பொதுவாக வீடு கட்டும் போது வாஸ்து படி வீட்டை அமைத்துக் கொள்வது நல்லது. இது காற்றோடடமாக இருக்கவும் நீரோட்டத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளவும் வசதியாக இருக்க தேவைப்படுவது ஆகும். அந்த வகையில் வீட்டு வாசலையும் வாஸ்துப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு கட்டுவார்கள். அந்த வீட்டில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பது முக்கியம். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நல்லது. தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி வாசல் ஏற்கனவே இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். பெரும்பாலான வீடுகளில் 100 சதவீதம் தெற்கில் வாசல் அமையும். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட அமைப்பு ஒரு வாசல் வழியாக காற்று வந்து மற்றொரு வாசல் வழியாக செல்வதற்கு, காற்றோட்டம் சரியாக இருக்க வைக்கப்படுகிறது. அதன் காரணமாக வீட்டில் ஆரோக்கியம் சிறப்பாகவும், வளமையுடன் இருக்கும்.
ஆனால் இவ்வாறு வாசல்களை அமைத்துக் கொள்வது தனி வீடுகளில் தான் சாத்தியம். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அவ்வாறு அமைத்துக் கொள்ள இயலாது. ஆனால் அதற்கு பதிலாக ஜன்னலை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அமைப்பதன் மூலம் காற்றோட்டம் சீராக அமையும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025