Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
து வீடு புகுதல் | Pudhu Veetil Eduthu Sella Kudatha Porul
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

புது வீடு குடி புகுதல்

Posted DateNovember 7, 2023

வீடு குடி போகுதல். இது இரண்டு வகைப்படும். முதலாவது  வாடகைக்கு வீடு மாற்றி செல்வது. மற்றொன்று நாம் சொந்தமாக வீடி கட்டிக் கொண்டு அங்கு குடி போவது.  பொதுவாக நாம் கட்டிய வீட்டிற்கு குடி போவதையே புதுமனை புகுதல் அல்லது கிரகப்பிரவேசம் என்று கூறுவார்கள்.

வாடகை வீடாக இருந்து அங்கு குடி போகும் போது நாம் முதலில் பால் காய்ச்சி விட்டு போவது வழக்கம்.

புது வீடு கட்டி அங்கு நாம் குடி போகும் நாளில் நடத்தும் விழா புதுமனை புகு விழா  என்று கூறுவார்கள். இதையே கிரகபிரவேச விழா  என்றும்  கூறுவார்கள். நாம் கட்டிய புது வீட்டில் வாஸ்து தோஷங்கள் ஏதும் இருந்தால் அதற்கு நிவர்த்தி செய்யவும் தீய சக்திகளை அழிக்கவும் ஹோமம், பூஜை முதலியன செய்யப்படுகினறன.

ஹோமம் மற்றும் பூஜை செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும். ஹோமத்தில் இடப்படும் சமித்துகள் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும். அவ்வாறு ஹோமம் பூஜை செய்ய நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் விடியற்காலை சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

நாம் வாழும் வீட்டை மாற்றும் போது, அந்த வீட்டில் நாம் மகிழ்ச்சியாக வாழ சில தெய்வீக சடங்குகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றுவதன் மூலம் இல்லத்தில் சுபிட்சம் நிறையும். கிரகபிரவேசம் என்றால் மாவிலை, தோரணம், மாக்கோலம் என்று வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.

நாம் வாழும் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க, நலமுடன், வளமுடன் வாழ நாம் அந்த வீட்டில் குடி புகும் மாதம், நட்சத்திரம் மற்றும் நாட்கள் உகந்ததாக இருக்க வேண்டும்.

புது வீடு குடி புகுதல்

புது வீடு குடிபுக உகந்த மாதங்கள்  

சித்திரை,வைகாசி, ஆவணி,ஐப்பசி, கார்த்திகை, தை – இந்த ஆறு மாதங்களில் நாம் புது வீடு குடி போகலாம். அவ்வாறு போவதன் மூலம் அந்த வீட்டில் சுபம் நிறைந்து காணப்படும். வாஸ்து சாஸ்திரப்படி இந்த மாதங்களில் குடி போவதன் மூலம் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். சுபிட்சமாக வாழலாம் என்று கூறப்படுகிறது..

புது வீடு குடி போகக் கூடாத மாதங்கள்

சில தமிழ் திங்களில் வீடு  குடி போகுதல் கூடாது என்கிறது சாஸ்திரம்.  அந்த மாதங்கள் ஆனி, ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி பங்குனி  ஆகும். இதனை ஒரு தமிழ் பாடல் மூலம் காண்போம்.

ஆடித் திங்களில் ராவணன் பட்டதும்,

ஆலமேய் பெறும் பாரத மார்கழி

வீடிட்டான் புரட்டாசி இரணியன்

மேவி ஈசன் நஞ்சுண்டது மாசியில்

படிக்காமன் எரிந்தது பங்குனி

வீடிட்டில்லங்குடி  புக வேண்டினோர்

ஓடிட்டே இரந்துண்பருலகிலே 

ஆடி மாதத்தில் வீடு குடி போகுதல் கூடாது. இந்த மாதம் தான்  ராவணன் தனது கோட்டை மற்றும் உற்றார் உறவினர்களை  இழந்து சம்ஹாரம் ஆன மாதம்,

ஆடி மாதத்தில் வீடு குடிபுகக் கூடாது. இந்த மாதம் தான் மகா பாரதப் போர் நடந்தது.

புரட்டாசி மாதம் இரணியன் தனது அரண்மனையில் நரசிம்ம மூர்த்தியால் வதம் செய்யப்பட்டான்.

மாசி மாதம் ஈசன் ஆலகால விஷத்தை அருந்தினார்.

