Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
அமாவாசை 2024 தேதி : புத்தாண்டில் வரும் அமாவாசை நாட்களும், விரதம் கடைபிடிக்க வேண்டிய நேரமும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அமாவாசை 2024 தேதி : புத்தாண்டில் வரும் அமாவாசை நாட்களும், விரதம் கடைபிடிக்க வேண்டிய நேரமும்

Posted DateJanuary 2, 2024

அமாவாசை கிருஷ்ண பட்சத்தின் இறுதி நாள் ஆகும். இந்த நாள் முன்னோர்களை வணங்கவும் அவர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் உகந்த நாள். தர்ப்பணம் அளித்து முன்னோர்களுக்கு முக்தி என்னும் வீடுபேற்றை அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் வெற்றி கிட்டும் நாள் அமாவாசை நாள் ஆகும். .

அமாவாசையின் சிறப்பு

அமாவாசை என்பது  உங்கள் தாய்வழி மற்றும் தந்தைவழி மூதாதையர்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்க ஒரு சக்திவாய்ந்த நேரம். இந்நாளில் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் செய்வதன் மூலம் உங்கள் முன்னேற்றத்தில் காணப்படும்  தடைகள் நீங்கும்.  எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெறும் நாள் ஆகும். ஆரோக்கியமான, செல்வச் செழிப்பான மற்றும் எதிர்மறையற்ற வாழ்க்கைக்கு. தாய்வழி மற்றும் தந்தைவழி மூதாதையர்களின் ஆசிகள் மிகவும் அவசியம் ஆகிறது. மனிதர்களாகிய, நமது எண்ணங்களில் பெரும்பாலானவை நம் முன்னோர்களிடமிருந்து வந்தவை, ஏனெனில் நாம் அவர்களின் உயிரியல் மரபணுக்களை மட்டுமல்ல, அவர்களின்  ஆன்ம ஆற்றலையும் பெறுகிறோம்.

அமாவாசை விரதம்

அமாவாசை அன்று தர்ப்பணம் மற்றும் விரதம்  மூலம் உங்கள் முன்னோர்களை திருப்திப்படுத்துவது  சிறந்ததாக கருதப்படுகிறது.  அன்று ஒரு புனித நதியில் புனித நீராடுவதன் மூலம் பாவங்கள் தொலைகிறது. அன்று குளித்து முடித்து உணவு தயாரித்து கடவுளுக்கும் மூதாதையர்களுக்கும் படைத்து விட்டு உன்ன வேண்டும். அசைவ உணவுகளை உட்கொள்வதையும் சமையலில் வெங்காயம் அல்லது பூண்டு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.. அமாவாசை அன்று காகங்களுக்கு உணவளிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் முன்னோர்கள் காகங்களின் வடிவில் பூமிக்கு வந்து நமது பிரசாதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.  ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பதும் சிறந்தது.

அமாவாசை விரத பலன்

அமாவாசை அன்று (அமாவாசை நாளில்) விரதம் கடைப்பிடிப்பதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதும் பின்வரும் பலன்களை அளிக்கும்:

முன்னோர்களை சாந்திபடுத்தி அவர்களின் ஆசிகளைப் பெற உதவும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தோஷங்கள் மற்றும் தீய சக்திகள் அழியும். நல்ல ஆரோக்கியம், செல்வம், குழந்தைப் பேறு மற்றும் அதிர்ஷ்டம் கிட்டும். வாழ்வின் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் நீங்கும்.

2024 புத்தாண்டில் அமாவாசை 2024 தேதிகள் மற்றும் நேரம் :

ஆங்கில மாதம் தேதிதமிழ் மாதம் தேதிகிழமைவிரத நேரம்
ஜனவரி 11மார்கழி 26வியாழக்கிழமைஜனவரி 10 ம் தேதி இரவு 08.05 முதல், ஜனவரி 11 ம் தேதி மாலை 06.31 வரை 
பிப்ரவரி 09தை 26வெள்ளிக்கிழமைகாலை 07.53 முதல் பிப்ரவரி 10 ம் தேதி காலை 04.34 வரை
மார்ச் 10மாசி 27ஞாயிற்றுக்கிழமைமார்ச் 09ம் தேதி மாலை 06.01 முதல் மார்ச் 10 ம் தேதி மாலை 03.39 வரை 
ஏப்ரல் 08பங்குனி 26திங்கட்கிழமைஅதிகாலை 02.55 முதல் ஏப்ரல் 09 ம் தேதி அதிகாலை 12.36 வரை 
மே 07சித்திரை 24செவ்வாய்க்கிழமைகாலை 11.18 முதல் மே 08ம் தேதி காலை 09.19 வரை
ஜூன் 06வைகாசி 24வியாழக்கிழமைஜூன் 05 ம் தேதி இரவு 07.56 முதல் ஜூன் 06 மாலை 06.40 வரை
ஜூலை 05ஆனி 21வெள்ளிக்கிழமைகாலை 04.56 முதல் ஜூலை 06 ம் தேதி காலை 5 மணி வரை 
ஆகஸ்ட் 04ஆடி 19ஞாயிற்றுக்கிழமை03 ம் தேதி மாலை 04.56 முதல் ஆகஸ்ட் 04ம் தேதி மாலை 05.32 வரை 
செப்டம்பர் 02ஆவணி 17திங்கட்கிழமைகாலை 06.33 முதல் செப்டம்பர் 03 ம் தேதி காலை 07.59 வரை 
அக்டோபர் 02புரட்டாசி 16புதன்கிழமை01ம் தேதி இரவு 10.35 முதல் அக்டோபர் 03 ம் தேதி அதிகாலை 12.34 வரை 
நவம்பர் 01ஐப்பசி 15வெள்ளிக்கிழமைஅக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 முதல் நவம்பர் 01 ம் தேதி மாலை 06.25 வரை 
நவம்பர் 30கார்த்திகை 15சனிக்கிழமைகாலை 11.04 முதல் டிசம்பர் 01 ம் தேதி பகல் 12.19 வரை 
டிசம்பர் 30மார்கழி 15திங்கட்கிழமைகாலை 04.44 முதல் டிசம்பர் 31 ம் தேதி காலை 05.03 வரை