சோழிப் பிரச்னம் மிகச் சிறந்த பிரச்ன வகை ஆகும். உயிரோட்டம் கொண்ட சோழிகள் கர்மாவின் விளைவிற்கு ஏற்ப அதன் வீரியத்தைக் குறைக்க வழி வகை கூறி விடும். சோழிப் பிரச்னம் பார்க்க 108 சோழிகள் மற்றும் சரியான அளவு கொண்ட தேக்கு மரப் பலகை தேவை. இவை கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என பிரித்து பலன்களைக் கூறும். இந்த கலையை கற்றுக்கொள்ள இறையருள் தேவை. குல தெய்வ அருள், குருவின் அனுக்கிரகம் தேவை. கிரகங்கள், அவற்றின் குணங்கள், காரகத்துவங்கள், கிரஹ சஞ்சாரங்கள், பஞ்சாங்கத்தின் தெளிவு. இவற்றையெல்லாம் நன்கு கற்று, பிரசன்னம் கற்பித்த குருவை மனதார வணங்கி, பக்தியுடன் பிரசன்னத்தை முழுமையாகக் கற்று, பிரசன்னத்தைப் பார்க்கத் தொடங்க வேண்டும்.
பிரச்னம் என்ற சொல்லுக்கு கேள்விக்கு பதில் உரைத்தல் என்பது பொருள். ஜோதிடவியலில் பிரச்னம் ஒரு முக்கிய அம்சம் ஆகும். ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுவதே பிறப்பு சாதகம். அதே போலவே கேள்வி கேட்கும் நேரம், பிறக்கும் நேரமாகக் கொண்டு அப்போதைய நேரத்து கோள்களின் நிலைகளை ஆராய்ந்து பலன் கூறுவதே பிரச்ன முறை. பல்வேறு வழிகளில் பிரச்னம் பார்க்கப்படுகின்றது. சோழிப் பிரச்னம், தாம்பூலப் பிரச்னம் சாமக்கோள் பிரச்னம், எண் ஒன்றை சொல்லி அதன் அடிப்படையில் பதில் கூறுதல் என்பவை அவற்றில் சில ஆகும். இந்தப் பதிவில் சோழிப் பிரச்னம் பற்றிக் காண்போம்.
சோழிகள் பெரும்பாலும் பிரசன்னம் பார்ப்பதற்காக தான் பயன்படுத்தப் படுகின்றது. சோழியை சுழற்றி போட்டு, ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ன நடக்காது என்பதை, சோழி பிரசன்னம் பார்த்து ஒரு சிலர் மிகச்சரியாக கூறிவிடுவார்கள். இது அந்த காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி என பல வகையான சோழிகள் உள்ளன. சோழியில் மொத்தமாக 130 வகை சோழிகள் இருப்பதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சோழிகள் மகாலட்சுமியின் வடிவமாக பார்க்கப்படுகிறது.
சோழிப் பிரசன்னத்தில் சோழி நின்ற பாகையை கண்டறிவதன் மூலம், சோழி நின்ற நட்சத்திர பாதத்தை அறிந்து கொள்வது.
சோழி லக்னம் என்பது 12 ன் மடங்குகள் போக மீதம் உள்ள சோழிகளின் எண்ணிக்கையில் மேஷத்தை முதலாவது ராசியாக கொண்டு, லக்னத்தை அமைப்பது. உதாரணமாக எடுத்த சோழிகள் 56 எனில், 12 ன் மடங்குகள் 4 முறையாக 48 போய் விட்டால் மீதமுள்ளது 8 சோழிகள். மேஷத்தை முதலாவதாக கொண்டால் 8 என்பது விருச்சிகம். அப்படியென்றால் சோழி லக்னம் என்பது விருச்சிகம்.
அன்றைய தினத்தின், பிரசன்ன நேரமான காலை 10.மணி 06 நிமிடத்திற்கு கோச்சார லக்னம் என்பது மீனத்தில் 5 degree, 18 minutes, 48 secs.
எனவே இந்த பாகையையே விருச்சிக சோழி நின்ற பாகையாக கருத வேண்டும். விருச்சிகத்தில் 5.18.48 deg என்பது அனுஷம் 1 ம் பாதம் ஆகிறது.எனவே சோழி லக்னம் நின்ற நட்சத்திர பாதம் என்பது அனுஷம் 1.
சூரிய உதயத்திற்கு முன், உடலை சுத்தம் செய்து, தாய், தந்தையர், குலதெய்வம், குரு, இஷ்ட தெய்வங்களை நினைத்து, நவக்கிரகங்களை பிரார்த்தனை செய்து, கலக்கமில்லாத மனத்துடன் பிரசன்னம் பார்க்க வேண்டும்
பிரசன்ன பலகை 2 1/2 அடி நீளமும், 1 1/4 அடி அகலமும் இருக்க வேண்டும். விரிசல் கூடாது. தேக்கு மரத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த சக்கரத்தில், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள்,9 கிரகங்கள், 8 திக்குகள்,7 ஓரைகள்,6 அச்க்ஷாரகள்,5 பூதங்கள், 4 திசைகள், 3 தேவர்கள், 2 சக்திகள், 1 பிர்மாசாஸாம் பதிக்கப்பட்டிருக்கும். இடது பக்கம் அதாவது வடக்குப் பகுதியில் சூரிய சந்திரர்களுக்கு 2 சோழிகளும், பஞ்ச தெய்வங்களுக்கு 5 சோழிகளும், அவற்றின் கீழ் சிறிய சோழிகளாக 108 சோழிகளும் இருக்க வேண்டும்.
