Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
Kairegai Jothidam Palan - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பிரச்சனை எதுவாக இருந்தாலும் கை ரேகை ஜோதிடம் தீர்வு தரும்!
நிபுணரிடம் பேச, விவரங்களை பதிவு செய்யுங்கள்!

கை ரேகை ஜோதிடம்

ஜோதிடம் அறிவியல் ரீதியாக உண்மையானது. முறையாகப் பயின்று சரியாக பயன்படுத்தினால் ஜோதிடம் மாதிரி ஒரு விஞ்ஞானம் கிடையாது எனலாம். ஜோதிடத்தில் பல முறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கைரேகை. இதுவும் ஒரு ஜோதிட சாஸ்திரம் ஆகும். இந்தியா சகல கலை ஞானங்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்கிறது. பல கலைகள் இங்கிருந்து தான் பிற தேசங்களில் பரவியதாக சொல்லப்படுகிறது. நமது சாஸ்திரங்கள் அயல் நாடுகளில் அனுபவப் பூர்வமாக பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றன. அப்படி மகோன்னதமாக உள்ள சாஸ்திரங்களில் இந்த ரேகை சாஸ்திரமும் ஒன்றாகும். இங்கிலாந்தில் இருந்த க்ஷீரோ என்னும் புனைப் பெயர் கொண்ட ஒரு அறிஞர் அநேக வருடங்கள் இந்தியாவில் இருந்து ஆராய்ச்சி செய்ததன் பலனாக ரேகை சாஸ்திரம் உலகம் எங்கும் பிரசித்தி ஆனது. நமது இந்தியாவிலும் அது பிரசித்தி ஆனது. கை ரேகை ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதி என்றாலும் சாமுத்திரிகா லட்சணம் என்ற நூலின் ஒரு பாகமே “ஹஸ்த ரேகை” என்று கூறப்படுகிறது. ஹஸ்தம் என்றால் உள்ளங்கை என்று பொருள்.

மனித சரீரம் முழுவதும் ரேகைகள் இருக்கின்றன என்றாலும் இங்கே கை ரேகையைப் பற்றியே முக்கியமாக சொல்லப்படுகிறது. ஆண்களுக்கு வலது கரமும் பெண்களுக்கு இடது கரமும் கவனிக்கத்தக்கவை ஆகும். மனிதப் பிறப்போடு ரேகைகள் சம்பந்தம் அமைந்து இருப்பதாக வெகு காலத்திற்கு முன்னரே வேத சாஸ்திரங்களை நன்கு உணர்ந்த மகான்களால் த்ரிகால ஞானிகளாய் இருந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மனிதர் தாம் வாழும் காலத்தில் அனுபவிக்க வேண்டிய கஷ்டத்தையும் சுகத்தையும். அதாவது பாவத்தையும் புண்ணியத்தையும் பெண்களுக்கு இடது கரத்திலும் ஆண்களுக்கு வலது கரத்திலும் ரேகை என்னும் பரிபாஷையில் குறிக்கப்பட்டுள்ளது.

மனிதர் கை, மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகின்றன. அவை தெய்வீகம், இயற்கை, தாந்திரீகம். வேறு வகையாகக் கூற வேண்டும் என்றால் சக்தி, ஸ்தூலம், சம்பத் என மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கினறன. விரல்களுக்கும் இந்தப் பகுதியில் தொடர்புண்டு. தத்துவ சாஸ்திரங்களில் ஆத்மா, மனம், சரீரம் என்ற இந்த மூன்றும் ஒன்றுக் கொன்று எப்படித் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதோ அப்படியே இதற்கும் சம்பந்தம் உண்டு. ஐந்து விரல்களும் ஐந்து கிரகங்களை குறிக்கின்றன. உள்ளங்கைக்கு மேலே, விரல்களுக்கு அடியில் உள்ள மேடுகள் கிரகங்களின் பலாபலத்தை தெரிவிக்கினறன. ஆள்காட்டி விரல் – குரு ; நடுவிரல் – சனி; மோதிர விரல் சூரியன்; சுண்டு விரல்-புதன் புதனுக்கு அடுத்த கீழ் பாகம் – செவ்வாய்; கட்டை விரலுக்கு கீழேயுள்ள மேடு – சுக்கிரன் ; உள்ளங்கையில் செவ்வாய்க்கு அடுத்த கீழ் மேடு சந்திரன்

கை ரேகை ஜோதிடம்

ரேகைகளின் பெயர்கள்

நான்கு விரல்களுக்கு அடியில் நீண்ட ரேகைக்கு இருதய ரேகை என்று பெயர். இந்த ரேகை தெய்வீகமானது. செவ்வாய் மேட்டில் இருந்து உற்பத்தியாகி குறுக்கே போகும் ரேகைக்கு புத்தி ரேகை என்று பெயர். கட்டை விரலுக்கு அடியில் சுக்கிர மேட்டை வளைத்து போகும் ரேகை ஆயுள் ரேகை என்று பெயர். சந்திர மண்டலத்திற்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் உள்ள ரேகைக்கு விதி ரேகை என்று பெயர்.

