Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
மகரம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Magaram Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மகரம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Magaram Rasi Palan 2024

Posted DateApril 17, 2024

மகரம் மே மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். அவற்றை தீர்ப்பது உங்களுக்கு கடினமானதாக இருக்கலாம். உங்கள் தந்தையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் இளைய உடன்பிறப்புடனான உறவிலும் பிணக்குகள் வரலாம். உங்கள் தாயின் ஆரோக்கியம் குறித்த கவலை உங்களுக்கு இருக்கலாம். பல வகையிலும் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். நீங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கலாம். அதன் காரணமாக நீங்கள் சில சர்ச்சைகளை சந்திக்க நேரலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இந்த மாதம் உங்களுக்கு எதிரிகளால் தொல்லைகளை சந்திக்க நேரும். என்றாலும் நீங்கள் சூழ்நிலையை நம்பிக்கையுடன் கையாள்வீர்கள்.அவர்களை சந்திக்கும் ஆற்றல் உங்களிடம் காணப்படலாம. நீங்கள் நேர்மறையாக செயல்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில்  உங்கள் பிள்ளைகளுடன் சில தவறான புரிதல்கள் ஏற்படலாம். இந்த மாதம்  உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

 காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் நீங்கள் உறவுகளிடத்தில் கடுமையாக நடந்து கொள்ளலாம். உங்கள் பேச்சில் கடுமை இருக்கும். என்றாலும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்வார்கள். வழிகாட்டுவார்கள். கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் அனுசரித்து செல்வது நல்லது. ஈகோ மற்றும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிக எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிருங்கள். அன்பும் அக்கறையும் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்க்கும். எனவே அதிகம் எதிர்பார்க்காதீர்கள். ஒரு சில இளைய வயதினர் மனதில் காதல் அரும்பு மலரலாம். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் உறவில் குழப்பம் மற்றும் தவறான புரிதல்கள் காணப்படும்.

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். நீங்கள் அதிக வருமானம் ஈட்டும் வகையில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். வீடு வாங்கல் விற்றல் தொழிலில் இருப்பவர்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும். இந்த மாதம் நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ள உகந்த காலமாக இருக்கும். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம்,  முதலீட்டின் முறையான வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்,  நீண்ட காலத்திற்கு நிதி ரீதியாக பயனடையலாம். இந்த மாதம் நீங்கள் கடன் வாங்க நேரலாம். குடும்ப நபர்களின் தேவை கருதி பணத்தை செலவழிப்பீர்கள்.

வருமான ஓட்டம் சராசரியை விட அதிகமாக இருக்கலாம், மேலும் நீங்கள பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் ஊகங்கள் மூலம் சம்பாதிக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை

உத்தியோகம் :

உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்றாலும் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். உத்தியோகம் மூலம் சீரான பண வரவு காணப்படும். இந்த மாத இரண்டாம் பகுதியில் பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்குவீர்கள். அது வரவேற்கத்தக்கதாக இருக்கலாம்.  தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் புதிய உத்திகளைக் கையாளலாம். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கலாம். நீங்கள் விவேகத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் செயல்பட வேண்டும்  புதிய வேலை தேடுபவர்களுக்கு திருப்தியான வேலை கிடைக்கலாம். மற்றும் தொழிலைப் பொருத்தவரை இந்த மாதம் உங்கள் தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படலாம்.  தொழில் வல்லுநர்கள் தங்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டும் திறனைக் கட்டியெழுப்ப முடியும். உங்களின் தொழில் திறன் இந்த  மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டும்.

தொழில் :

இந்த மாதம் நீங்கள் உங்கள் தொழிலில் மாற்றங்களைக்  காணலாம். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கலாம்.   புதிய உத்திகள் மூலம் உங்கள் ஆர்டர்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். பங்கு சந்தை மூலம் ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் நல்ல லாபம் காண்பீர்கள். இந்த மாதம் தொழிலில் ஸ்திரத்தன்மை காண முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தொழில் விரிவாக்கத்தை சிறிது தள்ளிப் போடுவது நல்லது. வணிகத் தேவைகளை ஆதரிக்க பணப்புழக்கத்தை மேம்படுத்துவது இந்த மாதம் உங்களின்  ஆர்வமாக இருக்கும். உங்கள் தொழிலுக்கு சாதமான முறையில் அரசாங்க விதிமுறைகள்  இருக்கலாம். மாறிவரும் வணிக சூழலுக்கு ஏற்றவாறு வணிக செயல்முறைகளை மாற்றியமைக்க வேண்டும். போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளை உறுதியாக சமாளிக்க வேண்டியிருக்கும். அரசாங்க அதிகாரிகளுடனான உறவுகள் மேம்படும். பங்குதாரர்களின் ஆதரவு இந்த மாதம் முழுவதும் கிட்டலாம். அதிகாரிகளுடன் இருந்த பிரச்னைகளும் இந்த மாதத்தில் சுமுகமாகத் தீர்க்கப்படும்.  வியாபாரத்தில் கடன்களைப் பெறுவதும் கடன் தொகையைப் பயன்படுத்துவதும் உகந்த அளவில் இருக்கும்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கலாம்.  உடன்பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகளின் மருந்துகளுக்கான செலவுகள் வரும் நாட்களில் அதிகரிக்கும். மனைவி மற்றும் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். இந்த காலகட்டத்தில்  கால் சம்பந்தமான காயங்களை சந்திக்கும் வாய்ப்பு தொடர்ந்து அதிகமாக இருக்கும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயிலலாம்.  மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கப் பெறலாம். வெளி நாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். பற்கள், எலும்பு மூட்டுகள் மற்றும் கால்கள் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். இருப்பினும், இந்த மாதத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், மாதத்தின் தொடக்கத்தில் சில தடைகளுக்குப் பிறகு தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கல்வியில் சிறந்து விளங்க :ஐயப்பன் பூஜை

சுப தேதிகள் : 5, 6, 7, 11, 12, 13, 14, 21, 22, 23 & 24.

அசுப தேதிகள் : 1, 2, 15, 16, 17, 25, 26, 27, 28 & 29.