கருப்பசாமி ஒரு கிராமக் காவல் தெய்வம் ஆவார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். கருப்பசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார். சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் தமிழக கிராமங்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர்.
கருப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் கருப்பசாமி. கருப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து காப்பாற்றுகிறார். நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார். தர்மத்தின் நியாயத்தை கருப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.
இவரை வணங்குவதன் மூலம் இழந்த பொருட்களை திரும்பப் பெறமுடியும். ஒரு பொருள் காணாமல் போய் விட்டது என்றால் இவரை வழிபாடு செய்து வேண்டினால் அது திரும்பவும் கிடைக்கும். அதே போல பிறரிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தாலும், யாராவது சொத்தை அபகரித்து இருந்தாலும் இவரிடம் முறையிட்டு வணங்குவதன் மூலம் அவரது அருளால் அது தானாகவே திரும்ப கிடைத்து விடும்.
நீங்கள் யாராலாவது ஏமாற்றப்பட்டு பொருளை இழந்து இருந்தால் அது திரும்பவும் கிடைக்க கருப்பசாமியின் இந்த வழிபாட்டை 48 நாட்கள் மேற்கொண்டால்,உங்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் உங்களுக்கு உண்டான பொருள் நிச்சயம் உங்களை நாடி வரும்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கு முன் உங்கள் கோரிக்கை நியாமானதா என்பதை ஆராயுங்கள். உங்கள் பக்கம் நேர்மை மற்றும் உண்மை இருந்தால் மட்டுமே உங்கள் கோரிக்கை நிறைவேறும். உங்கள் வீட்டிற்கு அருகில் கருப்பசாமி கோவில் இருந்தால் தினமும் அங்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். உங்கள் கோரிக்கையை மனதில் நினைத்து அதனை நிறைவேற்றித் தருமாறு அவரை வேண்டிக் கொள்ளுங்கள். அருகில் ஆலயம் இல்லை என்றாலோ அல்லது செல்ல இயலவில்லை என்றாலோ வீட்டிலேயே கருப்பசாமியை மனதார நினைத்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். நீங்கள் ஏற்றி வைத்த விளக்கையே கருப்பசாமியாக எண்ணி உங்கள் வேண்டுதலை வையுங்கள். கருப்பசாமிக்கு முந்திரி பருப்பு நெய்வேத்தியமாக வையுங்கள். கருப்பசாமிக்கு உகந்த நெய்வேதியம் இது. இதோடு முக்கனிகளை கருப்பசாமிக்கு நிவேதனம் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் வெறும் வாழைப்பழம் மட்டும் வைக்கவும். உங்களை யார் ஏமாற்றினார்களோ, அவர்களது பெயரைச் சொல்லி, அல்லது ஒரு பொருளை இழந்து இருந்தால் அந்தப் பொருளின் பெயரைக் கூறி அல்லது உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை கருப்பசாமி இடம் முறையிட்டு, அந்த பிரச்சனை தீர வேண்டும். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முறையிடுங்கள்.
என்ற மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ஒரு சின்ன கற்பூரம் ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையை காலை 6 மணிக்கு முன்பு செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் மாலை 6 மணிக்கு பிறகு செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தை நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம். சூரிய உதயத்திற்கு முன்பு, அல்லது சூர்ய அஸ்தமனத்திற்கு பின்பு இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் வேண்டி வர நீங்கள் இழந்த அல்லது ஏமாந்த பொருள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்ல பலன் உங்களுக்கு கிட்டும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025