சமீப காலமாக வாராஹி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. கலியுகத்திலே கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் வாராஹி. தன்னுடைய பக்தர்கள் நினைத்தவுடன் ஓடி வந்து அருள் புரிபவள் வாராஹி அன்னை. ஆனால் நமது பக்தியில், வேண்டுதலில் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். அடுத்தவர்களை கெடுக்கும் நோக்கம் இருக்கக் கூடாது. பொதுவாகவே அம்பாளுக்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பானது. அதிலும் அன்று பஞ்சமி இணைந்து வந்தால் வாராஹி அன்னையை வணங்கி வழிபட்டு வரங்கள் பெற்றிட அதை விட உகந்த நாள் இல்லை எனலாம்.
இந்த உலகில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். நமது பிரச்சினை எல்லை மீறிப் போகும் போது நாம் கடவுளை நாடுகிறோம். காக்கும் கடவுள் பல இருந்தாலும் நமது கஷ்டங்களை உடனடியாக நீக்கும் சக்தி கொண்டவள் அன்னை வாராஹி. நலம் தந்து நம்மைக் காப்பவள். மனம் உருகி வாராஹி அன்னையை வழிபட நம் வாழ்வில் நல்லது நடக்கும். நம் குறைகளுக்கு செவி மடுக்கும் தாய் வாராஹி. எதிர்ப்புகளை தவிடு பொடியாக்கிவிடுவாள். இன்னல்களை எல்லாம் போக்கி அருள்வாள். வேண்டியதை எல்லாம் தந்து அருள்வாள். உள்ளன்போடு அவளை வணங்கி வர அவளின் பரிபூரண அனுகிரகத்தை பெற முடியும்.
போர்ப்படை தளபதியாக விளங்கும் இந்த வாராஹியை செவ்வாய்க்கிழமை அன்று வழிபட நம் வாழ்வில் நல்லது நடக்கும். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, வாராஹியை மனதார நினைத்து அந்த கஷ்டம் என்னை விட்டு விலக வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தாலே போதும். வாராஹி அன்னை உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாள். கஷ்டத்தில் இருந்து உங்களை காத்து அருள்வாள் என்பதில் ஐயமில்லை. வாராஹி அன்னையை வழிபடக் கூடிய முக்கியமான நாட்களுள் செவ்வாய்க்கிழமையும் ஒன்றாகும்.
இந்த வழிபாட்டை நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் மேற்கொள்ளலாம். வாராஹி விக்ரகம் இருந்தால் அந்த விக்கிரகத்திற்கு மலர் சாற்றி பூஜைகள் மேற்கொள்ளலாம். இல்லாவிடில் படம் இருந்தால் படத்திற்கு பூஜை செய்யலாம். இரண்டும் இல்லாதவர்கள் விளக்கு ஏற்றி அந்த ஜோதியை வாராஹியாக பாவித்து இந்த பூஜையை மேற்கொள்ளலாம். சிறு மண் விளக்காக இருந்தாலும் கூட பரவாயில்லை. பக்தியோடு அவளை பூஜித்தால் அவள் உங்கள் முன் தோன்றி உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவாள். மனக் கண் முன்னால் அவளை நிறுத்தி நீல நிறம் (சங்கு பூ)அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை (அரளி, செம்பருத்தி) தூவி அவளை வணங்கலாம். இரண்டு உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மர வள்ளிக்கிழங்கு, வேர்கடலை ஒருபிடி இவற்றில் ஏதாவது ஒன்றை அவித்து அவளுக்கு நைவேத்தியமாகப் படைக்கலாம். சர்க்கரைப் பொங்கல், அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்யலாம். பழங்களில் மாதுளம்பழம் நைவேத்தியம் செய்யலாம். மிளகு போட்ட உளுந்து வடை (கருப்பு உளுந்து) இவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம்.
ஓம் மகிஷத்வஜாயை வித்மஹே
தந்த ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.
பூஜை பலன்கள்
செவ்வாய்க்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்து வர வாறாஹி அன்னையின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிட்டும். கண்திருஷ்டி, திருஷ்டி தோஷங்கள், ஏவல் பில்லி, சூனியம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு கிட்டும். தீராத நோய்கள் தீரும்.. முழுமையான ஆரோக்கியம் கிட்டும். வேலை கிடைப்பதில், பணம் சம்பாதிப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025