சித்தர்களின் தலைவரான அகஸ்திய முனிவருக்கு பிரம்மாண்டமான ஹோமம், அவர் என்றும் வாசம் செய்யும் புனிதத் தலத்தில்
லௌகீக மற்றும் ஆன்மீக செல்வம் வேண்டி அனைத்து குருமார்களின் ஆசிகளைப் பெறுவதற்கான 24 மணி நேர காலக் கட்டம்
7 பெரும் ரிஷிகள், 18 சித்தர்கள், வேத வியாசர் ஆகியவர்களின் அருளை வேண்டிப் பெறுவதற்கான, விசேஷ வழிபாடுகள்
நேரலை, ஜூலை 16, 2019 காலை 6.00 மணி (இந்திய சீர் நேரம்)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் (முழு நிலவு) தினமான இந்த குரு பூர்ணிமா தினம், ஒவ்வொருவரும் தங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் பெரு வளர்ச்சி காண உதவும், முக்கிய தருணமாகும். இந்த நாளில், சந்திரனிடமிருந்து விசேஷ ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தினம், இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினமாகத் திகழ்கிறது. இது, குருவின் அருளைப் பெறுவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக விளங்குகிறது. உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நல்ல முறையில் மாற்றியமைப்பதற்கும், எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கும் உதவும் அதிசயங்கள் நடப்பதற்கு, குருவின் ஆசிகளும், அருளுமே மிக எளிதான சாதனங்களாக விளங்குகின்றன, என்கின்றன நம் புனித நூல்கள்.
Dr. Pillai Explains Significance of Guru Purnima
சித்தர்களின் பாரம்பரியத்தின் படி, அகஸ்தியரே முதல் சித்தர் எனக் கருதப்படுகிறார். எனவே, ‘அனைத்து சித்தர்களின் தலைவர்’ என அழைக்கப்படுகிறார். தமிழ் இலக்கியத்தின் தந்தை எனக் கருதப்படும் அகஸ்தியர், சித்தர்களிலேயே மிகப் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். மருத்துவம், தமிழ் இலக்கணம், யோகா, வயது முதிர்வதைத் தடுக்கும் சிகிச்சை முறையான காய கல்பம் போன்றவற்றுக்கு, இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர், பித்ரு தோஷம் (மூதாதையர்களின் சாபம்), பூர்வ ஜன்ம பாவங்கள், பலவகை நோய் நொடிகள், ஜாதகத்தில் காணப்படும் புத கிரகம் தொடர்பான தோஷங்கள் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கக் கூடியவர். ஒருமுறை, சிவ பார்வதி திருமணத்திற்காக தேவர்கள் அனைவரும் வடதிசைக்குச் சென்றதால் நிலை குலைந்த பூமியை சமன்படுத்துவதற்காக, சிவபெருமான், அகஸ்தியரையும் அவரது மனைவியையும் தெற்கே உள்ள பாபநாசம் என்ற புண்ணியத் தலத்திற்கு அனுப்பி வைத்தார் என்றால், அகஸ்தியரின் சக்தி எப்படிப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ‘பாபநாசம்’ என்ற சொல்லிற்கு, ‘பாவங்களை அழிப்பது’ என்று பொருள். உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கும் சக்தி, இந்த புனிதத் தலத்திற்கு உண்டு என்பது நம்பிக்கை. இங்கு அகஸ்தியர் நிரந்தரமாக வாழ்கிறார் என்றும், இந்த இடத்தில் அவரை வழிபடுபவர்களுக்கு, அவரது அபாரமான அருளை வாரி வழங்குகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
குருபூர்ணிமா அன்று, அகஸ்தியர் என்றும் வாசம் செய்யும் புனிதத் தலமான பாபநாசத்தில், அவரது அருள் வேண்டி, 5 புரோகிதர்கள் நடத்தும் பிரம்மாண்டமான ஹோமம் செய்கிறோம். பிரத்யேகமான சக்தி வாய்ந்த இந்த தலத்தில் அகஸ்தியரை வழிபடுவதனால், பிரச்சினைகள் அனைத்தும் தீரும்; விருப்பங்கள் நிறைவேறும்; அறிவாற்றல், வெற்றி, நல்வாழ்வு கிட்டும், என்று ஆலய பாரம்பரியம் கூறுகிறது.
குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் இந்த சிறப்பான பௌர்ணமி தினத்தன்று, ஆஸ்ட்ரோவேத், சில சக்திவாய்ந்த வழிபாடுகளை நடத்துகிறது. இவை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி மற்றும் நல்வாழ்வு பெறுவதற்காக, அகஸ்தியர், 18 சித்தர்கள், சப்த ரிஷிகள் மற்றும் வேத வியாசர் ஆகியோரின் அபார ஆசிகளை, நீங்கள் பெற உதவும்.
ஆலய நடைமுறைகளின் படி, மகரிஷி அகஸ்தியருக்கு இந்த ஆலயத்தில் புனித ஹோமம் நடத்துவது, அனைத்து வகைப் பிரச்சினைகளையும் தீர்க்கும்; நியாயமான விருப்பங்களை நிறைவேற்றும்; உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தேடித் தரும்.
அகஸ்திய முனிவரே, அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் விளங்கும் சிவபெருமானாக வழிபடப்படும் ஒரே தலம், விக்ரமசிங்கபுரம் ஆலயம் ஆகும். அகஸ்திய முனிவருக்கும், அவரது மனைவி லோபாமுத்திரைக்கும் இந்தத் தலத்தில் அர்ச்சனை, பூஜை செய்வதனால், திருமணத் தடைகள் விலகும்; முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், என்கிறது ஆலய பாரம்பரியம்.
ஆலய நடைமுறைகளின் படி, 18 புகழ்பெற்ற சித்தர்களுக்கு இந்தப் புனிதத் தலத்தில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வது, அவர்களது கீழ்க்கண்ட சிறந்த ஆசிகளைப் பெற்றுத் தரும்:
ஒரு பிறவியில், ஒவ்வொருவரும், மூன்று வகைக் கடன்களைத் தீர்க்க வேண்டும் என்கின்றன புனித நூல்கள். இவை, தேவ ருணம் (தேவதைகளுக்கான கடன்), பித்ரு ருணம் (முன்னோர்களுக்கான கடன்) மற்றும் ரிஷி ருணம் (ரிஷி, முனிவர்களுக்கான கடன்) ஆகும். இதில், ரிஷி என்பவர்கள், வேதங்களில் கண்டுள்ள அபார ஞானத்தைப் பாதுகாத்து, வழிவழியாக வந்த மக்கள் பயன்பெற அளித்தவர்கள் ஆவார். பாரம்பரிய நடைமுறைகளின் படி, இந்த ஏழு பண்டைய முனிவர்களை வழிபடும் சப்த ரிஷி ஹோமத்தில் பங்கு கொள்வது, இவர்களுக்கான எல்லா கடன்களையும் தீர்த்து, அவர்களின் அருளாசிகளை வேண்டிப் பெற்றுத் தரும்.
குரு பூர்ணிமா அன்று, அறிவாற்றலின் கடவுளாக விளங்கும் மேதா தேவியின் ஆசிகளை நாம் வேண்டிப் பெறுகிறோம். மேதா சூக்தம் என்பது மஹாநாராயண உபநிஷத் நூலில் உள்ள மிக அழகான, சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்று. இது, இந்த அறிவுக் கடவுளை, உங்களிடம் அழைத்து வரும் ஆற்றல் வாய்ந்தது.
மேதா தேவி என்பவர் சரஸ்வதி தேவியின் அவதாரமாவார். இவர், அதிக நினைவாற்றல், நேர்மறை எண்ணங்கள், துணிவு, ஞானம், அறிவொளி, ஆக்கபூர்வ சக்தி, ஆரோக்கியம், புகழ் போன்றவற்றை அளிக்கக்கூடியவர். இந்தப் புனித மந்திரத்தை ஓதுவதன் மூலம், இந்த தேவியின் அருளை வேண்டிப் பெறலாம். மேலும் இது, வயது முதிர்ந்தவர்களுக்குக் கூட, உடலளவிலும், மனதளவிலும் இளமையை அளிக்கும், என்கின்றன புராணங்கள்.
குரு பூர்ணிமா, மாமுனிவரான வேத வியாசரின் பிறந்த தினத்தையும் குறிக்கிறது. எனவே, இந்த நாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர், மகாபாரதத்தை எழுதியவரும், வேதத்தைத் தொகுத்தவரும் ஆவார். குரு பூர்ணிமா நாளில், அர்ச்சனை செய்து இவரை வணங்குவதனால், அவருடைய ஆசிகளுடன் கூட, உங்களுக்கு அறிவும், ஞானமும் கிடைக்கும், என்று நம்பப்படுகிறது.
