வாழ்க்கை என்னும் படகு சுமுகமாக ஓட செல்வம் என்னும் துடுப்பு தேவைப்படுகிறது. இந்த செல்வம் பணம் மட்டும் இன்றி பிற செல்வங்களையும் குறிக்கும். என்றாலும் நாம் அதிமுக்கியத்துவம் அளிப்பது பணத்திற்கு என்றால் மிகை ஆகாது.
பணத்தை பின்னிப் பிணைந்து தான் எந்தவொரு செயலும் நடக்கின்றது. நாம் எண்ணியதை அடைய பணம் தேவைப்படுகிறது. அதை பெறுவதற்கான நமது முயற்சி பலன் தராத பொழுது நாம் ஆன்மீகத்தை நாடுகிறோம். ஆன்மீக வழியில் இறை வழிபாடு மேற்கொண்டு நமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நாம் முயற்சி செய்கிறோம். அந்த வகையில் புதன் கிழமை வழிபாடு பற்றி இந்தப் பதிவில் காண்போம். புதன் கிழமை விளக்கு ஏற்றி பூஜை செய்வதன் மூலம் நமது இல்லத்தில் செல்வம் பெருகும்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். பொன் பொருள் சேர்வதற்கு ஏற்ற கிழமை புதன் கிழமை என்றும் கூறுவார்கள். அன்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நமது செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
பொதுவாக வீட்டில் பூஜை பொருட்களை சுத்தப்படுத்துவது செவ்வாய் வெள்ளி அன்று செய்ய மாட்டார்கள். ஏனெனில் அன்றைய தினம் இவற்றை சுத்தம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து விடும் என்பது ஐதீகம். அதே போல் காமாட்சி அம்மன் விளக்கு புதன்கிழமை அன்று தேய்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது
ஏனெனில் புதன் ஆனது பொன்னையும் பொருளையும் நமக்கு கொடுக்கக் கூடிய நாள். அன்றைய நாளில் இந்த விளக்கை தேய்க்கும் போது வீட்டில் செல்வ கடாக்ஷம் குறையும். அப்படி இருக்கையில் அந்த புதன்கிழமையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும் போது நம்முடைய செல்வ வளத்தையும் பெருக்கிக் கொள்ளலாம் அது எப்படி என்று பதிவை தொடர்ந்து பார்க்கலாம்.
புதன்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். நீங்களும் குளித்து முடித்து தூய ஆடை உடுத்திக் கொள்ளுங்கள். பிறகு காமாட்சி அம்மன் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதை சுற்றிலும் மாவிலை அழகாக அடுக்கிக் கொள்ளுங்கள். அந்த மாவிலையிலும் சந்தன பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். மாவிளக்கு மேல் ஒவ்வொரு இலையிலும் பூக்களையும் அலங்காரத்திற்கு வைத்து விடுங்கள்.
இப்போது தட்டில் நடுவில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து விளக்கிற்கும் நறுமணம் மிக்க மலர்களை வைத்து விளக்கை அழகாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கில் விளக்கெண்ணெயும், சிறிதளவு நெய்யும் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
சர்வமங்கள மாங்கல்யே
ஷிவே! ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி!
நாராயணி! நமோஸ்து தே!
இந்த விளக்கின் முன் அமர்ந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை காமாட்சி அம்மனிடம் மனதார கேளுங்கள். இந்த விளக்கு குலத்தை காக்கக் கூடிய விளக்காக கருதப்படுகிறது.
சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடுவார்கள். அதற்கு காமாட்சி தீபம் என்று பெயர் அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள்.
அத்தகைய விளக்கின் முன் நாம் அமர்ந்து நம்முடைய வேண்டுதலை சொல்லும் போது அதை நிறைவேற்றி தருவதற்கான அனுகூலத்தை நிச்சயமாக தரும் என்று நம்பப்படுகிறது.விளக்கை கிழக்கு நோக்கி ஏற்ற வேண்டும். மேற்கு வடக்கு திசைகளும் சிறப்பானதே. தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது.
நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய இந்த தீப வழிபாட்டை செய்து உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025