பங்குனி மாதம் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார்.

ஆனி மாதம்  மகாபலி தனது இராஜ்ஜியம் முழுவதையும் இழந்து பாதாள உலகம் போனார்.

இந்தமாதங்களில் வீடு குடி போவதன் மூலம் வீட்டில் சண்டை சச்சரவுகள், பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வறுமை நிலை ஏற்படலாம். சொத்து இழப்பு, பதவி இழப்பு போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

புதுவீடு குடி போக உகந்த நட்சத்திரங்கள் :

ஜோதிடத்தில் மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள். அவற்றுள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களில் வீடு குடி போகலாம். அஸ்வினி, ரோகினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம் சத்யம், ரேவதி

புது வீடு குடி போக உகந்த நாட்கள்:

திங்கட் கிழமை, புதன்கிழமை , வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை

புது வீட்டிற்கு முதலில் எதனை எடுத்துச் செல்ல வேண்டும்:

புது வீட்டற்கு சாமி படங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள், பால் சர்க்கரை போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். புது வீட்டிற்கு குடிபோகும் போது, எக்காரணத்தைக் கொண்டும் துடைப்பம், முறம் பாய், தலையணை, கட்டில், மெத்தை, போன்ற படுக்கை சம்பந்தப்பட்ட பொருட்களை , எடுத்துப் போகக் கூடாது என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புதிதாக வாங்கிய கட்டில் மெத்தை என்றாலும், அதை முதன் முதலாக நீங்கள் குடி செல்லப்போகும் வீட்டிற்குள் எடுத்துச் செல்லக்கூடாது. முடிந்தவரை ஒரு வீட்டில் பால் காய்ச்சி குடி போவதற்கு முன்பு சாமான்களை கொண்டுபோய் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

பால் காய்ச்சுதல் :

நாம் வாடகைக்கு வீடு எடுத்து  முதல் முதலாக குடிபோகும் வீட்டில், முதன் முதலாக பாலைக் காய்ச்சிப் வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சுத்தமான நாட்டு பசும்பாலை வாங்கி காய்ச்சுவது நல்லது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். எனவே தான் முதன் முதலில் பாலை காய்ச்ச வேண்டும். அதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று கூறப்படுகிறது.  புது வீட்டிற்கு குடிபோகும் போது பாலைக் காய்ச்சி, அந்த பால் பொங்கி வழியும் போது, வடக்குப் பக்கமாக பொங்கி வழிந்தால் உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.  பணவரவு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே பால் கிழக்குப்பக்கமாக பொங்கி வழிந்தால் நீங்கள் செய்யும் சொந்தத் தொழிலாக இருந்தாலும் அலுவலக பணியாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த பால் மேற்கு பக்கமாக பொங்கி வழிந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. தெற்கு பக்கம் பொங்கி வழியும் பட்சத்தில், அதனால் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது பயப்பட வேண்டாம்

கிரகப்பிரவேசம்:
நல்ல நாள் நேரம் பார்த்து கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். பொதுவாக அதிகாலை நேரத்தில் செய்வது உத்தமம். அவ்வாறு செய்யும் போது அந்த வீட்டின் உள்ளே நுழைவதற்கு முன் பசுவை உள்ளே அழைத்துச் செல்வது வழக்கம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். எனவே முதலில் கன்றுடன் கூடிய பசுவிற்கு பூஜை செய்து அதற்கு உணவளிக்க வேண்டும். உள்ளே நுழையும் போது சுவாமி படங்கள், மஞ்சள் குங்குமம், தண்ணீர்க்குடம், பால் குடம் போன்றவற்றை தான் முதலில் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் லட்சுமிதேவியை இல்லத்திற்குள் அழைப்பதாக ஐதீகம்.

ஹோமம் வளர்த்தல்:

கிரகப்பிரவேசம் செய்பவர்கள் வீட்டில் ஹோமம் வளர்ப்பது நல்லது. பொதுவாக முதலில் விக்னம் ஏதும் ஏற்படாமல் இருக்க கணபதி ஹோமம் செய்வார்கள். பிறகு நவக்கிரக ஹோமம் செய்வார்கள். அது மட்டும் இன்றி அவரவர் விருப்பபடி வேறு சில பல ஹோமங்களையும் செய்வார்கள்.  இவ்வாறு ஹோமம் செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கும். நேர்மறை ஆற்றல் பெருகும். தீய சக்திகள் ஏதாவது இருந்தால் அவை ஹோமம் செய்வதன் மூலம் விலகி விடும்.