குரு பூர்ணிமா அன்று, ரிஷிகளுக்காக, முன்னோர்கள் வழிபாடான தர்ப்பணம் செய்வது என்பது, இந்தப் பண்டைய முனிவர்களுக்கு நீங்கள் செலுத்தும் மதிப்பு, மரியாதையாக இருக்கும். இது, அவர்களுடைய அபாரமான ஆசீர்வாதங்களையும் பெற்றுத் தரும், என்பது நம்பிக்கை.
ஆலய புராணங்களின் படி, வியாழ கிரகமான குரு பகவானும், காற்றின் கடவுளான வாயு பகவானும், கிருஷ்ண விக்கிரகத்தை இந்தத் தலத்தில் நிர்மாணித்தனர். இங்கு பால் பாயசம் படைப்பதன் மூலம், குரு, வாயு, கிருஷ்ணர் என்ற மூன்று தெய்வங்களின் அருளாசிகளும் உங்களுக்குக் கிடைக்கும்
மக்களுக்கு அன்ன தானம் செய்வது, பிரச்சினைகளைத் தீர்த்து, வாழ்க்கையில் அனைத்து வகை வெற்றிகளையும் அளிக்கும்; நேர்மறை ஆற்றல்கள், மன நிம்மதி போன்றவை பெற உதவும், என்கின்றன புராணங்கள்
தெய்வ தூதுவர்களாகக் கருதப்படும் சித்தர்கள், சக்தி வாய்ந்த ஆளுமைகளாகத் திகழ்கிறார்கள். மனித குலத்தின் நன்மைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் அவர்கள் அவதாரம் செய்தனர். ஆற்றல் நிறைந்த காலப் பொழுதான குரு பூர்ணிமாவின் பொழுது, அவர்களது ஆசிகளை நீங்கள் பெற உதவுவதற்காக, 27 புகழ்பெற்ற சித்தர்களுக்கு, அவர்கள் சமாதிக் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடத்துகிறோம். தங்கள் சமாதி ஆலயங்களில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சித்தர்கள், நம் பிரார்த்தனைகளுக்கும் செவிசாய்க்கிறார்கள்.
பெரும் மகானான சேஷாத்திரி ஸ்வாமிகள், திருவண்ணாமலை தலத்திலேயே வாழ்ந்து, அங்கேயே சமாதி ஆனவர். மிகுந்த ஆற்றல் வாய்ந்த இந்த மகானது பார்வை பட்டாலே போதும், உங்கள் முன்ஜன்ம கர்ம வினைகள் அழியும்; எதிர்காலம் நல்லமுறையில் மாற்றம் அடையும். சக்தி வாய்ந்த குரு பூர்ணிமா நாளில் சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு ஹோமம் செய்வது, நல்லதிர்ஷ்டம் மற்றும் நல்வாழ்வு தரும்; நோய்களை குணப்படுத்தும்; பொருள் மற்றும் ஆன்மீக விருப்பங்களை நிறைவேற்றும்; எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும்
ஆலய புராணத்தின் படி, சிற்றம்பல நாடிகள் என்ற புகழ் பெற்ற சித்தரும், அவரது 63 சீடர்களான சித்தர்களும், இந்தப் புனிதத் தலத்தில் சமாதி அடைந்தார்கள். எனவே இந்தத் தலம் ‘சித்த காடு’ என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்குப் பூஜை செய்வது, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்; இவர்கள் அனைவரின் ஆசிகளையும், ஒருசேர பெற்றுத்தரும்
டாக்டர் பிள்ளை அவர்களின் வழிகாட்டுதல்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, சத்குரு ஷீரடி சாய் பாபாவின் 4 விக்ரகங்களுக்கு அர்ச்சனை செய்வது, உங்களுக்கு செல்வம், நல்ல ஆரோக்கியம், நிதிநிலையில் ஸ்திரத்தன்மை, நல்வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கும்

குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் பௌர்ணமி (முழு நிலவு) தினமான இந்த குரு பூர்ணிமா என்பது, ஒவ்வொருவரும் பொருள், ஆன்மிகம் என இரண்டிலும் பெரு வளர்ச்சி காண உதவும், முக்கிய தருணமாகும். இந்த நாளில், சந்திரனிடமிருந்து விசேஷ ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தினம், இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினமாகத் திகழ்கிறது. இது, குருவின் அருளைப் பெறுவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக விளங்குகிறது. எங்கள் குரு பூர்ணிமா விசேஷ ஹோமம் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டு, பொருள் மற்றும் ஆன்மிக செல்வம் அருளும், குருமார்களின் அபார ஆசிகளைப் பெற்றிடுங்கள்.
