செல்வத்தை ஈட்டுவதற்கான 4 அற்புதமான விஷ்ணு சனிக்கிழமைகள்
செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம், நீண்ட ஆயுள் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை வேண்டும் ஆற்றல் வாய்ந்த நாட்கள்
இந்திய நேரம் 2019 செப்டம்பர் 21, 28 மற்றும் அக்டோபர் 5, 12 அன்று நேரலை
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“கன்யா மாதம் எனப்படும் புரட்டாசி மாதத்தில், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். ஒவ்வொரு வருடமும், இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மங்களகரமானவை ஆகும். இந்த சனிக்கிழமைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன? ஏனெனில், இந்த 4 சனிக்கிழமைகளும், செல்வம் ஈட்டுவதற்கு மிகவும் ஏற்றவை ஆகும். இந்த நேரத்தில், சூரியன் கன்னி ராசியில் பிரகாசிக்கிறார். எனவே, வாழ்க்கையில் வளம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, இது மிகச் சிறந்த காலம் ஆகும். ஆகவே, இந்த 4 சனிக்கிழமைகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது, எனது ஆழ்ந்த விருப்பம்.”
– டாக்டர் பிள்ளை
டாக்டர் பிள்ளையின் உரை: செல்வம், வளம் தரும் விஷ்ணு சனிக்கிழமைகள்
தமிழ் மாதமாகிய புரட்டாசியில் (செப்டம்பர் மத்தியிலிருந்து அக்டோபர் மத்தி வரை) வரும் 4 அற்புதமான சனிக்கிழமைகள், பகவான் விஷ்ணுவுடனும், பொருள் வளத்துடனும் ஆழ்ந்த தொடர்புடயவை ஆகும். எனவே, இவை பெரிதும் போற் போற்றிக் கொண்டாடப்படுகின்றன இந்த மாதத்தில், சூரியன், புத கிரகத்தால் ஆட்சி செய்யப்படும் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். புதனின் அதிபதி விஷ்ணு ஆவார். இவர் செல்வத்தின் கடவுளாக விளங்குகிறார். விஷ்ணு பகவானுக்குச் செய்யப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதற்கு, புரட்டாசி சனிக்கிழமைகள், மிகவும் மங்களகரமானவையாக விளங்குகின்றன. இந்த சக்தி வாய்ந்த நாட்களில், அவர், வளத்திற்கான ஆசிகளை வழங்குகிறார்.
பகவான் விஷ்ணு, தமிழ் மாதமாகிய புரட்டாசியில், திருப்பதியில் காட்சி தரும் பகவான் வேங்கடேஸ்வரர் (வேங்கடேசப் பெருமாள்) என்ற மனித வடிவத்தில், பூமியில் இறங்கி வந்தார். இவர் செல்வத்திற்கான பெரும் கடவுளாக விளங்குகிறார். கலியுகத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வேங்கடேஸ்வரர், அவருடன் ஆற்றல் வாய்ந்த வகையில் தொடர்பு கொள்பவர்கள் மீது, செல்வம், நல்வாழ்வு, வளம், இன்பங்கள், ஆன்மீக ஞானம் போன்றவற்றிற்கான ஆசிகளை தாராளமாகப் பொழியக் கூடியவர் ஆவார்.
ஆஸ்ட்ரோவேத், ஒவ்வொரு விஷ்ணு சனிக்கிழமைக்கும், பகவான் விஷ்ணுவைக் குறித்து, ஒரு பிரம்மாண்ட ஹோமத்தை நடத்துகிறது. இந்த ஒவ்வொரு ஹோமத்திலும், (அவரது 1000 நாமங்களைச் சொல்லும்) விஷ்ணு சகஸ்ரநாமத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், வாழ்க்கையின் கீழ்க்கண்ட ஒவ்வொரு அம்சத்திற்கான ஆசிகள் வேண்டப்படுகின்றன.
முதல் சனிக்கிழமை அன்று, ஆசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற வல்ல ஆற்றல் வாய்ந்த ஒரு ஸ்லோகத்தைப் பயன்படுத்தி, விஷ்ணு பகவானை வணங்கி வேண்டுகிறோம்.
அஸங்க்யேயோ ஆப்ரமேயாத்மா விஸிஷ்ட ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்த ஸித்த ஸங்கல்ப ஸித்தித ஸித்தி சாதன:
இரண்டாம் சனிக்கிழமை அன்று, நிலையான செல்வத்தையும், வசதிகளையும் அளிக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு ஸ்லோகத்தைப் பயன்படுத்தி, விஷ்ணு பகவானை வணங்கி வேண்டுகிறோம்.
விஸ்தார ஸ்தாவரஸ் ஸ்தாணு ப்ரமாணம் பீஜமவ்யயம்:
அர்தோ (அ)னர்தோ மஹாகோஷோ மஹாபோகோ மஹாதன:
மூன்றாம் சனிக்கிழமை அன்று, நோய்களைக் குணப்படுத்தும், ஆரோக்கியக் குறைபாடுகளைக் களையும் ஆற்றல் வாய்ந்த ஒரு ஸ்லோகத்தைப் பயன்படுத்தி, விஷ்ணு பகவானை வணங்கி வேண்டுகிறோம்.
ஸ்தவ்ய ஸ்தவ்யப்ரிய ஸ்தோத்ரம் ஸ்துதி ஸ்தோதாரண ப்ரிய:
பூர்ண பூரயிதா புண்ய புண்யக் கீர்த்தி ரணாமய:
கடைசி சனிக்கிழமை அன்று, ஞானம், நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யம் ஆகியவற்றை அளிக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு ஸ்லோகத்தைப் பயன்படுத்தி, விஷ்ணு பகவானை வணங்கி வேண்டுகிறோம்.
மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஷக்திர் மஹாத்யுதி:
அநிர் தேஷ்ய வபு ஸ்ரீமான் நமேயாத்மா மஹா திரித்ருக்:
விஷ்ணு சனிக்கிழமைகளின் பிரம்மாண்ட இறுதி நிகழ்ச்சியாக, விஷ்ணு பகவானை, ஒரு ஹோமத்தில் நாம், அச்சுத நாராயணர் வடிவத்தில் வழிபாடு செய்கிறோம். அச்சுத நாராயணர், அவரைச் சரணடைந்தவர்களை எப்பொழுதும் காப்பாற்றுபவர் ஆவார். இவர் செல்வம், அறிவாற்றல், நல்லாரோக்கியம், ஆதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், மோட்சம் ஆகியவற்றை அருளும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 4 புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒவ்வொன்றும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். மேலும், சனி கிரகத்தின் பாதகங்களைப் போக்கும் ஆற்றல், இவை அனைத்திற்கும் உண்டு. பாரம்பரிய நடைமுறைகளின் படி, இந்த சிறப்பு வாய்ந்த சனிக்கிழமைகளில் விஷ்ணு பகவானை வேண்டி வழிபட்டு, நீங்கள், ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம், வேலை, தொழில் போன்றவை குறித்த ஆசிகளைப் பெறலாம்.
ஆஸ்ட்ரோவேத், விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ள பகவான் விஷ்ணுவின் 4 தனிச்சிறப்பு வாய்ந்த நாமங்களை ஓதி, 4 புனித ஹோமங்களை நடத்துகிறது. இதன் மூலம் விருப்பங்களை நிறைவேற்றும், செல்வம் அளிக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ஞானம் அருளும் அவரது ஆசிகளை வேண்டிப் பெறுகிறது. இந்த நாமங்களை ஓதி, விஷ்ணு பகவானை வேண்டி, புனித ஹோமங்கள் செய்வது, கீழ்க்கண்ட பலன்களை அளிக்கும் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது.
புனித நூல்களின் படி, (பகவான் வேங்கடேஸ்வரரின் 1000 நாமங்களான) வேங்கடேச சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதும், தொடர்ந்து, அச்சுத நாராயணராக விளங்கும் பகவான் விஷ்ணுவிற்கு ஹோமம் செய்வதும் எதிர்மறைகள், பயம், வறுமை, பகைமை ஆகியவற்றை அழிக்கும்; கிரக தோஷங்களைப் போக்க உதவும்; செல்வம், அறிவு, நல்லதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், மோட்சம் ஆகியவற்றை அளிக்கும்.
ஸ்வாமி ஐயப்பன், உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரத்தன்று, பகவான் விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகியவர்களின் தெய்வீகத் தொடர்பால் தோன்றினார் என புராணங்கள் கூறுகின்றன. இவர், சனி கிரகத்தின் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தும் விசேஷ ஆற்றல் கொண்டவர் ஆவார். இரண்டாவது சனிக்கிழமை (உத்தர பல்குனி நட்சத்திரம்) அன்று, ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்வது, ஏழரை சனி காலம், 8 ஆம் வீடான அஷ்டமத்திலோ, 4 ஆம் வீடான அர்தாஷ்டமத்திலோ சனி இருக்கும் காலம், சனி தோஷ காலம் போன்றவற்றின் பொழுது ஏற்படும், சனி கிரகத்தின் பாதிப்புகளைக் குறைக்கும்
பகவான் விஷ்ணுவின் தனிச்சிறப்பு வாய்ந்த 1000 நாமங்களைக் கொண்ட இந்தப் புனித ஸ்லோகத்தை, சனிக்கிழமைகளில் பாராயணம் செய்வது செல்வம், பொருளாதார வசதிகள், சந்தோஷம், வெற்றி ஆகியவற்றைத் தரும்; பயம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்; மோட்சம் அருளும்
தமிழ் மாதமாகிய புரட்டாசியில் (செப்டம்பர் மத்தியிலிருந்து அக்டோபர் மத்தி வரை) வரும் 4 அற்புதமான சனிக்கிழமைகள், பகவான் விஷ்ணுவுடனும், பொருள் வளத்துடனும் ஆழ்ந்த தொடர்புடயவை ஆகும். விஷ்ணு பகவானுக்குச் செய்யப்படும் விசேஷ ஹோமங்களிலும், பூஜைகளிலும் கலந்து கொள்வதற்கு, புரட்டாசி சனிக்கிழமைகள், மிகவும் மங்களகரமானவையாக விளங்குகின்றன. இந்த சக்தி வாய்ந்த நாட்களில், அவர், செல்வத்தையும், வளத்திற்கான ஆசிகளையும் வழங்குகிறார்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
தமிழ் மாதமாகிய புரட்டாசியில் (செப்டம்பர் மத்தியிலிருந்து அக்டோபர் மத்தி வரை) வரும் 4 அற்புதமான சனிக்கிழமைகள், பகவான் விஷ்ணுவுடனும், பொருள் வளத்துடனும் ஆழ்ந்த தொடர்புடயவை ஆகும். விஷ்ணு பகவானுக்குச் செய்யப்படும் விசேஷ ஹோமங்களிலும், பூஜைகளிலும் கலந்து கொள்வதற்கு, புரட்டாசி சனிக்கிழமைகள், மிகவும் மங்களகரமானவையாக விளங்குகின்றன. இந்த சக்தி வாய்ந்த நாட்களில், அவர், செல்வத்தையும், வளத்திற்கான ஆசிகளையும் வழங்குகிறார்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.