இந்த 108 சோழிகளுக்கு உதவ குறைந்தபட்சம் சில சோழிகளையாவது வைத்திருக்க வேண்டும். வலது பக்கம் அதாவது தெற்குப் பக்கம் “OM” என்றும் வரைய வேண்டும். ஓம் கீழ் ஒரு ராசி சக்கரத்தை வரைந்து, அந்த ராசி சக்கரத்தில் உள்ள 9 கிரகத்தை அன்றைய கிரக நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இத்துடன் மாந்திக்கு 1 சோழியும், உதய லக்னத்திற்கு 1 சோழியும், ஆருடத்திற்கு 1 சோழியும் தயாராக இருக்க வேண்டும். சொர்ண ஆருட 1 சோழி, எப்பரிச ராசிக்கு 1 சோழி, வெற்றிலை ஆருட 1 சோழி. மந்தியுடன் கூடிய பிரசன்னம் தோராயமாக 247 சோழிகளுடன் பார்க்கலாம்.
“ஆதித்யம் அம்பிகம் திருமலும் கணநாதம் மகேஸ்வரம்! “பஞ்சதெய்வான் சமரேன் நித்யம் சர்வ அபிஷ்ட அர்த்த சித்தயே” என்று தியானித்து, ஐந்து திவ்ய சோழிகளையும் வணங்கி பலகையில் வரிசையாக வைத்து 108 சோழிகளையும் இரு கைகளாலும் தொட்டு “ஓம் நமசிவாய” என்று 108 முறை சொல்லி பஞ்சாட்சரத்தை வணங்க வேண்டும்.
மேலே சொன்னது வழக்கமான நடைமுறை, அதாவது முதலில் சோழியை பிரசன்னம் சமர்ப்பித்து, பக்தியுடன் முதலில் சோழிகளை வழிபட்டு பாலில் காய்ச்ச வேண்டும். பிறகு தண்ணீர், பன்னீர், பஞ்சகவ்யம், பிறகு தண்ணீர், மஞ்சள் தண்ணீர் மற்றும் இறுதியாக தண்ணீர் (துடைக்க ஒரு தனி துணி வைத்து) கழுவி துடைக்க வேண்டும்.
தினமும் பாலில் கழுவிய பிறகு, தண்ணீரில் நன்கு கழுவி, கிழக்கு திசையை நோக்கி குறைந்தது ஒரு மண்டல நேரம் உட்கார்ந்து, சோழியை ஒரு பலகையில் வைத்து கைகளால் 108 ஆவர்த்தி பஞ்சாஷ்ரமத்தை மூடி ஜெபித்து, சோழிக்கு எங்கள் உபாசனையை ஏற்ற வேண்டும்.
நமது சோழிகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. தினமும் பஞ்சாட்சரம் மட்டும் தொட்டுக் கொள்ளாமல் அவர்களின் குல தெய்வங்களின் மந்திரங்களையும் சொல்லலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக வழிபடுகிறீர்களோ, அவ்வளவு வலுவாக உங்கள் வழிபாடு உங்களுக்கு உண்மையைக் காண்பிக்கும்.
சோழிப் பிரச்னம் காண பஞ்சாட்ச்சர ஜபம் அல்லது அட்சாட்சர ஜபம் தெரிந்திருக்க வேண்டும். பிரச்னம் பார்க்க வருபவரின் கேள்வியை முழுதாக மனதில் வாங்கிக் கொண்டு சின்ன பிரச்சினைகளாக இருந்தால் அட்சாச்சர ஜபத்தை மனதில் கூறிக் கொண்டு அவர்களின் பிரச்சனை தீர வேண்டும் என்று முழு மனதாக பிரார்த்தனை செய்து கொண்டு சோழிகளை குலுக்கி போட வேண்டும்.
ஒரு சிலர் 12 சோழிகளை வைத்து பலன் கூறுவார்கள். சோழிப் பிரச்னத்திற்கு 12 சோழிகள் தேவை. இதில், 1, 4, 5, 7, 9, 11, என்ற எண்ணிக்கையில் "நிமிர்ந்த" நிலையில் சோழிகள் இருந்தால், நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். இதற்கு எதிராக, 2, 3, 8, 10, 12 என்ற எண்களில் சோழிகள் நிமிர்ந்து இருந்தால் காரிய தாமதம் ஏற்படும். அத்துடன் மனதில் சஞ்சலமும், தவிப்பும் இருந்து கொண்டே இருக்குமாம்.