இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிர்களுக்கு இடையேயான தொடர்பை உறவு எனலாம். அது எந்த வகையான உறவாகவும் இருக்கலாம். பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, சகோதர சகோதரி உறவு, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என உறவுகள் இருக்கும். இவை மரபணுத் தொடர்பு உடையவை. கணவன் மனைவி உறவு திருமண பந்தத்தால் ஏற்படுவது. நட்புறவு என்பது எந்தவித தொடர்பும் இன்றி நம்பிக்கை மற்றும் நேசத்தால் உருவாகும். பண்புகளால் ஏற்படும் உறவு ஆகும். ஒரு சிலருக்கு தொழில் முறை உறவுகளும் இருக்கலாம். இவ்வளவு ஏன் மனிதர்களுக்கு மனிதர்களிடம் மட்டும் இன்றி நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் கூட உறவு இருக்கலாம்.
எந்த உறவாக இருந்தாலும் அவை நமது வாழ்வின் முக்கிய அங்கம் ஆகும். எந்த உறவாக இருந்தாலும் நாம் அதற்குண்டான வரம்பைப் பராமரிக்க வேண்டும். உறவில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருக்கும். சில உறவுகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். சில உறவுகள் நீடித்த நாட்கள் இருக்கும். சில உறவுகள் நமது வாழ் நாள் வரை தொடரக் கூடியதாக இருக்கும். மரியாதைக்குரிய உறவுகளைப் பேணுவதும் நமது நல்வாழ்வுக்கு முக்கியம். நம் வாழ்வில் உள்ள முக்கியமான உறவுகளையும், ஆரோக்கியமற்ற மற்றும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் உறவுகளையும் நாம் அடையாளம் காண வேண்டும். எல்லா வகையான உறவுகளும் நம் வாழ்வில், சுய உணர்வு மற்றும் அடையாளத்தின் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் முக்கியமானவர்கள் என்பதால், உறவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான மரியாதை, தொடர்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
ஆனால் சில சமயங்களில் இந்த உறவுகளுக்குள் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பிரிவு தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருந்து விடுகிறது. சிலர் சூழ்நிலை காரணமாக பிரிகிறார்கள் என்றால் ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக கசப்பான அனுபவங்களோடு பிரிய நேரிடுகிறது. அண்ணன் தம்பிக்கிடையே பிரிவு, அக்கா தங்கை பிரிவு, காதலர்கள் பிரிவு, கணவன் மனைவி பிரிவு அவ்வளவு ஏன் ஒரு சில சமயங்களில் பெற்ற பிள்ளைகளே பெற்றோருடன் பேசாமல் இருப்பதும் உண்டு.
வாழ்க்கையில் ஒன்று சேர விரும்புபவர்கள், பிரிந்து போன உறவை தேடுபவர்கள் இந்த ஒரு விளக்கை ஏற்றி பரிகாரம் செய்யலாம். அது என்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ளளலாம் வாருங்கள்
ஒவ்வொரு கடவுளின் அருளைப் பெற வெவ்வேறு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்ந்து ஏற்றினால் தேவியின் அருள் கிட்டும். அம்மனை வணங்கும் பொழுதும் மேலே கூறிய எண்ணெய் கொண்டு ஏற்றலாம். நெய் தீபம் ஏற்றினால் சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும். நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள பீடை, தோஷம் யாவும் நீங்கி விடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பெயர், புகழ், கீர்த்தி உண்டாகும். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சகல சந்தோசம் ஏற்படும். பசு நெய்யால் தீபம் ஏற்றினால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் மற்றும் குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தீரும். குலதெய்வத்தின் அருள் பெற ஆமணக்கு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம்.. எள் (நல்லெண்ணெய் ) தீபம் ஏற்றுவது கிரஹங்களை சாந்தப்படுத்தும்.
பிரிந்தவர்கள் ஒன்று சேர, கசப்பான அனுபவங்களோடு விலகியவர்கள் ஒன்று கூட வேப்ப எண்ணெயை கொண்டு தீபம் ஏற்றுங்கள். செவ்வாய், வெள்ளி, வியாழன் போன்ற கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றலாம். அம்பாளுக்கு ஏற்ற வேண்டிய தீபம் இதுவாகும். அம்பாள் முன்பு ஒரு சிறு அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் போல் வேப்ப எண்ணெயை ஊற்றி வெள்ளை பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். பிறகு பிரியானி இல்லை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிகப்பு மையினால் நீங்கள் யாருடன் பேச விரும்புகிறீர்களோ அவர்கள் பெயரை எழுதி அதை விளக்கின் முன் வைத்து உங்கள் வேண்டுதலை வையுங்கள். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர உங்கள் வேண்டுதல் நிறைவேறும். உங்களை விட்டுப் பிரிந்தவர்கள் உங்களுடன் வந்து சேருவார்கள். அந்த பிரியானி இலைகளை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025