ஆடி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. இது தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் ஆடிப்பூரம் அத்தகைய நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரம் வரும் என்றாலும் ஆடி மாதம் வரும் பூர நட்சத்திர நாள் தனிச்சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். ஆடி மாதத்தில் உள்ள முக்கியமான வைபவங்களில் ஆடிப்பூரமும் ஒன்று. ஸ்ரீஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாள் ஆடிப் பூரம் என்று அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி பிறந்த நாள். பூமா தேவி ஆண்டாளாக அவதரித்த நாள் மற்றும் மீனாட்சி அம்மன் ருதுவான நாள் என்று இந்த நாளுக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு. இன்றும் ஆடிப்பூர நாளில் ருது பூஜை நடைபெருகிறது. ஆழ்வார்கள் அவதரித்த நாள். ஒரு வலையல்காரரின் வளையலை அம்மன் பாம்பாக வந்து புற்றில் வைத்தது மற்றும் அம்மனே பிரசவம் பார்த்தது என பல நிகழ்சிகள் இந்த நாளில் நடந்துள்ளது. ஆடிப்பூர நாளில், அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், அம்மனுக்கு அணிவிக்கும் வளையலை பிரசாதமாகப் பெற்று திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால் திருமணம் நடக்கும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பிணிகள் அணிந்தால் சுகப் பிரசவம் நடக்கும்.
ஆடி மாத பூர நட்சத்திர நாளில், சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என்பது நம்பிக்கை.
வில்லிபுத்தூர் ஸ்ரீரங்கமன்னார் கோயில், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025