Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மகாலட்சுமியின் அருள் கிடைக்க வாங்க வேண்டிய பொருட்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மகாலட்சுமியின் அருள் கிடைக்க வாங்க வேண்டிய பொருட்கள்

Posted DateJuly 31, 2024

தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. அதில் நான்காம் மாதமாக வருவது ஆடி மாதம் ஆகும். பொதுவாக நாம் ஆங்கில மாத தொடக்கத்தில் வீட்டுக்கென்று சில பொருட்களை வாங்குவோம். அதிலும் குறிப்பாக மளிகைப் பொருட்களை வாங்குவோம். இது எல்லோர் வீட்டிலும் பொதுவாக வழக்கத்தில் இருக்கும். அவ்வாறு வாங்கும் போது முதல் பொருளாக மஞ்சளை வாங்க வேண்டும் என்பது ஐதீகம். அதாவது  விரலி மஞ்சள், குண்டு மஞ்சள்  அல்லது மஞ்சள் தூள் வாங்க வேண்டியது அவசியம். அதே போல தமிழ் மாதமான ஆடி பிறப்பின் போதும் சில பொருட்களை வாங்குவது சிறப்பு. அந்த பொருட்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

ஆடி மாத முதல் நாள் அன்று நாம் சில பொருட்களை வீட்டிற்கு புதிதாக வாங்கி வருவதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் கூடும். செல்வம் பெருகும். ஆடி மாத முதல் நாளில் இந்த ஐந்து பொருட்களை வீட்டிற்க்கு வாங்கி வருவதன் மூலம் சகல விதமான நன்மைகள் கிட்டும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம். முதல் நாளில் குறிப்பிட்ட இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் மங்களம் சிறக்கும். ஏனெனில் இந்த மாதம் தான் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, என விசேஷங்கள் வருகின்றன. இந்த மாதம் தான் கோவிலில் பல விழாக்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கும். வீட்டிலும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ஆடிப்பிறப்பை புதிய தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தினத்தில் இருந்து அந்த மாதம் முழுவதும் ஆண்டவனை வழிபட வேண்டும். குறிப்பாக அம்மனை வழிபட வேண்டும். ஆடி மாத முதல் நாள் அன்று அதிகாலை எழுந்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். நிலை வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். அதன் மூலம் மங்களம் நிறையும். வீடு தேடி மகாலட்சுமி வருவதாக ஐதீகம்.

வாங்க வேண்டிய ஐந்து பொருட்கள் :

முதல் பொருளாக கல் உப்பு. கல் உப்பை வாங்குவதன் மூலம் மகாலட்சுமி வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

இரண்டாவதாக இனிப்பு – இனிப்பு வாங்க இயலாதவர்கள் சர்க்கரை அல்லது  வெல்லம் வாங்கலாம்.

மூன்றாவதாக மஞ்சள் குங்குமம் –   விரலி மஞ்சள், குண்டு மஞ்சள் அல்லது மஞ்சள் தூள் வாங்கலாம். அதனுடன் குங்குமம் வாங்க வேண்டும்.

நான்காவதாக பச்சரிசி  – மகா லட்சுமி கடாட்சம் மிக்க பச்சரிசி வாங்க வேண்டும். இது மகா லட்சுமியை வரவேற்பதாக இருக்கும். இந்த அரிசியைக் கொண்டு முதலில் இனிப்பு சமைக்க வேண்டும்.உதாரணமாக சர்க்கரைப் பொங்கல்

ஐந்தாவதாக மல்லி மற்றும் சாமந்திப்பூ – வாசனை மிக்க இந்த பூக்களை வாங்கி அம்மனுக்கு சாற்றி வழிபடுவதன் மூலம் அம்மனின் பரிபூரண அருள் கிட்டும்.

எனவே இந்த நாளில் மிகவும் எளிதில் வாங்கக்கூடிய இந்த ஐந்து  பொருட்களை வைத்து மகாலட்சுமி மற்றும் குலதெய்வத்தின் வருகையை உறுதி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

வாங்க வேண்டிய நேரம்:

எமகண்டம், ராகு காலம் எதுவும் இல்லாமல் நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து,  இந்த ஐந்து பொருட்களையும் வீட்டிற்கு  கொண்டு வரும்பொழுது கண்டிப்பான முறையில் அந்த பொருட்களோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரும் குலதெய்வமும் வீட்டிற்குள் வருவார்கள். அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.