பௌர்ணமி என்பது முழு நிலவு வானில் ஒளிரும் நாள் ஆகும். இது ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் வரும் மாதாந்திர பண்டிகையாகும், எனவே பௌர்ணமி ஒரு வருடத்தில் 12 முறையும், கூடுதல் மாதங்களில் 13 முறையும் கூட ஏற்படலாம். பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி நம் உள்ளும் புறமும் ஒளிர பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்கிறோம்.
பௌர்ணமி அன்று எண்ணற்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகும். தைப்பூசம், மாசி மகம், சித்ரா பெளர்ணமி, திருக்கார்த்திகை என ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில பிரபலமான மற்றும் முக்கியமான பௌர்ணமி திதிகள் ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குரு பூர்ணிமா, வியாஸ் பூர்ணிமா, ஷரத் பூர்ணிமா, ரக்ஷா பந்தன், ஸ்ரீ பைரவ ஜெயந்தி, இந்தியாவின் மிகவும் பிரபலமான வண்ணமயமான பண்டிகையான ஹோலியும் முழு நிலவு நாளில் வருகிறது.
சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் ஆலய தரிசனம் செய்வது, கோபுர தரிசனம் செய்வது, ஸ்ரீ சத்ய நாராயணா பூஜையில் பங்கு பெறுதல், காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல், சிவபெருமானை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது மற்றும் மகான்களின் தரிசனம் சிறப்பான பலன்களை தரும். பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது.
மாதம் | ஆங்கில தேதி, கிழமை | தமிழ் மாதம் | கிரிவல நேரம் |
ஜனவரி | 25 வியாழன் | தை 11 | ஜனவரி 24ம் தேதி இரவு 10.44 முதல் ஜனவரி 25ம் தேதி இரவு 11.56 வரை |
பிப்ரவரி | 24 சனி | மாசி 12 | பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 முதல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.51 வரை |
மார்ச் | 24 ஞாயிறு | பங்குனி 11 | காலை 11.17 முதல் மார்ச் 25 ம் தேதி பகல் 01.16 வரை |
ஏப்ரல் | 23 செவ்வாய் | சித்திரை 10 | காலை 04.21 முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 05.54 வரை |
மே | 23 வியாழன் | வைகாசி 10 | மே 22ம் தேதி இரவு 07.14 முதல் மே 23ம் தேதி இரவு 07.48 வரை |
ஜூன் | 21 வெள்ளி | ஆனி 07 | காலை 07.45 முதல் ஜூன் 22ம் தேதி காலை 07.19ம் தேதி வரை |
ஜூலை | 21 ஞாயிறு | ஆடி 05 | ஜூலை 20ம் தேதி மாலை 06.10 முதல் ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை |
ஆகஸ்ட் | 19 திங்கள் | ஆவணி 03 | அதிகாலை 03.07 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை |
செப்டம்பர் | 17 செவ்வாய் | புரட்டாசி 01 | காலை 11.22 முதல் செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 வரை |
அக்டோபர் | 17 வியாழன் | புரட்டாசி 31 | அக்டோபர் 16ம் தேதி இரவு 07.56 முதல் அக்டோபர் 17ம் தேதி மாலை 05.25 வரை |
நவம்பர் | 15 வெள்ளி | ஐப்பசி 29 | அதிகாலை 03.53 முதல் நவம்பர் 16ம் தேதி அதிகாலை 03.42 வரை |
டிசம்பர் | 15 ஞாயிறு | கார்த்திகை 30 | டிசம்பர் 14ம் தேதி மாலை 04.17 முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை 03.13 வரை |
September 19, 2025
September 17, 2025
September 15, 2025