தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் வெவ்வேறு நான்கு மாதங்கள் மும்மூரத்திகளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. அதாவது சித்திரை, ஆடி, ஐப்பசி, தை – இந்த நான்கு மாதங்களும் பிரம்மாவுக்குரிய காலங்கள் ஆகும். இதனை விஷு புண்ணிய காலம் என்று கூறுவார்கள். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – இந்த நான்கு மாதங்களும் விஷ்ணுவுக்குரிய காலங்கள் ஆகும். இதனை விஷ்ணு பதி புண்ணிய காலம் என்று கூறுவார்கள். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – இந்த நான்கு மாதங்களும் சிவனுக்குரிய காலங்கள் ஆகும். இதனை ஷட சீதி புண்ணிய காலம் என்று கூறுவார்கள். மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளாக பகவான் விஷ்ணு விளங்குகிறார்.அவருக்கு உரிய மாதமாக இந்த ஆவணி மாதம் திகழ்கிறது.
விஷ்ணுபதி எப்பொழுது நிகழும்?:
நவ கிரகங்களின் நாயகனாக விளங்கும் சக்திவாய்ந்த சூரியன், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய இராசிகளில் நுழையும் போது விஷ்ணுபதி ஏற்படுகிறது. இந்த நிகழ்வு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வருடத்திற்கு நான்கு முறையும் நிகழ்கிறது.அந்த வகையில் இந்த தமிழ் மாதம் அதாவது ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் நுழையும் காலம் ஆகும். இது விஷ்ணுபதி புண்ணியகாலமாக கருதப்படுகிறது..
பொருளும் அருளும் வழங்கும் விஷ்ணு
இறைவன் விஷ்ணு நமது வாழ்க்கையைப் பாதுகாத்து, நிலைநிறுத்துபவராக உள்ளார். அவர் தர்மம், சத்தியம், ஒழுக்கம் மற்றும் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றின் அடையாளமாகக் காணப்படுகிறார். தமது துணைவியார் லக்ஷ்மியுடன் சேர்ந்து, அவர் நமக்கு பொருள் வளத்தை அளிக்கிறார். செல்வங்களை அள்ளித் தருபவராக இருக்கிறார்.விஷ்ணுபதி காலத்தில் விஷ்ணு தன்னுடைய அருள் மற்றும் ஆசீர்வாதங்களை உண்மையுடன் நாடுபவர்களுக்கு செல்வம், வளம் மற்றும் பொருளாதார வெற்றியை வரங்களாக அருளுகின்றார். “விஷ்ணுபதி புண்ய காலம்” என அழைக்கப்படும் இந்த தெய்வீக காலப்பகுதி, மனதில் காணப்படும் வேண்டாத எண்ணங்களை விரைவாக நீக்கும், ஆன்மிக வளர்ச்சியை விரைவாக எட்ட உதவும் மேலும் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் மிகச் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரமே அந்த ஆற்றலை அணுகி, உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டிக்கொள்ளும் சிறந்த தருணமாகும்.
தனவசியத்திற்கான பரிகாரம்
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தன வசியத்திற்கான இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் நீங்கள் விஷ்ணுவின் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். பிறகு சிறிது நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உடைபடாத முழுமையான ஏலக்காய் ஐந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மூடி உள்ள ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். அதனை விஷ்ணுவின் படத்திற்கு முன் வைத்து தூப தீபம் ஏற்றுங்கள். விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவற விட்டவர்கள் இந்த ஆவணி மாதம் வரும் ஏகாதசி அன்று அதாவது நாளைய தினம் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். பூஜை செய்து முடித்து விட்டு அதனை உங்கள் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஏகாதசி வரும் போது மீண்டும் இதே மாதிரி பரிகாரம் மேற்கொள்ளுங்கள். முதலில் போட்ட ஏலக்காயை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிதாக ஏலக்காய் போட்டுக் கொள்ளுங்கள். நாணயங்கள் அதிகம் சேர்ந்த பிறகு கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள்.
இந்த பரிகாரத்தை நீங்கள் நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். இது ஒரு எளிய பரிகாரம் தான். ஆனால் அதிக அளவில் நன்மை அளிக்க வல்லது. இந்த பரிகாரத்திற்கு தன வசியத்தை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வர தன தானியங்கள் உங்கள் வீட்டில் அதிகம் சேரும். செல்வா வளம் பெருகும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025