3-புரோகிதர்கள் நடத்தும் அன்னபூர்னேஸ்வரி ஹோமம்
(பற்றாக்குறை நீக்கும் மற்றும் செழிப்பு கொழிக்கும் ஹோமம்)
நேரலை ஆகஸ்ட் 3, 2021 (இந்திய நேரப்படி)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
ஆடிப் பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் செழிப்பு மற்றும் வளம் கொழிக்கும் பண்டிகை நாள் ஆகும். இந்த நாளில் தேவியின் ஆற்றல் நிறைந்து இருக்கும். உணவு, ஊட்டச்சத்து,செழிப்பு ஆகியவற்றின் தெய்வமான அன்னபூர்னேஸ்வரியின் ஆசீர்வாதங்கள் இந்த நேரத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆடிப் பெருக்கின் போது, அன்னபூர்னேஸ்வரி தேவியை வணங்கி வழிபடுவதன் மூலம் உணவுப் பற்றாக்குறை நீங்கும். வாழ்க்கையில் செழிப்பும் வளமும் பெருகும்.
ஆடிப்பெருக்கு நன்னாளில், அண்ணபூர்னேஸ்வரி தேவி மகிழ்ச்சி அடைந்து நாம் வேண்டும் அனைத்தையும் தருகிறார். அவள் உணவு தானியங்கள், செல்வம், மக்கட்பேறு மற்றும் வெற்றி போன்ற வாழ்வியல் அம்சங்களை ஏராளமாக வழங்குகிறாள். மற்றும் அனைத்து வகையான தடைகளையும் நீக்குகிறாள். முழு பிரபஞ்சத்திற்கும் உணவளிக்கும் பார்வதி தேவியின் அவதாரமான அன்னபூர்னேஸ்வரி தேவியை பிரார்த்தனை செய்ய இந்த வருடத்தின் சிறந்த நாட்களுள் ஆடிப்பெருக்கு நாளும் ஒன்றாகும். இந்த நன்னாளில் உங்கள் எல்லா முயற்சிகளிலும் உங்களுக்கு முழுமையான வெற்றியையும், செல்வத்தையும், ஆனந்தத்தையும் அன்னை அள்ளித் தருவாள்.
இந்த நாளில் ஆசைகள் நிறைவேறுவது மற்றும் செழிப்பான வாழ்விற்கான ஆசீர்வாதங்கள் கிட்டுவது பற்றிய ஒரு ஆன்மீகக் கதை உள்ளது.கோமதி வடிவில் இருந்த பார்வதி தேவியின் வேண்டுகோளின் பேரில், சங்கரன்கோவில் என்ற புனித ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் சங்கமமாகி சங்கரநாராயணமாக ஒரே வடிவத்தில் தோன்றிய நாள் ஆடிப்பெருக்கு நாள். எனவே, உங்கள் ஆசைகளை நிறைவேற்றவும், உங்கள் வாழ்க்கையை செழுமையுடன் ஆக்கிக் கொள்ளவும் இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
வேத நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் தேவியின் ஆசீர்வாதங்களைப் பெற தேவியின் பல மடங்கு ஆசீர்வாதங்கள் கிட்டும் நன்னாளில் அஸ்ட்ரோவேத் அன்னபூர்னேஸ்வரி ஹோமத்தை நடத்துகின்றது. இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் அவளுடைய கிருபையால் வீட்டிலும் இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள உணவு பற்றாக்குறை நீங்கி,உங்கள் பொருள் தேவைகளும், நியாயமான ஆசைகளும் பூர்த்தி ஆகும். .
புனித நூல்களின்படி, ஆடிப்பெருக்கு நன்னாளில் அன்னபூர்னேஸ்வரி தேவியின் ஆசீர்வாதங்களை வேண்டி வழிபடுவதன் மூலம் பின்வரும் ஆசிகளை நீங்கள் பெற இயலும்:

ஆலய மரபுப்படி, இந்த ஆலயங்களில் அன்னபூர்னேஸ்வரி தேவியை வணங்குவதன் மூலம் உணவுப் பற்றாக்குறை நீங்கும். வாழ்வில் செழிப்பு மலரும். வாழ்வில் வரும் தடைகள் யாவும் நீங்கும்.

