செல்வத்திற்கு அதிபதி லட்சுமி தேவி. அதனால் தான் அவளை திருமகள் என்று அழைக்கிறோம். திரு என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும். திருமாலின் திருமார்பில் அவள் குடிகொண்டு இருப்பவள். செல்வம் பெருக விஷ்ணு பகவானையும் வணங்க வேண்டும். நம்மில் பெரும்பாலோனோர் பெருமாளை ஆலயத்தில் அல்லது வீட்டில் வணங்குவோம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர லட்சுமி கடாட்சம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமியை வணங்கி வர செல்வம் பெருகும்.
வீட்டில் செல்வம் பெருக சில நியதிகளை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் உப்பை எப்பொழுதும் நிறைத்து வைத்திருக்க வேண்டும். மேலும் உப்பை சரியாகக் கையாள வேண்டும். உப்பை தரையில் சிந்தக் கூடாது. காலால் உப்பை மிதிக்கக் கூடாது. அப்படியே உப்பு கொட்டி விட்டால் உனடடியாக அதனை பெருக்கி அப்புறப்படுத்த வேண்டும். வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.வீட்டில் இரண்டு வேளையும் சாம்பிராணி தூப தீபங்களைப் போட வேண்டும். வீட்டு நுழை வாயில் மற்றும் பூஜை அறையை எப்பொழுதும். வாசமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் நல்ல ஓசை அல்லது சப்தம் இருக்க வேண்டும். அதற்கு இறை பாடல்களை போட்டு கேட்க வேண்டும். அல்லது மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பேசும் வாரத்தைகள் நேர்மறையாக இருக்க வேண்டும்.நமது எண்ணம் மற்றும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தி உண்டு.
எனவே நல்லதை மட்டுமே எண்ண வேண்டும். நல்லதை மட்டுமே பேச வேண்டும் அப்பொழுது தான் மகாலட்சுமி நம்மிடம் தங்குவாள். எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது. வீட்டில் பொய் பேசுதல் கூடாது. பொய் பேசுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் கிட்டாது. அதிக செல்வம் இருப்பவர்கள் அதனை தான் மட்டும் பயன்படுத்தாமல் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த வேண்டும். தான தருமங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் செல்வம் குறையாமல் இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி வீட்டில் குடி கொள்ளுவாள். நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.
வீட்டில் பணபுழக்கம் அtதிகரிக்கவும் நேர்மறை ஆற்றல் பெருகவும் இறை ஆற்றல் நிறைந்து இருக்கவும் எளிய பரிகாரங்களை செய்யலாம்.அந்த பரிகாரத்தைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் மிகவும் எளிய மற்றும் நமது வீட்டில் இருக்கக் கூடிய பொருள் ஆகும்.
பச்சை கற்பூரம் , இரண்டு ஏலக்காய், சோம்பு இந்த மூன்று பொருட்களையும் ஒரு சிறிய டப்பாவில் போட்டு மூடி உங்கள் அஞ்சறைப் பெட்டி, கல்லாப் பெட்டி அல்லது உங்கள் பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை போட்டதை நாற்பத்தி எட்டு நாட்கள் வரை வைக்கலாம். நாற்பத்து எட்டு நாட்கள் கழித்து மாற்றவும்.
ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறு உப்புக்கல் இஞ்சி சிறு துண்டு, ஆறு ஏலக்காய், சீரகம் ஆறு, ஒரு எலுமிச்சை போட்டு ஒரு மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டு பீரோவில் வைக்கவும் அல்லது ஈசான மூலையில் கட்டலாம் அல்லது வாசற்படியில் தொங்க விடலாம். இதனை வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். நாற்பத்து எட்டு நாட்கள் கழித்து மாற்றவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். எதிர்மறை ஆற்றல் விலகும். நல்லதை ஈர்க்கும் ஆகவே காலியாக இருக்கும் பீரோவில் இதை வைக்கக்கூடாது. இதனை வைக்கும் இடத்தில் சிறிது பணம் மற்றும் சிறிது நகை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் செல்வம் சிறிது சிறிதாக பெருகும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் நாற்பத்தி எட்டு நாட்களில் நீங்கள் மாற்றத்தைக் காணலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025