சொந்த இடம் வாங்குவது பலரின் கனவாக இருக்கும். ஒரு சிலர் இடமாக வாங்கி வீடு கட்டுவார்கள். ஒரு சிலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஒரு சிலர் எதிர்கால நலன் கருதி இடத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். தேவைப் படும் போது விற்று காசாக்கிக் கொள்ளலாம் என்று இருப்பார்கள். வேறு சிலரோ அவசர தேவை கருதி விற்பார்கள். வேறு சிலர் இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக வேறு வழியே இல்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டையோ நிலத்தையோ விற்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். வீட்டை விற்றுத் தான் திருமணம் நடத்த வேண்டும். வீட்டை விற்றால் தான் கடன் அடைக்க முடியும் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் தாங்கள் முயற்சி செய்யும் நேரத்தில் விற்று விட முடிவதில்லை. அதிலும் தடைகள் சந்திப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது.
பொதுவாக இடம் வாங்க மற்றும் விற்க நமது ஜாதகத்தில் ஒரு கொடுப்பினை இருக்க வேண்டும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். நிலத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றாலும் நிலம் வாங்க வேண்டும் என்றாலும் செவ்வாய் பகவானின் அருள் வேண்டும். அதனால் செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். விற்காத நிலம் இருப்பவர்கள் தங்கள் வீட்டை எளிதில் விற்க கீழ்க்கண்ட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
விற்காத வீடு அல்லது நிலத்தின் வடகிழக்கு மூலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஈசானிய மூலை என்றும் கூறுவார்கள். அந்த இடத்தை சிறிது போல சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு அடி ஆழம் வரை தோண்டுங்கள். அதில் இருந்து மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமான வரை கற்கள் இல்லாத லேசான மண்ணை எடுத்துக் கொள்ள முயலுங்கள். இதனை நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று சந்திர ஹோரையில் தான் எடுக்க வேண்டும். பிறகு அதனை உங்கள இல்லத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள். முடிந்தால் அன்றே அல்லது அடுத்த நாளில் பூஜை அறையில் தலை வாழை பரப்பி அந்த மண்ணில் மூன்று பிள்ளையார் பிடித்து வையுங்கள். இதனை எந்த நேரத்தில் வேண்டுமானலும் செய்யலாம். அவை ஒவ்வொன்றிலும் அருகம்புல் செருகுங்கள். பிறகு தூப தீப ஆராதனை காட்டி உங்கள் வேண்டுதலை ஆத்மார்த்தமாகஅதாவது மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு ஓடும் தண்ணீரில் அந்த பிள்ளையாரை செலுத்தி விடுங்கள். குளம் கிட்டை கிணறு போன்ற தேங்கும் நீரில் போடக் கூடாது ஓடும் தண்ணீரில் தான் போட வேண்டும். இந்த பரிகாரம் ஆகர்ஷன சக்தியை ஏற்படுத்தும்.
முழு நம்பிக்கையுடன் இதனை செய்தால் கூடிய விரைவில் விற்காத நிலம் மற்றும் வீடு விற்று விடும். இது பலரும் செய்து பயன் அடைந்து இருக்கிறார்கள். நீங்களும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து பலன் அடையுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025