கிரக பிரவேசம் செய்யும் போது கண்டிப்பாக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று காண்போம்.

முதலாவதாக கிரகப்பிரவேசம் செய்ய சுப முகூர்த்தத்தை கண்டறிய வேண்டும்.

நாம் வாழும் வீட்டில் இருந்து விளக்கு ஏற்றி அதை அணையாமல் பாதுகாத்து குடிபுகும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். வீடு மிகவும் தொலைவில் என்றால் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து எடுத்துச் செல்வது நல்லது.

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களகரமான பொருட்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

கிரகப்பிரவேச நாளில் முதலில் பசு மாடு கன்றுடன் புது வீட்டின் உள்ளே செல்ல வேண்டும்.

கண்டிப்பாக வாசலில் தாருடன் கூடிய வாழை மரத்தை கட்ட வேண்டும். அதில் வாழைப்பூவும் இருக்க வேண்டும். இது எதிர்மறை சக்தியை விரட்டும். நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கும். தனி வீடாக இருந்தால் வாழை மரத்தை நட வேண்டும்.

தென்னை ஓலையை குறைந்த பட்சம் ஒரு ஓலையாவது அதில் சுற்ற வேண்டும். தனி வீடு கட்டுபவர்கள் அன்று ஒரு தென்னம்பாளையை நடுவது நன்று.

நம்மை பெற்றவர்கள். வளர்த்தவர்கள், நமக்கு உறுதுணையாக இருந்தவர்களை விழாவிற்கு அழைத்து அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க  வேண்டும். இது மூத்தவர்களின் ஆசிகளை பெற்றுத் தரும்.

முதலில் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். அதன் பிறகு அவரவர் விருப்பத்திற்கேற்ப பிற ஹோமங்களை நடத்தலாம். நவ கிரக ஹோமம் செய்ய வேண்டும்.

மாலையில் விளக்கேற்ற வேண்டும்.

கிரகப்பிரவேசம் செய்யும் நாளில், அந்த வீட்டு உரிமையாளர்கள் தம்பதிகளாக இரவு அங்கு தங்க வேண்டும்.

இவ்வாறு நியமத்துடன் கிரகப் பிரவேசம் செய்வதன் மூலம் அந்த வீட்டில் ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் பெருகும். வாஸ்து தோஷங்கள் நீங்கும். தாங்கள் மட்டும் அல்லாது தங்களுடைய வம்சாவளியினரும், அடுத்தடுத்த சந்ததியினரும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ இயலும். செல்வ வளம் பெருகும்.

விருந்தோம்பல்:

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு. நாம் வீடு மாற்றும் போது அல்லது புது வீடு குடிபுகும் போது அழைத்த விருந்தினர்களை உபசரிப்பது நம் வழக்கம். வாடகை வீட்டில் பால் காய்ச்சி அதனை பிறருக்கு வழங்கி உபசரிக்க வேண்டும். கிரகப்பிரவேசம் என்றால் அவர்களுக்கு விருந்து வழங்கி உபசரிக்க வேண்டும். அவர்கள் மனம் குளிர்ந்து விடை பெறும் போது அதன் நேர்மறை ஆற்றல்  வீட்டிற்கு நல்ல சக்தியை அளிக்கும். ஒரு சிலர் விருந்தினர்களை உபசரிப்பது மட்டும் இன்றி அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி அவர்களை மகிழ்விப்பார்கள்.

திருஷ்டி கழித்தல்:

ஒரு விழா என்றால் அங்கு பல வகை விருந்தினர்களும் பங்கு கொள்வார்கள். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலரின் பார்வை திருஷ்டியை ஏற்படுத்தும். அவ்வாறு திருஷ்டி படாமல் இருக்க விழா முடிந்ததும் பூசனையை சுற்றி உடைப்பது நல்லது. அது திருஷ்டி தோஷங்களை போக்கும்.

கிரகப்பிரவேசம் நடந்த தினத்தில் அந்த வீட்டில் உரிமையாளர்கள  மாலையில் விளக்கு ஏற்ற வேண்டும். மேலும் அன்றைய தினம் வீட்டை பூட்டாமல் இரவு தங்க வேண்டும். குறிப்பாக உரிமையாளர்கள் தான் தங்க வேண்டும்.