Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
பசுவிற்கு உணவளிக்கும் நிகழ்ச்சி : தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுதல் - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தை அமாவாசை அன்று பசுதானம் செய்யுங்கள்

உங்கள் மூதாதையர்கள் முக்தி பெற உதவுங்கள் மற்றும் தோஷங்களில் இருந்து நிவாரணம் காணுங்கள்

மிகவும் கருணை மிக்க இந்த செயல் உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் செல்வம், நல்வாழ்வு மற்றும் செழிப்பை வழங்குகிறது

தொகுப்புகளைப் பார்வையிடுங்கள்
SIGN UP NOW

“பசுக்களை தானம் செய்வது மற்ற அனைத்தையும் விட மேலானது. பசுக்கள் மிக உயர்ந்தவை மற்றும் புனிதமானவை.

~ மகாபாரதம், வழிமுறைகள் புத்தகம், 83-3

கண்ணோட்டம்


பசு தானம்: உயர்ந்த மற்றும் புனிதமான செயல்

பல வகையான தானங்கள் இருந்தாலும், பசுவை தானம் செய்வது, வாழ்நாளில் செய்யக்கூடிய அனைத்து தானங்களிலும் மிக உயர்ந்ததாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. பண்டைய நூல்களின்படி, ஒரு பசுவை தானம் செய்வதன் மூலம், ஓருவர் தம் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து தங்களையும் தங்கள் முன்னோர்களையும் விடுவித்துக் கொள்ள முடியும். புனித நூலான பவிஷ்ய புராணத்தின் படி, ‘கோ தானம்’ அல்லது பசு தானம் ஒரு புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. இது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கும் மற்றும் மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் நமக்கு ஒரு இடத்தை பெற்றுத் தரும்.

பசு தானத்தின் வேதப்பூர்வ முக்கியத்துவம்

புனித நூலான கருட புராணத்தின் படி, ஒரு பசு ஒரு ஆத்மாவை மூன்று வகையான நரகங்களுக்கு அப்பால் சுமந்து செல்லும் மற்றும் தற்போதைய மற்றும் முந்தைய பிறவிகளில் செய்த அனைத்து வகையான பாவங்களையும் நீக்கும். பூலோகத்தில் இருந்து புறப்பட்ட ஆன்மா சகிக்க முடியாத நாற்றமடிக்கும் ‘வைத்தரிணி’ எனும் நதியைக் கடக்க வேண்டும். பசுதானம் செய்வது, முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கும் புனித பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு, உங்கள் மூதாதையர் ஆன்மாக்கள் அந்த ஆற்றைக் எளிதாக கடக்க உதவும் என்றும் இந்தப் புனித நூல் குறிப்பிடுகிறது.

பசு தானம் செய்வதன் புண்ணியம்

இந்து பாரம்பரியத்தில் பசு மிகவும் புனிதமான விலங்காகக் கருதப்படுகிறது மற்றும் அதன் உடல் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கும் வசிப்பிடமாக நம்பப்படுகிறது. பசுவை தானமாக வழங்குவது மட்டுமல்லாமல் அதன் கன்றுக்குட்டியையும் சேர்த்து தானம் செய்வதும், பசு மற்றும் கன்றுக்குட்டியை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க நிதியுதவி வழங்குவதும் முக்கியம்.

புனித நூல்களின்படி, ஒரு பசுவை தானம் செய்வது உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் செல்வம், நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் மகத்தான ஆசீர்வாதங்களை வழங்குகிறது.

  • ஜாதகத்தில் உள்ள அனைத்து வகையான கிரக தோஷங்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது
  • எதிரிகளை வெல்ல உதவுகிறது
  • லக்ஷ்மி தேவியின் தெய்வீக அருளை வழங்குகிறது
  • தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகளை நீக்குகிறது
  • விபத்து மற்றும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது
  • செல்வம், செழிப்பு மற்றும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அளிக்கிறது
  • துன்பங்களை அழிக்கிறது
  • சாதகமான வாழ்க்கைத் துணை மற்றும் சந்ததிகளை வழங்குகிறது
  • உங்கள் தற்போதைய மற்றும் கடந்தகால வாழ்க்கையின் பாவங்களை நீக்குகிறது
  • ஏழரை சனி, அஷ்டம சனி & அர்த்த அஷ்டம சனி, ஆகியவற்றின் பாதகமான தாக்கங்கள் மற்றும் ஜாதகத்தில் காணப்படும் ராகு-கேது தோஷங்களை குறைக்க உதவுகிறது.

கோ தான நிகழ்ச்சி தொகுப்பு

கோ தான நிகழ்ச்சி தொகுப்பு
கோ தான நிகழ்ச்சி தொகுப்பு
தனிப்பட்ட கோ தான திட்டம்

தை அமாவாசை அன்று பசுவை தானம் செய்து முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவது, உங்கள் முன்னோர்கள் விமோசனம் அடைய உதவும். பண்டைய நூல்களின்படி, ஒரு பசுவை தானம் செய்வதன் மூலம், ஒருவரின் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து உங்களையும் உங்கள் முன்னோர்களையும் விடுவிக்க முடியும். ஒரு பசுவை தானம் செய்வதன் மூலம் உங்கள் மூதாதையரின் ஆன்மாக்கள் வைதரிணி நதியை எளிதாக கடக்க உதவும் (அனைத்து தெய்வங்களையும் தன்னுள் கொண்ட புனித பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு).

குறிப்பு: ஒரு வருடத்தில் சக்தி வாய்ந்த அமாவாசை நாட்களில் (மஹாளய / தை அமாவாசை / ஆடி அமாவாசை) மட்டும் பசு தானம் செய்வோம். இந்த சிறப்பு அமாவாசை தினங்களுக்கு இடையே ஒரு ஆர்டரைப் பெற்றால், அது வரும் அமாவாசை நாளில் நிகழ்த்தப்படும்

பசுவிற்கு தீவனம் அளிக்கும் திட்டத் தொகுப்பு

பசுவிற்கு உணவளிக்கும் திட்டம்
பசுவிற்கு உணவளிக்கும் திட்டம்

உங்கள் கட்டணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்கவும்

தொகுப்பு விவரம்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக தினசரி பசுவிற்கு உணவளிக்க ஆதரவு வழங்கும் ஆஸ்ட்ரோவேதின் முயற்சியில் சேரவும். உங்கள் மூதாதையர்களின் அமைதியற்ற ஆன்மாக்களைத் திருப்திப்படுத்தவும், மூதாதையரின் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறவும் வரவிருக்கும் அமாவாசையில் முதல் உணவளிப்பதை தொடங்குங்கள். எங்கள் 3-மாதம், 6-மாதம் அல்லது 12-மாத பங்கேற்பு திட்டங்களில் உங்கள் விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக ஆசீர்வாதங்களை வேண்டி தினமும் பசுவிற்கு உணவளிக்கும் புனித செயலில் எங்களுடன் இணையுங்கள்.