடைக்கவில்லை.  தன் வீட்டிற்கு வந்த இவ்வளவு உன்னதமான மனிதருக்கு  தன்னால் எதையும் அளிக்க  முடியவில்லையே என்று அவள் மிகவும் வருத்தப்பட்டு கவலைப்பட்டாள்.  எனவே அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று, அவள்  தன் வீட்டில் தீவிரமாக தேடினாள்.  கடைசியாக அவள் ஒரு நெல்லிக்கனியைக் கண்டு எடுத்தாள். அதனை  அவருக்கு வழங்க அவள் மிகவும்  கூச்சமாக உணர்ந்தாள். ஆனால் அவள் அதை சங்கராச்சாரியாரின் கிண்ணத்தில் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும் போட்டாள்.  ஸ்ரீ சங்கராச்சாரியார், வறுமையில் வாடும் பெண்ணைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார்.  உடனே, இந்த ஏழைப் பிராமணப் பெண்மணியின் வறுமையைப் போக்க, லட்சுமி தேவியிடம் கருணை காட்டும்படி,  மன்றாடத் தொடங்கினார்.

அவர் லட்சுமி தேவியைப் புகழ்ந்து இருபத்தி இரண்டு ஸ்லோகங்களைக் கூறினார். அதில் மிகவும் மகிழ்ச்சியடைந்த லட்சுமி சங்கராச்சாரியார் முன் தோன்றினார் மற்றும் அவரது பிரார்த்தனைக்கான காரணத்தைக்  கேட்டார்.

சங்கராச்சாரியார் அந்த பிராமணப் பெண்ணுக்குச் செல்வத்தைத் தருமாறு வேண்டினார்.

அதற்கு, லட்சுமி தேவி, இந்த பிராமணப் பெண் தன் முற்பிறவியில் எந்த தான  தர்மங்களும் செய்ததில்லை, அதைப் பற்றி சித்தித்ததும் இல்லை. எனவே  இந்த ஜென்மத்தில் எந்தச் செல்வமும் பெற அவளுக்குத் தகுதியில்லை, துன்பத்திற்கு உரியவள் என்றும்,  செல்வம் தர இயலாத  தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினாள்.

சங்கராச்சாரியார் லக்ஷ்மி தேவியின்  நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, இந்த ஜென்ம வாழ்க்கையில், தன்னிடம் கொடுக்க எதுவும் இல்லாத நிலையிலும்  அவள் மிகவும் பயபக்தியுடன் எனக்கு  நெல்லிக்கனியை கொடுத்தாள், அவளுடைய இந்த ஒரு செயல் மட்டுமே அவள் மீது கடாட்சம்  பொழிவதை நியாயப்படுத்தும் என்று பதில் கூறினார்.

இதைக் கேட்ட லக்ஷ்மி தேவி, ஸ்ரீ சங்கராச்சாரியாரின் பரிந்துரை மற்றும்  வாதத்தால் மிகவும் நெகிழ்ந்து, மகிழ்ச்சியடைந்தார். உடனடியாக தங்க நெல்லிக்கனியை மழையாகப் பொழிந்தாள்.

இவ்வாறு லட்சுமி தேவியை குறித்த சங்கராச்சாரியாரின் ஸ்தோத்திரம் புனிதமானது, புகழ்பெற்றது மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் என்று பிரபலமாக அறியப்பட்டது.  பகவத்பாதாள்  சங்கராச்சாரியாரின் கனகதாரா ஸ்தோத்திரம்,  ச்வர்ணதாரா  ஸ்தோத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. இது  ஸ்ரீ லக்ஷ்மியை இலக்காகக் கொண்டது மற்றும் இது  அனுக்ரஹ பீஜாக்ஷரம் பொருந்தியது.

லட்சுமி தேவி,  ஆரோக்ய லட்சுமி (ஆரோக்கியம் அளிப்பவள்), கீர்த்தி லட்சுமி (பெயர் மற்றும் புகழைக் கொடுப்பவள்), சந்தான லக்ஷ்மி (குழந்தைகள் மற்றும் தொடரும் சந்ததிகளை ஆசீர்வதிப்பவள்), விஜய லட்சுமி (அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை உறுதிப்படுத்துகிறாள்), தன லக்ஷ்மி (தொடர்ந்து செல்வத்தைப் பொழிவாள். , தான்ய லக்ஷ்மி (ஏராளமான பயிர்களை தருபவள்), மோக்ஷ லக்ஷ்மி (முக்தி அளிப்பவள்), சௌபாக்ய லட்சுமி (முடிவற்ற நல்லிணக்கம் மற்றும் மங்களத்தை அருள்பவள்), சாந்த லக்ஷ்மி (அமைதி அளிப்பவள் ) ஆக, அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாம்யா, ஈசித்வா மற்றும் வசித்வா ஆகிய எட்டு வடிவங்களும் இணைந்த  ஒருத்தியாக அஷ்ட ஸித்திகளை அளிப்பவள்.

சங்கராச்சாரியார் (லோகானுக்ரஹ த்ருஷ்டி மூலம்) மக்களின் நலனில் கண்ணும் கருத்துமாக, இருந்து மக்கள் துன்பம் நீங்கி அஷ்ட லக்ஷ்மியின் அனைத்து வரங்களையும் பெற  கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடியுள்ளார்.

ஒருவரிடம் எல்லாச் செல்வமும் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால், செல்வத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும்.  லக்ஷ்மி தேவியின் அனைத்து அம்சங்களிலும் ஞானமானது முக்கியமானது.  ஒருவருக்கு செல்வம், ஆரோக்கியம் இருந்து  குழந்தைகள் இல்லாவிட்டால் இவை அனைத்தும் வீணாகிவிடும்.  எனவே லட்சுமி (அஷ்ட லக்ஷ்மி அம்சம்) அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்கிறாள்.