வேதங்களின்படி, முழு பிரபஞ்சத்திற்கும் உணவளிக்கும் அன்னபூர்னேஸ்வரி தேவிக்கு ஆடிப்பெருக்கு நன்னாளில் ஹோமம் நிகழ்த்தி வழிபடுவதன் மூலம், உங்களுக்கு வற்றாத செழிப்பு, நல்வாழ்வு மற்றும் ஏராளமான வளங்கள் பெற அன்னையின் ஆசீர்வாதங்களை கிட்டும்.

த்ரிஷதி என்றால் முந்நூறு என்று பொருள். மகாலட்சுமி த்ரிஷதி தேவியின் 300 நாமங்களைக் குறிக்கிறது. இதில் அவரது தெய்வீக பண்புகள், சக்திகள், ஒப்பிடமுடியாத அழகு மற்றும் சுபம் ஆகியவற்றை போற்றிக் கூறப்படுகின்றன. புனித நூல்களின்படி, மகாலட்சுமி தேவிக்கு இந்த பூஜை செய்வதன் மூலம் செல்வத்தை அடைவதற்கும், அடைந்த செல்வத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவதற்கும், துக்கம் மற்றும் கடனிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும், மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதற்கும் அறிவுக்கான அவரது கருணை மிகு ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.

ஆலய புராணத்தின் படி, ஆண்டாள், பூ தேவியின் (லட்சுமி தேவியே பூமாதேவி) அவதாரம் என்றும் ஆடி மாதத்தில் இந்த ஆலயத்தில் அவதரித்தார் என்றும் நம்பப்படுகிறது. இங்கே தேவிக்கு பூஜை செய்வதன் மூலம் விருப்பங்களை நிறைவேற்றவும், திருமணத்திற்கான தடைகளை நீக்கவும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழவும், அமைதியான மற்றும் சிக்கல் இல்லாத வாழ்க்கையை வாழவும் அன்னையின் அருளாசிகள் கிட்டுகின்றன.

சிதறு தேங்காய் எனப்படும் இந்தச் சடங்கு அனைத்து தடைகளையும் நீக்குகிறது. பாரம்பரிய நடைமுறையின்படி, இந்த சடங்கைச் செய்வது லாபத்தை மேம்படுத்துவதாகவும், தடைகளை நீக்கி பின் உணவு மற்றும் வறுமை பற்றாக்குறையை நீக்குவதாகவும் நம்பப்படுகிறது.

ஆடிப்பெருக்கு என்பது செழிப்பு மற்றும் வளம் பெருக்கும் பண்டிகை ஆகும். உணவு, ஊட்டச்சத்து, செழிப்பு ஆகியவற்றின் தெய்வமான அன்னபூர்னேஸ்வரியின் ஆசீர்வாதங்கள் இந்த நேரத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. பாரம்பரிய நம்பிக்கையின் படி, ஆடிப்பெருக்கின் போது அன்னையை பூஜை வழிபாடுகள் செய்து வணங்கி வழிபடுவதன் மூலம் அன்னையின் அருளால் வாழ்வில் பல மடங்கு வளமும், செழிப்பும் கிட்டும். அன்னபூர்னேஸ்வரி தேவி உணவுப் பற்றாக்குறையை நீக்கி, உணவு தானியங்கள், செல்வம், மக்கட்பேறு மற்றும் வெற்றி போன்றவற்றை நாம் வாழ்வில் பெற்று வளமாக வாழ ஆசிகளை வழங்குகிறார். வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து வகையான தடைகளையும் நீக்குகிறாள்.
குறிப்பு ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.
பூஜைப் பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட கயிறு மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

வற்றாத செல்வம், நல்வாழ்வு மற்றும் ஏராளமான வளங்களை நீங்கள் பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்திற்கே உணவளிக்கும் தெய்வத்தை ஆடி பெருக்கு நாளில் வணங்கி வழிபட உங்கள் தனிப்பட்ட அன்னபூர்னேஸ்வரி ஹோமத்திற்குப் பதிவு செய்யுங்கள். அன்னபூர்னேஸ்வரி தேவியை ஹோமம் செய்து வழிபடுவதன் மூலம், உணவுப் பற்றாக்குறை நீங்கும். உணவு தானியங்கள், செல்வம், மக்கட்பேறு, மற்றும் வாழ்வில் வெற்றி போன்றவற்றிற்கான ஆசிகளை நீங்கள் பெற இயலும் என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை.
பூஜைப் பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட கயிறு மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.