Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
நாடி ஜோதிடம் | நாடி ஜோதிடம் என்றால் என்ன? - Astroved
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நாடி ஜோதிடம்

Posted DateJune 8, 2024

உங்களின் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா?  ஆம், எனில் நீங்கள் ஒரு முறை  நாடி ஜோதிடத்தைக் காணுங்கள். இந்த ஜோதிட முறை  இந்தியாவில் தமிழ் நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களிலும் வழக்கத்தில் உள்ள ஒரு ஜோதிட முறை ஆகும். இந்த ஜோதிட முறையில் ஓலைச் சுவடிகளின் மூலம் ஒருவரின் கடந்த காலம், நிகழ்காலம்  மற்றும் எதிர்காலம் பற்றி அறிய முடியும். இது சாத்தியமா என்று கூட நீங்கள் ஆச்சரியப்படலாம். ஓலைச் சுவடி மூலம் ஜோதிடம் கூறும் வழக்கம் தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் தான்  முதலில் ஆரம்பித்தது என்றாலும் நாளடைவில் இது டெல்லி, மும்பை,  பெங்களூரு, சண்டிகர்  போன்ற நாட்டின் முக்கிய பகுதிகளிலும் பரவியுள்ளது. நாடி ஜோதிடத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மற்றும் ஏதாவது ஒரு மையங்களுக்குச் சென்று  உங்களைப் பற்றிய விவரங்களை அறிய முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஓலைச் சுவடி மூலம் அறிந்து கொள்ளுங்கள்

நாடி ஜோதிடக் கலையின்  வரலாறு   

தமிழ்நாட்டில்,  சித்தர்களால் பழங்கால தமிழ் எழுத்துக்களான  வட்டெழுத்தில் இந்த சுவடிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த முறை பதினெண் சித்தர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அகஸ்தியர் ஆவார்.  தமிழ்நாட்டிலுள்ள வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றியுள்ள ஜோதிடப் பயிற்சியாளர்களால் இந்த எழுத்துக்களின் பதிவுகள் பிரபலமடைந்தன. நாடி ஓலைச் சுவடிகள் ஓரு நபரின் கட்டைவிரல் பதிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, அதாவது, ஆண்களுக்கு வலது கட்டைவிரல் மற்றும் பெண்களுக்கு இடது கட்டைவிரல். இந்த ஓலைச் சுவடிகள் தமிழ்நாட்டின் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் சேமிக்கப்பட்டு இருந்தன. காலப்போக்கில், ஒரு சில ஓலைகள் அழிக்கப்பட்டன, மற்றவை ஆங்கிலேயர் காலத்தில் ஏலம் விடப்பட்டன. பின்னர், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஜோதிடர்களின் குடும்பத்தினரால் பனை ஓலைகள் வாங்கப்பட்டன. அப்போதிருந்து, இந்த சுவடிகள்  ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அனுப்பப்படுகின்றன.

நாடி ஜோதிடம்

நாடி ஜோதிடமும் ஓலைச் சுவடிகளும்

சித்தர்கள் உலர்ந்த பனை ஓலைகளில் ஒரு சிறப்பு எழுத்தாணியை பயன்படுத்தி எழுத்துக்களை  பொறித்துள்ளனர். எழுத்துக்களைப்  பொறித்த பிறகு, அவற்றைப்  பாதுகாக்க நிறைய முயற்சிகளை  சித்தர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.  எழுத்துக்கள் தெளிவாக இருக்கவும், வாசிக்க இயலும் வகையில் இருக்கவும் மஞ்சள் பயன்படுத்தப்பட்டது.ஓலைகளில்    தேய்க்க எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. இறுதியில்,  ஒரு கயிறு மற்றும் இரண்டு மர கட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை கட்டுகளாக  கட்டினர்.

நாடி ஜோதிடம்

நாடி வாசிப்புக் கலை

ஓலைச் சுவடிகள்  பழங்கால தமிழ் மொழியில் கவிதை வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன, ஒரு சிலரால் மட்டுமே அவற்றை வாசித்து விளக்க முடியும். இது  ஒரு ரகசிய கலை ஆகும். இந்த நாடி வாசிப்பு கலை,  ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கற்பிக்கப்படுகிறது. இன்றைய நாடி வாசகர்கள் தங்கள் பெரியவர்கள் மற்றும் முன்னோர்கள் மூலம் இந்தப் பயிற்சியைப் பெற்றனர்.

