Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சனிப்பெயர்ச்சி பலன் 2025 - 2027 | Sani peyarchi 2025 date in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சனிப்பெயர்ச்சி பலன் 2025 – 2027 | Sani Peyarchi 2025 to 2027

Posted DateAugust 19, 2024

மேஷம் – பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை

மேஷ ராசி அன்பர்களே! மீன  ராசியில் சனி சஞ்சரிப்பதால் இது உங்களுக்கு விரயச் சனி ஆகும். எனவே பணம் சார்ந்த அனைத்து  நடவடிக்கைகளையும்  எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அணுகுவது நல்லது. செலவுகள் அதிகரிக்கலாம். ஏழரை சனியின் ஆரம்பம் என்பதால் எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

மேலும் மேஷம் ராசி பலன்கள் பற்றி அறிய

ரிஷபம் – நேர்மையான முயற்சி லாபம் அளிக்கும்.

லாபஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம். நீங்கள் சரியான திசையில் நேர்மையான முறையில் முயற்சி செய்தால் வெற்றி உங்களை வந்து சேரும். கடின உழைப்பு மூலம் நீங்கள் வெற்றி காணலாம். திருமண முயற்சி வெற்றி அளிக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கலாம். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். பொருளாதார நிலை ஏற்றமுடன் இருக்கும் என்றாலும், வரவு செலவு விஷயங்களில் திட்டமிடல் அவசியம். நல்ல  ஆரோக்கியத்தை தக்க வைக்க முறையான தூக்கம் மற்றும் ஒய்வு அவசியம்.

மேலும் ரிஷபம் ராசி பலன்கள் பற்றி அறிய

மிதுனம் – பொறுப்புடன் செயல்படும் காலக்கட்டம்

உத்தியோகத்தில் சவால்கள் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க  வேண்டும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். உறவில் நெருக்கம் மற்றும் பிணைப்பு  இருக்கும். சில தற்காலிக பிரச்சினைகள் இருந்தாலும் பரஸ்பரம் ஆதரவும் கனிவும் சவால்கள் மற்றும் மோதல்களை எளிதாக்கும்.தாயுடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். பணம் சார்ந்த விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மேலும் மிதுனம் ராசி பலன்கள் பற்றி அறிய

கடகம் – கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்

எதிர்பாராத தடைகள், நிதி இழப்புகள் போன்ற பிரச்சினைகளால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களில் இருந்து இப்பொழுது  நீங்கள் வெளிவரலாம். ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கலாம். என்றாலும் அவை நீடித்து இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்துகளை காது கொடுத்து கேளுங்கள். உங்கள் துணையுடன் உங்கள் தரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கலாம்.

மேலும் கடகம் ராசி பலன்கள் பற்றி அறிய

சிம்மம் – எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளிக்கலாம். உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் மற்றும் தாமதங்கள் இருக்கலாம். உத்தியோகத்தில் மாற்றமும் சவால்களும் இருக்கலாம். கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சுமுக உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். பணத்தை சேமிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதலீடு விஷயங்களில் கவனம் தேவை. வேலை அதிகம் இருந்தாலும் ஓய்விற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

மேலும் சிம்மம் ராசி பலன்கள் பற்றி அறிய

கன்னி – விடா முயற்சி விஸ்வ ரூப வெற்றி அளிக்கும்

பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். பணியிடத்தில் கவனமாக செயலாற்ற வேண்டும். உத்தியோக முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் தாமதங்கள் இருக்கலாம். வருமான ஓட்டம் நிலையாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் இருக்கலாம். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. குறுக்கு வழிகளைத் தவிர்க்க வேண்டும். ஊகவணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் பலன் பெறலாம்.உடல் நல உபாதைகள் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

மேலும் கன்னி ராசி பலன்கள் பற்றி அறிய

துலாம் – சவால்களில் வெற்றி காணலாம்

நீங்கள் இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் சாதகமான பலன்களைக் காணலாம். எதிரிகள் மீது வெற்றி காணலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கலாம்.  புதிய உத்திகளைக் கையாள்வதன் மூலம் தொழிலில் வெற்றி காணலாம்.  சவால்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிணைப்பு இருக்கும். பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை கண்காணிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பராமரிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மேலும் துலாம் ராசி பலன்கள் பற்றி அறிய

விருச்சிகம் – தகவல் தொடர்பில் கவனம் தேவை.

பிறருடன் கவனமாகப் பழக வேண்டும். உறவினர்களுடன் பேசும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டலாம். தொழிலில் முன்னேற்றம் இருக்கலாம். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். மூத்த உடன்பிறப்பு மூலம் பிரச்சினை வரலாம்.  குழந்தைகள் மூலமும் சில பிரச்சினைகள் வரலாம். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமண முயற்சியில் இருப்பவர்கள் தாமதங்களை சந்திக்கலாம். நிதிநிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் அடையும். ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவுகள் இருக்கலாம். கவனம் தேவை.

மேலும் விருச்சிகம் ராசி பலன்கள் பற்றி அறிய

தனுசு – ஆன்மீக சிந்தனை அதிகரிக்கலாம்

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும் என்றாலும் பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். புதிதாக வேலையில்  சேருபவர்கள் குறைந்த வருமானத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும். உங்கள் தந்தை உங்களுக்கு ஆதரவாக செயல்படலாம். கணவன் மனைவி மகிழ்ச்சியான நேரத்தை சந்திக்கலாம். பணப்புழக்கம் சீராக இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மேலும் தனுசு ராசி பலன்கள் பற்றி அறிய

மகரம்  – மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும்

நீங்கள் தடைகள் மற்றும் சவால்களை கடந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வில் மாற்றமும் முன்னேற்றங்களும் இருக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் வெற்றி காண்பீர்கள். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள்.  குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். நிதி நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். வருமான ஓட்டம் சீராக இருக்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டலாம். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கலாம்.

மேலும் மகரம் ராசி பலன்கள் பற்றி அறிய

கும்பம் – வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பான நிதிநிலை இருக்கலாம். உத்தியோகத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம். பணிச்சுமை கூடுதலாக இருக்கலாம். குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். உடன் பிறப்புகளுடனான உறவிலும் சில மோதல்கள் இருக்கலாம். திருமண முயற்சிகள் வெற்றி அளிக்கலாம். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் மேம்படலாம்.

மேலும் கும்பம் ராசி பலன்கள் பற்றி அறிய

மீனம் – பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு சில சோதனைகளை அளிக்கலாம். மெதுவான முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படலாம். உறவில் கருத்து வேறுபாடுகள் எழலாம். அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். நீங்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் மீனம் ராசி பலன்கள் பற்றி அறிய