பசுக்கள் மிகவும் புனிதமான விலங்குகளாக கருதப்படுகின்றன. வைதீக நூல்களின்படி, அனைத்துத் தேவாதி தேவர்களும் ஒரு பசுவில் வாசம் செய்கிறார்கள். எனவே பசுவிற்கு உணவளிக்கும் இந்தப் புனித செயல், அனைத்துக் கடவுள்களுக்கும் உணவளிப்பதற்குச் சமம் ஆகும். பசுவிற்கு உணவளிப்பது மிகவும் புனிதமானது என்று வேத நூல்கள் கூறுகிறது. மேலும் சகல சௌபாக்கியங்களையும், செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியையும் பெறுவதற்கு செய்யக்கூடிய புனிதமான செயல்களுள் இது மிகச்சிறப்பானதாகும்.
ப்ருஹத் பராஸரா ஸ்மிருதி கூறுகின்றபடி, மொத்தம் 33 கோடி (330 மில்லியன்) கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் யாவரும் புனிதமான பசுவில் வாசம் செய்கின்றனர். எனவே பசுவிற்கு உணவு அளிப்பது தெய்வங்களுக்கு உணவளிப்பதற்குச் சமமானதாக கருதப்படுகிறது.
அஸ்ட்ரோவேட், புதிய பசு உணவுத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தினசரி உணவும், தண்ணீரும் ஒரு பசுவிற்கு தொடர்ந்து வழங்குவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் திட்டம் உங்கள் மூதாதையர்களை திருப்திபடுத்தும் வகையில் சக்திவாய்ந்ததாக கருதப்படும் மஹாளய அமாவாசை அன்று தொடங்குகிறது. மஹாளய அமாவாசை அன்று பசுவிற்கு உணவளிப்பது புனிதமான செயலாகக் கருதப்படுகிறது.
மஹாளயபட்சம் என்பது உங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்குவதற்கும் அவர்கள் மோட்சத்தை அடைவதற்கும் உதவியாக இருக்கும் பொருத்தமான பதினைந்து நாட்களாகும். சக்தி வாய்ந்த பதினைந்தாவது நாளான மஹாளய அமாவாசை அன்று பசுவிற்கு உணவளிப்பது மிகவும் புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. உங்கள் மூதாதையர்களை சந்தோசப்படுத்தும் வகையில் உங்கள் பிரார்த்தனைகளை மேலும் வலுப்பெறச் செய்கிறது. பித்ரு தோஷத்தை நீக்குகிறது.
பசுக்களின் பின்புறத்தில் லட்சுமி தேவி இருப்பதாகப் புனித நூல்கள் கூறுகின்றன. ஒரு பசுவிற்கு ஊட்டச்சத்து மற்றும் உணவு அளிப்பது தான் சிறந்த லட்சுமி பூஜை என்று நம்பப்படுகிறது. இது அளவற்ற செல்வச் செழிப்பை அளிக்கக்கூடிய லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு உதவும்.
ப்ருஹத் பராஸரா ஸ்மிருதி, என்கிற புனித நூல் சொல்வது என்னவென்றால், தினசரி புல் மற்றும் நீரைக் கொண்டு பசுக்களுக்கு உணவளிப்பது, அஸ்வமேத யாகம் (உயர்ந்த நிலை, பணம் மற்றும் செல்வத்தை பெறுவதற்கான வைதீக தொழில்நுட்பம்) செய்வதற்கு சமமான பலனைத்தரும்.
பகவத் கீதையில் கிருஷ்ணர், ஒருவர் தமது சொந்த பசுவிற்கோ அல்லது மற்றவர்களின் பசுக்களுக்கோ உணவளிக்கும்போது அவர் மோட்சத்தை அடைகிறார் என்று கூறுகிறார். மேலும் பசுக்களின் நன்மைக்காக வேலை செய்யும் ஆத்மாக்கள், வாழ்விற்குப் பின் பிரம்ம லோகத்தை (விண்ணுலகம்) அடைவார்கள் என்றும் கூறுகிறார்.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு அஸ்ட்ரோ வேடின் பசுவிற்கு தினசரி உணவளிக்கும் முயற்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் முதல் உணவளிக்கும் செயலை வருகின்ற மஹாளய அமாவாசை அன்று தொடங்குங்கள். சக்தி வாய்ந்த இந்தத் தினத்தில் அமைதியற்ற உங்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை அமைதிப்படுத்துவதற்கும் மூதாதையரின் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் செய்யப்படுகிறது. எங்கள் 3 மாத, 6 மாத அல்லது 12 மாத தொகுப்பு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். செல்வச் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு தினசரி பசுவிற்கு உணவளிக்கும் இந்தப் புனித செயலில் பங்குகொள்ளுங்கள்.