அங்குலாஸ்தி

ஒவ்வோரு விரலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி பிரிக்கப்பட்ட பாகத்திற்கு “அங்குலாஸ்தி” என்று பெயர். முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டவது அங்குலாஸ்தி ஸ்தூலத்தைக் குறிக்கறது. மூன்றாவது அங்குலாஸ்தி சம்பத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு விரலின் முதல் அங்குலாஸ்திக்கும் பிரத்யேகமான மகிமை இருக்கிறது.கட்டை விரல் – ஆத்ம சக்தி ஆள்காட்டி விரல்- சக்தி ; நடுவிரல் – விதிப்பயன் ; மோதிர விரல் – பிரகாசம்; சுண்டு விரல் – சாஸ்திரம்;

சாதாரணமாய் கையில் காணப்படும் ரேகைகள்

ஆயுள் ரேகை,

மணிக்கட்டிலிருந்து கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று வளைந்து செல்லும் ரேகையை தான் ஆயுள்ரேகை என்பார்கள். ஆயுள் ரேகை அமைந்திருக்கும் நீளம், அடர்த்தி போன்றவற்றை கொண்டு ஒருவரின் உடல் ஆரோக்கியம், ஆயுள், எதிர்காலம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மணிக்கட்டு வரை நீண்டு காணப்பட்டால் அவர்களின் ஆயுள் அதிகமாக இருக்கும். சீராக இல்லாமல் இடையில் வளைந்து வளைந்து சென்றால் ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள்.

இருதய ரேகை,

மணிக்கட்டிலிருந்து கட்டைவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று வளைந்து செல்லும் ரேகையை தான் ஆயுள்ரேகை என்பார்கள். ஆயுள் ரேகை அமைந்திருக்கும் நீளம், அடர்த்தி போன்றவற்றை கொண்டு ஒருவரின் உடல் ஆரோக்கியம், ஆயுள், எதிர்காலம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மணிக்கட்டு வரை நீண்டு காணப்பட்டால் அவர்களின் ஆயுள் அதிகமாக இருக்கும். சீராக இல்லாமல் இடையில் வளைந்து வளைந்து சென்றால் ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள்.

புத்தி ரேகை,

ஆயுள் ரேகையிலிருந்து பிரிந்து இருதய ரேகைக்கு நடுவில் செல்லும் ரேகையை தான் புத்தி ரேகை என்பார்கள். இந்த புத்தி ரேகை மணிக்கட்டை நோக்கி அப்படியே திரும்பி சென்றால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மணிக்கட்டை நோக்கி திரும்பாமல், சுக்கிர மேட்டை நோக்கினால் அறிவாற்றலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் புரிந்து கொள்ளும் திறமை இவர்களிடம் இருக்கும். ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் ஒன்றாக இருப்பவர்களை விட தனித்தனியே பிரிந்து காணப்பட்டால் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

விதிரேகை அல்லது அதிர்ஷ்ட ரேகை(சனி ரேகை)

விதிரேகை பளிச்சென்று சிலரது கைகளில் தென்படும். இந்த ரேகை மணிக்கட்டிலிருந்து இருதய ரேகைக்கும் புத்தி ரேகைக்கும் இடையில் நேராக செல்லும் படியாக இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அமைப்பில் இருக்கும். இந்த ரேகை செல்வத்தையும், வசதி வாய்ப்புகளையும் குறிக்கும். இது எந்த அளவிற்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை வசதி இருக்கும். ஒரு சிலருக்கு இந்த ரேகையே இருக்காது. அவர்கள் வாழ்க்கையில் பெரும் போராட்டங்களை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

சூரிய ரேகை (தன ரேகை),

சூரிய ரேகை அனேக விஷயங்களுக்கு ஆதாரமாயிருக்கிறது. வித்தை, கல்வி, பேசும் திறமை, வாக்கு சாதுரியம் காரிய சித்தி இவைகள் பொதுவாக சூரிய ரேகையைப் பொறுத்து இருக்கும். பொதுவாக தனரேகை அல்லது அதிர்ஷ்ட ரேகை என்று இதனைச் சொல்வார்கள்

