Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
Sri Narasimha Mangala Navaratna Malika Lyrics In Tamil | நரசிம்மரை போற்றும் நவரத்ன மல்லிகா ஸ்லோகம்!
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம்

Posted DateNovember 17, 2023

விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம். நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்று கூறுவார்கள். நாம்  பக்தியோடு அழைத்தவுடன் வந்து அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்க கீழுள்ள இம்மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.

லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாளான புதன்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளன்று இம்மந்திரத்தை கூறி அவரை வணங்கி வந்தால் , நம்மை நெருங்கும் ஆபத்துகள் நீங்கும். அவரது அருளால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

  1. மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யும்ருத்யவே
    மங்களம் ரௌத்ரரூபாய நாஸிம்ஹாய மங்களம்
  2. ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவகண்டகம்
    ஜகத்ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்
  3. ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே
    வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்
  4. கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே
    தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்
  5. நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே
    ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்
  6. கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச
    கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்
  7. த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே
    நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்
  8. மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே
    ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்
  9. ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே
    ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹார்ப்பணமஸ்து