Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கும்பம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Kumbam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்பம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Kumbam Rasi Palan 2024

Posted DateApril 17, 2024

கும்பம் மே மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் நீங்கள் சிறந்த பொருளாதார வளர்ச்சியைக் காணலாம். பணம் ஈட்டவும் வருமானத்தைப் பெருக்கவும் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிட்டலாம். நீங்கள் கணிசமான பணத்ததை சேமிக்கலாம். உங்கள் வங்கியிருப்பு உயரலாம். அதே நேரத்தில் செலவுகளும் இருக்கலாம். உங்கள் குடும்பத்திற்கு நகைகள், ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் வாங்கலாம். இந்த மாதம் உங்கள் பெயரும் புகழும் கூடலாம். நீங்கள் அனைவரிடமும் சுமுக உறவு மேற்கொள்ள எண்ணுவீர்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும் என்றாலும் கூட்டுக் குடும்பத்தில் சுமுகமான உறவைப் பேணுவது கடினமாக இருக்கலாம். சச்சரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். அவ்வபோது வாக்கு வாதங்கள் வளரலாம். அதனால் அமைதி இழக்க நேரலாம்.  பொறுமையுடன் எதையும் கையாள வேண்டியிருக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், உங்கள் செயல்பாடுகளில் வெற்றியை அடையவும் முடியும். உங்கள் தொழிலில் வளர்ச்சியை அடையவும், முன்னோர்களின் சொத்துக்கள் மூலம் பணம் பெறவும் குல தெய்வ வழிபாடு துணை நிற்கும். தாமதங்கள் மற்றும் சிரமங்களை சமாளிக்கும் தைரியமும் நம்பிக்கையும்  உங்களிடம் இருக்கலாம்.  உங்கள் பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். காதல் உறவுகளில் மகிழ்ச்சி கூடும். தனிநபர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க இது ஒரு நல்ல மாதம். கல்வி வளர்ச்சிக்கு ஏற்ற மாதம் இது. மாணவர்கள் உயர்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராகி வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம், இது அவர்களின் அறிவை மேம்படுத்தி, தேர்வில் தேர்ச்சி பெற உதவும்.

காதல்/திருமண உறவு :

காதலர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். பெற்றோரின் ஒப்புதலுடன் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.  தனிமையில் இருப்பவர்கள் ஒரு கூட்டாளரைக் காணலாம். ஒரு சிலர் பல உறவுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன, இது எதிர்காலத்தில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, உறவுச் சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் வரம்புகளையும் தூரத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும். என்றாலும் மூன்றாவது நபர்களின் தலையீட்டால் சிக்கல்கள் இருக்கலாம். எனவே, உங்கள் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவராக இருந்தால், எல்லோருடனும் அனுசரித்துச் செல்ல முயற்சி செய்யுங்கள். சிவபெருமானை வழிபடுவது காதல் உறவுகளின் மூலம் மகிழ்ச்சியைக் காண உதவும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சூரியன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம், உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கலாம். ஏற்றத்துடன் காணப்படலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கலாம். மற்றும் சேமிப்பில் முன்னேற்றம் காணலாம். பல ஆதாரங்கள் மூலம் உங்களுக்கு பண வரவு இருக்கலாம்.  உங்கள் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக நீண்ட பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கலாம். பூர்வீகச்  சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆதரவால் உங்கள் சேமிப்பு உயரலாம்.  நிதி வளர்ச்சிக்காக உடன்பிறப்புகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரத்த உறவுகளுடன் சுமூகமான உறவைப் பேணுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றவும், நிதி வளர்ச்சியின் மூலம் மகிழ்ச்சியைப் பெறவும் வாய்ப்புகள் இருக்கலாம். மகான்களைத் தொடர்ந்து வழிபடுவது உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

உங்கள் பணிச்சூழலில் உள்ளவர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் அணியின் தலைவர், சகபணியாளர்கள் மற்றும் பிறரை அனுசரித்துச் செல்வதன் மூலம் உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலும். இது உங்கள் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கும். நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், யாரிடமும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து அளிக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது விரும்பிய பதவிகளுக்கு பதவி உயர்வுகளை கொண்டு வரும்.

 தொழில் :

தொழிலில் வெற்றி காண திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வது நல்லது. அது உங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். உங்கள் முதலீடுகளின் மூலம் பெரும் வருமானம் கிடைக்க அனைவரின் ஆதரவையும் பெற பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் தொழில் வளர்ச்சி கருதி  புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.  மேலும், உங்கள் வணிக வளர்ச்சிக்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் :

முகம், கண்கள், கழுத்து மற்றும் தோள்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரலாம். எனவே, முழுமையான மீட்புக்காக இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால் நீங்கள் சிகிச்சைக்கு செல்லலாம். உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது பரிசோதனை செய்யுங்கள். கருப்பசாமியை தவறாமல் வழிபடுவது உடல்நலக் குறைபாடுகளை சமாளித்து ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்களின் வளர்ச்சிக்கு  அனுகூலமான மாதமாக  இருக்கும்.  புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம். அதன் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். போட்டித்  தேர்வுகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியை அடையலாம். இது பெயரையும் புகழையும் கொண்டு வரலாம். உயர்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராகி வெற்றியை அடைய உங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பெரிய வெகுமதிகள் இருக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்க :ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 6,9,10,11,12,21,22,25,26,27.

அசுப தேதிகள் : 1,2,3,4,13,14,15,18,19,20,28,29,30,31.