வாஸ்து புருஷன் என்பவர் இந்த பிரபஞ்சம் தோன்றிய போது தோன்றியவர். அவர் வடகிழக்கில் தலையையும் தென்மேற்கில் காலையும் வைத்து குப்புற கிடந்தார். மிகப் பெரிய உருவமாய் ஆகாயத்தையும் நிலத்தையும் வியாபித்தபடி ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டு பெரும்பூதமென உறங்கிக்கொண்டிருந்த வாஸ்து பகவானைக் கண்டு நடுநடுங்கிப் போன பிரம்மனும், தேவர்களும் அவரை எழுந்திருக்க விடாதபடி, அப்படியே குப்புறக் கிடந்த நிலையிலேயே அழுத்திக்கொண்டார்கள். வாஸ்து பகவான் அப்படியே உறங்கத் தொடங்கிவிடுவார். பிரம்மனாலும், தேவர்களாலும் உறங்கவைக்கப்பட்ட வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாள்கள்தாம் கண் விழிப்பார். அந்த நாள்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார்.
அவர் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். வாஸ்து புருஷன் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் மனை பூஜையைத் தொடங்கி முடித்தால் மனை சிறப்பாக அமையும். வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலத்தில் மனை, பூமி தொடர்பான விஷயங்களை துவங்கினால் அவற்றில் தோஷம் ஏதும் ஏற்படாமல் அவர் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.வாஸ்து பூஜை செய்வதற்கு வாஸ்து நாள் மிக முக்கியமானதாகும். புதிய நிலம் வாங்குவதற்கு, புதிய வீடு கட்டுவதற்கு வாஸ்து நாள், சுப முகூர்த்த நேரம் பார்த்து துவங்குவது மிகச் சிறப்பானதாகும். இதனால் மனையை சுற்றி உள்ள தீய சக்திகள் விலகுவதுடன், தோஷங்கள் ஏற்படாமல் இருக்கும். வறுமைகளும் நீங்கும்.மற்ற நேரத்தில் வாஸ்து பூஜை செய்யக்கூடாது.
வருடத்திற்கு குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டுமே கண் விழிக்கும் வாஸ்து பகவான், அதற்கு பிறகு தூங்க சென்று விடுவார். வருடந்தோறும் வாஸ்து பகவான் கண் விழிக்கும் தேதியும், நேரமும் மாறாது. கண் விழித்திருக்கும் இந்த ஒன்றரை மணி நேரத்தை 20 நிமிடங்கள் வீதம் 4 பகுதிகளாக பிரித்துக் கொள்வார்கள்.
இவற்றில் முதல் 20 நிமிடத்தில் அவர் பல் துலக்குவது, காலை கடன்களை கழிப்பது, குளிப்பது போன்றவற்றை செய்வதாக கருதப்படுகிறது. அதனால் இந்த முதல் 20 நிமிடங்களில் குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட நீர் சார்ந்த இடங்களுக்கான வாஸ்துக்களை செய்வார்கள்.
2வது 20 நிமிடத்தில் அவர் பூஜை செய்வதால் பூஜை அறை, தெய்வீக விஷயங்கள் தொடர்பான இடங்களுக்கு வாஸ்து பூஜை செய்வார்கள்.
3வது 20 நிமிடத்தில் வாஸ்து பகவான் சாப்பிடுவதற்கான நேரம் என்பதால் சமையல் அறை, ஓட்டல் போன்றவை கட்டுவதற்கான வாஸ்து பூஜைகளை செய்வார்கள்.
கடைசி 20 நிமிடங்கள் அவர் உறங்குவதற்கு தயாராகி தாம்பூலம் போட்டு, ஓய்வில் இருக்கும் நேரம் என்பதால் தங்கும் விடுதி, கேளிக்கை நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான வாஸ்து பணிகளை மேற்கொள்வார்கள்.
தை 12 ஜனவரி26 வெள்ளிக்கிழமை காலை 10.41 முதல் 11.17 வரை
மாசி 22 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை காலை 10.32 முதல் 11.08 வரை
சித்திரை 10ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை காலை 8.54 முதல் 9.30 வரை
வைகாசி21 ஜூன் 3 திங்கட்கிழமை காலை 10.06 முதல் 10.42 வரை
ஆடி11 ஜூலை 27 சனிக்கிழமை காலை 7.42 முதல் 8.18 வரை
ஆவணி06 ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை மதியம் 3.18 முதல் 3.54 வரை
ஐப்பசி11 அக்டோபர் 28 திங்கட்கிழமை காலை 7.42 முதல் 8.18 வரை
கார்த்திகை08 நவம்பர் 23 சனிக்கிழமை காலை 10.54 முதல் 11.30 வரை
September 19, 2025
September 17, 2025
September 15, 2025