Kala Bhairava Jayanthi: Invoke Kala Bhairava for Instant Manifestation, Wealth, Wisdom & Obstacle Removal Join Now
தனுசு ராசியில் ஐந்து கிரகங்களின் ஒருமிப்பு - 296 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கிரகங்களின் ஒருமிப்பு - பணம், உறவு மற்றும் தொழிலில் தாக்கங்களை ஏற்படுத்தும் – நேரலை டிசம்பர் 29, 2019 இந்திய நேரப்படி - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இறைவைனின் ஆசிகளையும் பாதுகாப்பையும் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண உகந்த தருணங்கள்

296 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் கிரகங்களின் ஒருமிப்பு, பணம், உறவு மற்றும் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது

தனுசு ராசியில் 4 கிரகங்கள் குருவுடன் 20 நாட்கள் இணைந்து இருக்கும்

நேரலை டிசம்பர் 29, 2019 இந்திய நேரப்படி

“நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்பினால், கிரகங்கள் உங்கள் மனதில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகையில் என்ன நடைபெறும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த தாக்கம் நேர்மறையானதாக இருந்தால் நல்லது. அவ்வாறு இன்றி எதிர்மறையாக இருந்தால் நீங்கள் இந்த கிரகங்கள் பற்றி சிறிது கவனம் கொள்ள வேண்டும்.”

– டாக்டர் பிள்ளை

296 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் அரிய 5 கிரகங்களின் ஒருமிப்பு தருணங்களில் தெய்வீக பாதுகாப்பு

296 ஆண்டுகளுக்குப் பிறகு 25 டிசம்பர் 2019 ஆம் தேதியிலிருந்து சூரியன், புதன், குரு, சனி மற்றும் கேது ஆகிய 5 கிரகங்களின் சேர்க்கை அல்லது கூட்டணி ஆரம்பமாகின்றது. இந்த கிரக சேர்க்கை குருவின் ஆட்சி வீடான தனுசு வீட்டில் நடைபெறுகின்றது. காலபுருஷனின் ஒன்பதாம் இடமாகிய தனுசு, தந்தை, யோகம், அதிர்ஷ்டம், அறிவுரையாளர்கள் மற்றும் குருமார்களை சுட்டிக் காட்டுகின்றது. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கிரகங்களின் இந்த அரிய சேர்க்கை மனதில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான நிலையையும், நமது எண்ணங்கள் மற்றும் செயல்களில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும். எனவே இந்தக் காலக் கட்டங்களில் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், பணம் மற்றும் உறவு சார்ந்த விஷயங்களில் தெளிவாக செயல்படவும், வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கான முயற்சிகளை சீர்படுத்திக் கொள்ளவும் இறைவனின் ஆசிகளைப் பெற வேண்டியது அவசியம்.

இந்த 5 கிரகங்களின் ஒருமிப்பு உங்களுள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்

தனுசு ராசியில் கிரகங்களின் அசாதாரணமான சேர்க்கை நடைபெறும் இந்த 20 நாட்கள், உங்கள் வாழ்க்கையில், கீழ்க்கண்ட பாதக விளைவுகளை நீங்கள் சந்திக்கும் அனுபவம் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது:

  • தனகாரகன் என்றழைக்கப்படும் சுப கிரகமான குரு, பாவர்களான சனி மற்றும் கேது கிரகங்களின் தாக்கதைப் பெறும் காரணத்தால், பணம் தொடர்பான முக்கிய மற்றும் பெரிய நடவடிக்கைகளை நீங்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் கையாள வேண்டியது அவசியம்.
  • காலபுருஷ ராசி சக்கரத்தில் தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில், இந்தக் கிரகங்களின் சேர்க்கை ஏற்படுவதால் உங்களுக்கு தந்தை அல்லது தந்தை ஸ்தான உறவில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு எழ வாய்ப்பு உள்ளது.
  • இந்த ஐந்து கிரகங்களின் ஒருமிப்பின் தாக்கம் உங்களுள் ஒரு வன்மையான தன்மை ஏற்படுத்தும் காரணத்தால் உறவுகளில் மகிழ்ச்சியின்மை மற்றும் தொல்லைகளை ஏற்படுத்தலாம்.
  • தனுசு ராசி இரட்டைத் தன்மையை குறிக்கும் என்பதால் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்குமான போராட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை காரணமாக இது மேலும் வலுப்பெறுவதன் காரணமாக நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எடுப்பதன் காரணமாக விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலாது.
  • சனி-சூரியன், புதன்-குரு, சூரியன்-கேது போன்ற பகை கிரக சேர்க்கை காரணமாக உங்களிடம் தற்காப்பு உணர்வு மேலோங்கி இருக்கும். அகங்காரம் மேலோங்கும். நீங்கள் மற்றும் உங்கள் செயலே சரியானது என்று உங்களை நீங்கள் நிரூபிக்க முயலும் குணம் காரணமாக உங்கள் பணி/ தொழில் முன்னேற்றம் பாதிக்கலாம்.

இவ்வாறான எதிர்மறை தாக்கங்களை நீங்கள் சமாளிக்க, உங்களுக்கு உதவி புரியும் வகையில் பரிகார வழிபாடுகளை நாங்கள் நடத்தவிருக்கிறோம். அதில் நீங்கள் கலந்து கொண்டு, சூரியன், புதன், ராகு கேது மற்றும் சனி கிரகங்களை சாந்திப் படுத்தி, அவர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் தெய்வீக பாத்காப்பு மற்றும் வெற்றியைப் பெற்றிடுங்கள்.