லட்சுமிக்கான இந்த பிரார்த்தனை, அவளால்   தவற விடப்பட்ட, பக்தர்களின் தேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காயத்ரி மஹாமந்திரத்தில் இரண்டாவது பாதம் “பர்கோ தேவஸ்ய தீமஹி” ஸ்ரீ லக்ஷ்மியின் பீஜாக்ஷரம் “ஸ்ரீம்” கொண்டது. யஜுர்வேதம் மற்றும் “அஹம் பிரம்மாஸ்மி” ஆகியவற்றைக் குறிக்கிறது.

ஆதி சங்கரர், தன் கனகதாரா ஸ்தோத்திரத்தில், விஷ்ணு பகவானின் பெருமையையும், சிறப்பையும் வெளிப்படுத்தி, இந்த இறைவனின் ஆற்றலாக விளங்குபவள் ஸ்ரீ லஷ்மி என்று விவரிக்கிறார்.

இந்தக் கனக தாரா ஸ்தோத்திரத்தை தினமும் காலையிலும் மாலையிலும் இருமுறை பாராயணம் செய்பவர், படிப்பவர்  அல்லது கேட்பவர், லௌகீக இன்பம் மற்றும் ஆன்மீக இன்பத்தை சந்தேகத்திற்கு இடமின்றி அடைவார்.


  கனக தாரா ஸ்தோத்திரம் :

சர்வோ ஜனாஹா சுகினோ பவந்து, லோக சமஸ்த சுகினோ பவந்து”

 ( பொருள் – எல்லா மக்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழட்டும், எல்லா உலகங்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழட்டும்).

 பூர்வ கர்மவினையால் அவதிப்பட்டு வறுமையில் வாடும் அனைவரின் நலனுக்காகவும் ஆதி சங்கரர் இந்த “கனகதாரா ஸ்தோத்திரத்தை” பாடியுள்ளார்.

 பலன் (கள்): ஆதி சங்கராச்சாரியாரின் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் லட்சுமி தேவியின் மீது 21 இனிய  பாடல்களைக் கொண்டது. இந்த ஸ்தோத்திரம் மகாலட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வரங்களை பெறவும், துன்பங்கள், கவலைகள்  மற்றும் வறுமையைப் போக்கவும் ஜபிக்கப்படுகிறது.

மகாலக்ஷ்மி தேவி,  விஷ்ணுவின் தெய்வீகத் துணைவி. அவளின் அருள்  வாழ்க்கையில் அனைத்து வகையான துன்பங்கள் மற்றும் பணம் தொடர்பான துக்கங்களிலிருந்து தனது பக்தர்களைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. கனகதாரா ஸ்தோத்ரம் என்பது  செழிப்பு (லௌகீகம் மற்றும்  ஆன்மீகம் இரண்டும்), செல்வம், குழந்தைப் பேறு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் தைரியம் ஆகியவற்றை அருளும் தெய்வமான லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த சமஸ்கிருத பாடல் ஆகும்,

லட்சுமி தேவியைப் புகழ்ந்து ஆதிசங்கராச்சாரியார் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றியதாகவும், உணவுக்காக (பிக்ஷை) பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு ஒரு நெல்லிக்கனியை  உள்ளன்போடு தானம் செய்த ஒரு ஏழைப் பெண்ணுக்கு செல்வத்தைப் பொழியுமாறு தேவியை வேண்டிக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், தேவி தனது கடந்தகால வாழ்க்கையில் எந்தத் தான தர்மங்களும்  செய்யாத ஏழைப் பெண்ணின் கர்மாவின் காரணமாக முதலில் மறுத்துவிட்டாள். ஆதி சங்கராச்சாரியாரின் பரிந்துரை மற்றும் அவர் பாடிய கீர்த்தனையால் தேவி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்; எனவே, அவள் ஏழைப் பெண்ணுக்கு “தங்க ஓடை” நிரம்பி வழியும் வகையில் செல்வத்தை அளித்தாள். ‘கனக’ என்றால் “தங்கம்” என்றும், ‘தாரா’ என்றால் “நீரோடை” என்றும் பொருள்.

ஜெபிப்பதற்கு உரிய நாட்கள் (உங்களால் தினமும் ஜெபிக்க முடியாவிட்டால்) வெள்ளிக்கிழமை  மற்றும்/அல்லது பௌர்ணமி நாட்கள்

இந்த மந்திர ஜெபத்தை  ஆரம்பிக்க உகந்த நாட்கள் : பௌர்ணமி

ஜெபிக்க சிறந்த நேரம் : காலை 6.00  மணி முதல்  –  7.00 மணி  மற்றும் / அல்லது மாலை 6.00மணி முதல்  – 7.00 மணி வரை

ஜெப எண்ணிக்கை  : 1, 3, அல்லது  9 முறை

 யாரெல்லாம் ஜெபிக்கலாம்  : பாலினம் மற்றும் வயதைப் பொருட்படுத்தாமல் எவரும்

எப்படி வழிபட வேண்டும்.  : லட்சுமி தேவியின் திருவுருவப்படம்  அல்லது யந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்

பூக்கள் :  இளஞ்சிவப்பு தாமரை, செண்பகப் பூ அல்லது ஏதேனும் மணம் கொண்ட மலர்களை வழங்கலாம்

 அமர்ந்து ஜெபிக்க வேண்டிய திசை: வடக்கு நோக்கி அமர வேண்டும்.

ஜப மாலை  : சிட்ரின் அல்லது மஞ்சள் புஷ்பராகத்தால் செய்யப்பட்ட துளசி  ஜெப மாலை அல்லது ஜெபமாலைகளை ஒருவர் பயன்படுத்தலாம்.