Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Guru Peyarchi Palangal Kadagam 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Guru Peyarchi Palangal Kadagam 2024

Posted DateMarch 16, 2024

கடக ராசி குரு பெயர்ச்சி பொதுப்பலன் :

குருபெயர்ச்சி காலம் மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை.

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு பதினொன்றாம்  வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின்  பார்வை உங்கள் ராசிக்கு 3வது வீடு, 5வது வீடு மற்றும் 7வது வீட்டில் இருக்கும்.

நீங்கள் புதிய யோசனைகளை மேற்கொள்வீர்கள். உங்கள் மனதில் கனவு மற்றும் நம்பிக்கை நிறைந்து இருக்கும். நீங்கள் பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவீர்கள் மற்றும் உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்துவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் போது உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். மற்றும் உங்கள் தகவல் தொடர்பு திறன் மூலம் பலரையும் கவர்வீர்கள். பண லாபம் கிட்டும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.  மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தகவல் தொடர்பு மற்றும் விசா சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீங்கள் தீர்க்க முடியும். சமூக ஊடகங்கள் அல்லது ஆன்லைன் தளங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படலாம். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மேம்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நீங்கள் அன்பான உறவைப் பெறுவீர்கள்.

இருப்பினும், அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரை அதிருப்தி மற்றும் போராட்டத்தின் காலமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை நீங்கள் சந்திக்க நேரிடலாம், ஆனால் இந்தக் கவலைகளை நிதானமாகச் சமாளிப்பது அவசியம்.

உத்தியோகம் :

உங்கள் உத்தியோக  வாழ்க்கையில் சில மன அழுத்தம் ஏற்படலாம். என்றாலும் நீங்கள் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு இப்பொழுது கிட்டலாம். பொறுமை முக்கியமானது, உங்கள் கடின உழைப்பு இறுதியில் பலனளிக்கும். உங்கள் சகாக்கள் மற்றும் முதலாளியுடன் நல்ல உறவைப் பேணுவது அவசியம், இது உங்கள் உத்தியோக  வாழ்க்கையில் அதிக நன்மைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் ஓரளவு வளர்ச்சியைக் காண்பீர்கள். எதிர்காலத்தில் வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் சாத்தியமாகும்.

காதல் / குடும்ப உறவு  :  

உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மூத்த சகோதரருடன் உங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்,  நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக அதிக செலவு செய்ய நேரிடலாம்,  உங்கள் நண்பர்களுக்கு உதவ இது சரியான நேரம் அல்ல. ஏனெனில் இது கசப்பான அனுபவங்களுக்கு வழிவகுக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிட்டும். நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இது சாதகமான காலக்கட்டம் ஆகும். காதல் உறவு மேம்படும். நீங்கள் உங்கள் துணைக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

திருமண வாழ்க்கை:-

திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். கணவன் மனைவி உறவு ஓரளவு சீராக இருக்கும். பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் துணையிடம் இருந்து நீங்கள் அதிகம் எதிர்பார்ப்பீர்கள். இதனால் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபர் சேர்ப்பு பற்றிய நல்ல செய்தியையும் நீங்கள் பெறலாம்!

நிதிநிலை :

பணம் சார்ந்த உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். நீங்கள் லாபம் ஈட்டவும் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.  புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் கிட்டும். சிறந்த வருமானம் ஈட்டலாம். உங்கள் கடன் சுமை குறையலாம். பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யலாம். பிறருக்கு தொண்டு செய்வது அல்லது நன்கொடை அளிப்பதன் மூலம் உங்கள் வருமானம் இன்னும் கணிசமாக அதிகரிக்கும்.

மாணவர்கள் :-

மாணவர்கள் அறிவுப் பூர்வமாக செயல்பட்டு வெற்றி காண வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம், ஏனெனில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகம். நீங்கள் ஒரு போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், அதில் தேர்ச்சி பெற உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மருத்துவ நுழைவுத் தேர்வை எடுத்துக் கொண்டால், நீங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உற்சாகமான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எந்தவொரு செயலையும் அதிக நம்பிக்கையுடனும், கவனம் செலுத்தி, உறுதியுடனும் செய்வீர்கள். ஆராய்ச்சி துறை மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

ஆரோக்கியம் :-

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், காலநிலை மாற்றம் காரணமாக, ஏற்படும் சிறு உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ செலவுகள் இருக்கலாம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், போதுமான உடற்பயிற்சி செய்வதன் மூலமும், உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைததுக் கொள்ள முடியும்.

பரிகாரங்கள் :-

 1) உங்கள் ஆன்மீக பயணத்தை மேம்படுத்தவும் ஆசீர்வாதங்களை பெறவும் ஒரு ஆன்மீக வழிகாட்டியுடன் இணைந்திருங்கள்.

2) பக்தியின் அடையாளமாக அருகிலுள்ள விஷ்ணு அல்லது சிவன் கோவிலில் மஞ்சள் பொடியை சமர்ப்பிக்கவும்.

3) ஒவ்வொரு வியாழன் தோறும்,  அனாதை இல்லங்கள் அல்லது அருகிலுள்ள கோயில் பூசாரிகளுக்கு உணவு வழங்கவும் அல்லது உதவி வழங்கவும்.

4) நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வர, வியாழக்கிழமை சுக்ல பக்ஷத்தின் போது உங்கள் ஆள்காட்டி விரலில் உயர்தர மஞ்சள் புஷ்பராகம் கொண்ட தங்க மோதிரத்தை அணியலாம்.

5) ஒவ்வொரு மாதமும் வியாழன் அன்று குழந்தைகளுக்கு இனிப்பு அல்லது பசுவிற்கு வாழைப்பழம் வழங்கவும்.