இந்த 20 நாட்கள் நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

பணியில்/ தொழிலில்

  1. புதிய தொழில் / ஒப்பந்தங்களை துவக்குதல் கூடாது
  2. ஒரு வேலைக்கான காலக் கெடு / உறுதிமொழி அளிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு தடவை நன்கு யோசித்து உறுதி அளிக்கவும். யோசிக்காமல் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.
  3. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை
  4. நீங்கள் சிறந்து விளங்கும் துறையில் திறமை மற்றும் அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்

தனிப்பட்ட வாழ்க்கையில்

  1. நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க தான, தரும செயல்களில் பங்கு கொள்ளுங்கள்
  2. உங்கள் ஆன்மீக குருமார்கள் மற்றும் பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதை அளியுங்கள்
  3. உங்கள் நிதி விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். பெரிய அளவிலான தொகையைக் கையாளும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுங்கள்.
  4. சுற்றம் மற்றும் உறவினர்களிடம் உங்கள் அகங்காரம் மற்றும் உரிமை மீறலை வெளிப்படுத்தாதீர்கள்

தனுசு ராசியில் 5 கிரகங்களின் ஒருமிப்புக்கான பரிகார வழிபாடுகள்

தனுசு ராசியில் 5 கிரகங்களின் ஒருமிப்பு தருணங்களான 20 நாட்களில், அவர்களை திருப்திப்படுத்தி, கிரகங்களின் சாதகமான ஆசிகள் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதற்கு டிசம்பர் 29 அன்று ஆஸ்ட்ரோவேத் சிறப்பு வழிபாடுகளை நடத்தவிருக்கின்றது.

அர்ச்சனை பூஜை

கும்பகோணம் சூரியனார் கோவிலில் சூரியன், குரு, புதன், சனி மற்றும் கேது பகவானுக்கு அர்ச்சனை பூஜை

நவக்கிரகங்களின் நாயகனாக விளங்கும் சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில், கும்பகோணம் சூரியனார் கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் தங்களை வழிபடும் மக்களுக்கு தீமை தர மாட்டோம் என்று நிர்ணயித்து, நவக்கிரகங்களும் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்த ஒரே திருத்தலம் இது தான். தனுசு ராசியில் 5 கிரகங்களின் அரிய சேர்க்கை உள்ள நாட்களில் இந்த ஆலயத்தில் சூரியன், குரு, புதன், சனி, மற்றும் கேதுவிற்கு அர்ச்சனை பூஜை செய்வதன் மூலம், கிரகங்களின் ஒருமிப்பு மூலம் ஏற்படும் பாதக விளைவுகள் குறையும். நிதி நிலை குறித்த சரியான முடிவுகள் எடுக்க உதவும். உறவுகளில் அகங்காரம் முரண்பாடுகள் தவிர்க்க இயலும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

நவக்கிரக சாந்தி ஹோமம்

ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவக்கிரக சாந்தி ஹோமம்

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் குறிக்கோள்களை அடைவதற்கான ஒரு பாதை வகுப்பதற்கும் நவகிரகங்களை சாந்திப்படுத்தி, அவர்களின் ஆசிகளைப் பெறுவது அவசியமாகின்றது. இந்த சக்தி வாய்ந்த ஹோமம் செய்யும் போது, வேத மந்திரங்களை ஜெபம் செய்வதன் மூலம் உண்டாகும் அதிர்வுகள், இந்த அரிய கிரக இணைவுகளால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல்களை நாம் சமாளிக்கவும், உறவு மற்றும் பண விஷயங்களை நாம் திறமையாகக் கையாளவும் நம் கண்களுக்கு புலப்படாத பாதுகாப்பு கவசத்தை உருவாக்கித் தருகின்றது.

நவக்கிரக ஸுக்தம் பாராயணம்

ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவக்கிரக ஸுக்தம் பாராயணம்

ஒரே ராசியில் 5 கிரகங்களின் மிகவும் அரிதான இந்த சேர்க்கையால் ஏற்படும் பாதகமான விளைவுகள், நவக்கிரக சூக்தம் பாராயணம் செய்வதன் மூலம் குறையும்; தீர்க்க ஆயுள் கிட்டும்; மேலும் தீய ஆற்றல்களில் இருந்து பாதுகாப்பு கிட்டும்; வாழ்க்கையில் உங்கள் இலக்குக்ளை எட்ட இது உதவும் என்று புனித நூல்கள் கூறுகின்றன.




தனுசு ராசியில் 5 கிரகங்களின் ஒருமிப்பு பேக்கேஜ்

தனுசு ராசியில் 5 கிரகங்களின் ஒருமிப்பு பேக்கேஜ்

  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவக்கிரக சாந்தி ஹோமம்
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவக்கிரக ஸுக்தம் பாராயணம்
  • கும்பகோணத்தில் இருக்கும் சூரியனார் கோவிலில் சூரியன், குரு, புதன், சனி மற்றும் கேது பகவானுக்கு அர்ச்சனை பூஜை

சுப கிரகமான குரு, டிசம்பர் 25, 2019 முதல் ஜனவரி 13, 2020 வரை, தனுசு என்கிற தன்னுடைய ஆட்சி வீட்டை, சூரியன், புதன், குரு, சனி மற்றும் கேது ஆகிய 4 கிரகங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த தனித்துவமான அரிய கிரகங்களின் சேர்க்கையின் சாதகமான பலன்களைப் பெற்று வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான விளைவுகளை அகற்றி, வாழ்க்கையில் வெற்றி மற்றும் செழிப்பைப் பெற எங்கள் சிறப்பு வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு :  பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.