நாடி ஜோதிடம் வாசிக்கும் முறை:

  • முதலில், நாடி ஜோதிடர்கள், ஜோதிடம் காண வரும் நபரின் கட்டைவிரல் பதிவை (பெண்களுக்கு இடது கட்டைவிரல் மற்றும் ஆண்களுக்கு வலது கட்டைவிரல்) காகிதத்தில் எடுப்பார்கள். ஒவ்வொரு கட்டைவிரல் பதிவையும் ஒரு குறிப்பிட்ட வகையாக வகைப்படுத்தலாம் என்பதால், சுவடிகள் வகைகளின்படி தொகுக்கப்படுகின்றன.
  • உங்கள் கட்டைவிரல் ரேகையுடன் தொடர்புடைய சுவடிக் கட்டு  கண்டுபிடிக்கப்பட்டதும், நாடி ஜோதிடர் ஓலையை படிக்கத் தொடங்குகிறார். பிறந்த தேதி, பெற்றோரின் பெயர்கள் போன்ற சில அடிப்படை விவரங்களை அவர் உறுதிப்படுத்துகிறார்.
  • அவர் வாசித்து அளித்த விவரங்கள் நீங்கள் வழங்கிய பதில்களுடன் பொருந்தினால், அந்த சுவடி உங்களுடையது என்பது உறுதிசெய்யப்படும். உங்கள் சுவடி கிடைக்கவில்லை என்றால், நாடி ஜோதிடர்கள் அதை தமிழகத்தின் பிரதான மையத்தில் தேடுவார்கள். ஏனென்றால், பிரதான மையத்தில் தான் ஓலை சுவடிகளின்  மிகப் பெரிய தொகுப்பு உள்ளது.
  • நாடி வாசிப்பாளர்கள் மணிக்கணக்கில் கடுமையாக உழைத்தும் உங்கள் சுவடி கிடைக்கவில்லை என்றால், அவர்கள் உங்களிடம் பணம்  எதுவும் வசூலிக்க மாட்டார்கள். நாடி ஜோதிடத்தில் பல காண்டங்கள் உள்ளன. பொதுகாண்டம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதனை அறிந்தால் தான் மற்ற பிற காண்டங்களைப் பற்றி அறியலாம். சுவடியின்  மொழிபெயர்க்கப்பட்ட விவரங்கள்  அடங்கிய நோட்புக் கிடைத்தால் மட்டுமே நீங்கள் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பாளர் வாசித்து அளிக்கும் பலன்கள் பதிவு செய்யப்பட்ட கேசட்டையும் நீங்கள் பெறலாம். உங்கள் கை பேசியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

நாடி ஜோதிட காண்டங்கள் பற்றிய விவரங்கள்

1 -வது காண்டம்

ரேகையைக் கொண்டு ஜாதகரின் பெயர், பெற்றோர், உடன்பிறந்தோர், தொழில் மற்றும் பன்னிரண்டு பாவ பலன்களை ஆயுட்காலம் வரை சுருக்கமாகக் கூறுவது. இது அவசியம் பார்க்க வேண்டும்.

2- வது காண்டம்

தனம், குடும்பம், வாக்கு, கல்வி, கண் முதலியவைகளைப் பற்றிக் கூறுவது

3 – வது காண்டம்

சகோதரர், சகோதரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் ஏற்படும் நன்மை தீமைகள்

4-வது காண்டம்

தாயார், மனை, நிலங்கள், வீடு, வாகனம், வாழ்க்கையில் அடையும் சுகங்கள், புதையல் மற்றும் வாழ்வின் மகிழ்ச்சி பற்றிக் கூறுவது.

5 – வது காண்டம்

குழந்தைகள் பிறப்பு, இறப்பு, குழந்தைகளால் ஏற்படும் நன்மைகள், குழந்தைகள் இன்மைக்கு காரணம் பற்றிக் கூறுவது

6 – வது காண்டம்

விரோதி, வியாதி, கடன், வழக்கு, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், அவற்றை நீக்கும் வழி முறைகள் பற்றிக் கூறுவது

7 – வது காண்டம்

திருமண காலம், திருமண தாமதம், எந்த திசையில், எப்படிப்பட்ட வரன் அமையும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவற்றைப் பற்றிக் கூறுவது

8 – வது காண்டம்

ஆயுள், உயிர் வாழும் காலம், இடையில் ஏற்படும் கண்டங்கள், விபத்துகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது

9 – வது காண்டம்

தகப்பனார், செல்வம், யோகம், ஆலய தரிசனம், தீட்சை மற்றும் குருவிடம் உபதேசம் பெறுதல் போன்றவற்றைப் பற்றிக் கூறுவது

10 – வது காண்டம்

தொழில், வியாபாரம், உத்தியோகம், எந்தவிதமான வியாபாரம் அல்லது தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பற்றிக் கூறுவது

11 – வது காண்டம்

லாபம், எந்த வகையில் அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பற்றியும், 2-வது திருமணம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றிக் கூறுவது

12 – வது காண்டம்

செலவு, எந்த வகையில் செலவுகள் ஏற்படும், செலவு ஏற்படக் காரணம், வெளிநாடு செல்வது பற்றியும் அதனால் அடையும் நன்மைகள் பற்றியும் கூறுவது.

 

நாடி ஜோதிடம்