ஆரோக்கிய ரேகை,

ஆரோக்கிய ரேகை பொதுவாக ஆயுள் ரேகையின் இறுதிக் கடியிலாவது அல்லது ஆயுள் ரேகையிலிருந்தாவது உற்பத்தியாகி சந்திர மேட்டின் வெளியில் அல்லது உள்ள்ளங்கை அல்லது புதன் மேட்டை நோக்கியும் போய் நின்றுவிடும். இந்த ரேகை சிலரிடத்தில் காண்பது அரிது.

ஐக்கிய ரேகை,

சுண்டு விரலுக்கு அடியில் இருதய ரேகைக்கு மேலே இந்த ஐக்கிய ரேகைகள் அமைந்து இருக்கும். இவை அழுத்தமாய் ஆழமாய் பதிந்து இருக்கும் ரேகைகள் விவாகத்தை குறிக்கும். அதிகமாய், மெல்லியதாய் குட்டையாய் இருந்தால் விவாகம் அல்லாத சம்பந்தத்தைக் குறிக்கும்.

அருள் ரேகை

இந்த ரேகை சந்திர மேட்டில் செவ்வாய் மேட்டின் அடியில் செங்குத்தாய் குட்டையாக அல்லது நீளமாக அமைத்து இருக்கும். புத்தி ரேகைக்கும் அருள் ரேகைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதால் அருள் ரேகை புத்தி ரேகையில் படிந்து சந்திர மேட்டில் விளங்கும். இந்த ரேகை அமையப் பெற்றவர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.

கைரேகை பலன்கள்

ஒருவரின் கை ரேகையை வைத்து அவரின் .கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிக் கணித்துக் கூறலாம். அது மட்டும் அன்றி ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களான திருமணம், வேலை, உத்தியோகம் உடல் ஆரோக்கியம், ஆயுள், எதிர்காலம் என கை ரேகை வைத்து துல்லியமாக பலன் கூற இயலும். அனைவரின் கைரேகையும் ஒரே மாதிரி இருக்காது. அதே போல் அனைத்து ரேகைகளும் அனைவருடைய கையிலும் இருக்காது. குறிப்பாக செவ்வாய் ரேகை. மிக சிலரின் கையில் மட்டுமே செவ்வாய் ரேகை இருக்கும். அப்படி செவ்வாய் ரேகை உடையவர் அதிர்ஷ்டசாலிகள் என கருதப்படுகிறார்.ஒருவருடைய செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு காரணம் மங்கள ரேகையாகும். இதை செவ்வாய் ரேகை என்றும் சொல்வார்கள். கையில் மங்கள ரேகை இருப்பவர்களுக்கு பண பற்றாக்குறை என்பது வரவே வராது. அவர்களிடம் ஏதாவது ஒரு வகையில் காசு வந்து கொண்டே இருக்கும். அதே போல் வேலை, தொழில் என அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருக்கும். தொட்டது எல்லாம் துலங்கும் என்பார்களே அது இவர்களுக்கு தான் பொருந்தும்.

மேலும் உங்கள் கை ரேகை சம்பந்தமான விஷயங்களை உங்களுக்கான துல்லியமான பலன்களை தங்கவேலு ஐயா மூலம் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்

கைரேகை நிபுணர் திரு தங்கவேலு ஐயா அவர்கள் அனுபவம் மிக்கவர். ஆழ்ந்த ஞானம் கொண்டவர். உங்கள் கை ரேகையே உங்களின் வழிகாட்டி என்ற சொற்றொடர் தான் இவருக்கு கை ரேகை கலையில் ஆர்வம் ஏற்படக் காரணம் எனலாம். ஜாதகம், கோட்சாரம் கிரகங்கள் என்று அல்லாமல் உங்களின் கை ரேகையை வைத்து துல்லியமாக பலன் கூறுகிறார். 50 ஆண்டு அனுபவம் உள்ள இவரை ஜோதிடக் கடல் என்றே கூறலாம். அது மட்டும் அன்று இவர் பல பேருக்கு ஜோதிட கலை கற்றுத் தரும் ஆசானாகவும் திகழ்கிறார். இவர், கை ரேகையை வைத்து ஒருவரின் இறந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி துல்லியமாகக் கூறுகிறார்.