ஒவ்வொரு கிழமைக்கும் ஓரு தனித்துவம் உண்டு. மேலும் ஒவ்வொரு கிழமையையும் ஒவ்வோரு கிரகம் ஆளும். அந்த கிரகங்களின் அதிபதியின் அருளும் அன்று நிறைந்து இருக்கும்.
அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது புதன் கிழமை கிரகம் மற்றும் அதன் அதிபதி மற்றும் அன்று சொல்ல வேண்டிய மந்திரம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பிரசித்தி பெற்ற பழமொழி ஒன்று உண்டு. அந்த அளவிற்கு புதன் கிழமை சிறப்பு வாய்ந்தது. புதன் கிழமைக்கு உரிய கிரகம் புத பகவான். இவர் கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதி. இந்த நாள் சுப நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகத்திற்கு அதிபதியாக விஷ்ணு பகவான் விளங்குகிறார்.
எனவே புதன் கிழமைகளில் பெருமாளை வணங்க வேண்டும். பிறகு நவகிரகங்களை வழிபட்டுவிட்டு பிறகு புதன் பகவானை நோக்கி வழிபட வேண்டும். காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி, விநாயகப் பெருமானை வணங்கி விட்டு பின் பெருமாளை வணங்கிவிட்டு அதைத் தொடர்ந்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு புதன் கிரகத்துக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். பச்சைப் பயறை வேகவைத்து பசுக்களுக்கு அளிப்பது நல்லது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் புதனின் அனுக்கிரகங்களைப் பெறலாம்.
புதன்கிழமையில் பின்வரும் துதியை காலையில் குளித்து முடித்து பூஜையில் விளக்கு ஏற்றி கூறுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி, செல்வ செழிப்பு, குழந்தைகளில் படிப்பில் முன்னேற்றம் ஆகியவைகளை அடைவீர்கள்.
கஜானனம் பூத கணாதி சேவிதம்
கபித்த ஜம்போ பலசார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
வக்ர துண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ரப !
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா வென்ற யிரண்டெழுத்தினால்
ஸ்ரீமான் நாரயனோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது
புதன் பகவானுக்கான துதி
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபக வானே பொன்னடி போற்றி
பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமர் போற்றி
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத: பிரசோதயாத்
September 11, 2025
September 10, 2025
September 10, 2025