பிரசாதங்கள்
ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

யோக பாரம்பரியத்தில், குருவின் பாதங்கள் (திருவடிகள்) போற்றி வணங்கப்படுகின்றன. உடலின் மிக முக்கிய பாகங்களாகக் கருதப்படும் இவற்றின் வழியாகவே, தெய்வீக உணர்வுகள் பாய்கின்றன என்று கருதப்படுகிறது. குரு பாதங்களின் படத்தை வைத்துக் கொள்வது ஒரு தொழில்நுட்பம் எனலாம். இதன் மூலம், நீங்கள் எங்கிருந்தாலும், அந்த இடத்திலிருந்தே, குருவின் அற்புத ஆற்றலின் பயனை நீங்கள் அடைய முடியும். இந்த குரு திருவடி க்யூப் என்பது, கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ள மிக விசேஷமான முப்பரிமாண வடிவமாகும். இது, பௌர்ணமி தினத்தன்று, உங்களுக்காக பிரத்யேகமாக சக்தியூட்டப்பட்டு, அதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும்.
குறிப்பு:
வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

தமிழ் சித்தர்களின் தலைவராக விளங்கும் அகஸ்தியர், குருவாகப் போற்றி வணங்கப்படுகிறார். இவரது தெய்வீக ஞானம், தெய்வங்களின் தெய்வமாக விளங்கும் சிவபெருமானின் ஞானத்திற்கு சமமானதாகக் கருதப்படுகிறது. இவரது விக்கிரகத்தை உங்கள் பூஜை அறையிலோ அல்லது வழிபாடு நடத்தும் இடத்திலோ வைத்துக் கொள்வது, அவரது ஆசிகளை உங்களுக்குப் பெற்றுத் தரும்.
குறிப்பு:
வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
400.jpg)
ஆற்றல் வாய்ந்த குரு பூர்ணிமா வழிபாடுகளில் சக்தியூட்டப்படும், குணமளிக்கும் திறன் கொண்ட இந்த மாலை, குருவின் ஆசிகளைப் பெறவும், உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நல்ல முறையில் மாற்றியமைக்கவும், பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவும் உதவும்.
குறிப்பு:
வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
400.jpg)
ஆற்றல் வாய்ந்த குரு பூர்ணிமா வழிபாடுகளில் சக்தியூட்டப்படும், விசேஷமான இந்த ஆன்மீக மாலை, குருவின் சிறந்த ஆசிகளைப் பெற்றுத் தர வல்லது. இந்த மாலை, அறியாமையை அகற்றும். விழிப்புணர்வை ஏற்படுத்தித் தரும். நினைவுத் திறனைப் பெருக்கும்.
குறிப்பு:
வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

குரு பூர்ணிமா அன்று, 2 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரத்யேகமான சப்தரிஷி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம், சப்தரிஷிகள் எனப்படும் 7 மாபெரும் ரிஷிகளை வழிபட்டு, அவர்களின் ஒருமித்த ஆசிகளைப் பெறுங்கள். பாரம்பரிய முறைப்படி, சப்தரிஷிகளுக்குச் செய்யப்படும் இந்த சப்தரிஷி ஹோமம் மூலம், வேதங்களைப் பாதுகாத்து அதன் உயரிய ஞானத்தை பல தலைமுறைகளுக்கு பயன்படும் வகையில் அளித்த ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடன்கள் அனைத்தையும் அடைக்க இயலும். மேலும், அவர்களது அருளாசிகளையும் பெற இயலும்.
பிரசாதங்கள்
ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

தெய்வீக அருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வழி, பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பது தான், என்று பெரும் சித்தர்கள் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு, உணவிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் 54 அல்லது 108 பேருக்கு, பௌர்ணமி நாளில், உங்கள் சார்பாக, நீங்கள் உணவளிக்கலாம். இது போல அன்னதானம் செய்வது, பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபடவும், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறவும் உதவும். மக்களுக்கு உணவளிக்கும் இந்த சேவையில் இணைவதால், நீங்கள், நேர்மறை ஆற்றல்களையும், மன நிம்மதியையும் உங்களிடம் ஈர்த்துப், பயன்பெற முடியும்.
அன்னதானம் – 54 நபர்களுக்கு
அன்னதானம் – 108 நபர்களுக்கு