பன்றி முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சி தருபவர் வாராஹி அம்மன். இவர் சப்த கண்ணிகளால் ஒருவர். இவர் திருமாலின் வராக அம்சமாக பார்க்கப்படும் அம்மன் ஆவார்.
தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்து, எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள் வாராகி அம்மன். இந்த வாராஹி அம்மனை இரவில் வழிபடுவது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் தான் பில்லி சூனியம் போன்ற காரியங்கள் செய்யப்படும். எனவே கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை காக்க, இரவு நேர வழிபாடுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள்.
தோல்விகள், அவமானம் போன்றவற்றில் இருந்து வராஹி வழிபாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். சிலர் தாந்திரீக முறைப்படி வழிபடுவதால் இவரை இரவு நேரங்களில் தான் வழிபடுவர் என்கின்றனர். பல வாராஹி கோவில்களில் அமாவாசை பௌர்ணமி, அன்று தான் பூஜைகள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கண் திருஷ்டி பயம் போன்றவற்றை போக்கக் கூடியவள்.
ராஜ ராஜ சோழன் வாராஹி அம்மனை வழிபட்ட பிறகே அனைத்து காரியமும் செய்வார். குறிப்பாக போருக்கு செல்லும் முன் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வாழிபாடு செய்த பிறகே செல்வார். அதனால் தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார். வாராஹி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வமானாள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவியான வாராஹி அம்மன் வேண்டியதை வழங்கக் கூடியவள். விவசாயம் வீடு நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை தருபவள்.
வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது
இந்த வழிபாட்டை சனிக்கிழமை, சனி ஹோரையில் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழிபாடு செய்ய அம்மனின் திருவுருவப் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல பிடித்து வைத்து அதை வாராஹித் தாயாக நினைத்துக் கொண்டு இந்த பூஜை செய்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
படம் வைத்திருப்பவர்கள் சனிக்கிழமை, சனி ஹோரை நேரத்தில் வாராஹி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். செம்பருத்திப் பூ இல்லை என்றால் நீல நிற சங்குப் பூ சிவப்பு நிற அல்லிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்யலாம்.
பின் மண் அகல் விளக்கில் நல்லெண்ணய் ஊற்றி அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு தீபம் ஏற்றி பூஜையறையில் வைக்க வேண்டும்.
நைவேத்தியமாக ஒரு டம்பளர் பானகம் வைத்தால் கூடப் போதும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு வாராஹி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.
உங்கள் கஷ்டத்தை சொல்லி அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிட்டும்.
உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வாராஹி அம்மனை வணங்கி வழிபடுங்கள்.
கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்களும், மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும், சனி ஆதிக்கம் உள்ளவர்களும், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட்டு வரவேண்டும். அதேபோல, ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹியை தீபமேற்றி வழிபடலாம். இதைத்தவிர, பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபடலாம். அதிலும், பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வந்து ஆசீர்வதிப்பாள் என்று நம்பப்படுகிறது.
இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபட்டு வந்தால், எதிரிகளே இல்லை என்ற நிலைமை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். சொத்து பிரச்சனை, கடன் தொல்லை தீரும்.. நெடுநாள் நோய்களும் குணமாக தொடங்கும். முக்கியமாக, தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எந்தவிதமான நோய்த்தொற்றுகளும் அண்டாமல் இருக்க இரவு நேரத்தில் வாராஹி தேவியை வழிபடலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025