Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
தடைகளை நீக்கும் பரிகாரம் – காரிய வெற்றிக்கு சிறந்த வழிகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தடைகளை நீக்கி காரிய வெற்றி அளிக்கும் பரிகாரம்

Posted DateAugust 17, 2025

ஆவணி மாதம் பிறந்து விட்டது. தமிழ் மாதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாயந்ததாக விளங்குகிறது. அந்த வகையில் இந்த மாதம் அதாவது தமிழ் ஆவணி மாதம் விநாயகப் பெருமானுக்கு உரிய மாதம் ஆகும். விநாயகர் தடைகளை நீக்குபவர்.

தடை நீக்கும் தெய்வத்தின் வரலாறும் பெருமையும்

இந்திய சான்றோர்கள் கூறும் ஒரு பொன்மொழி உள்ளது:
“விநாயகரை வணங்காமல் எந்த காரியத்தையும் தொடங்காதீர்கள்”.
இது வெறும் நம்பிக்கை அல்ல; இதற்குப் பின்னால் இருக்கும் தத்துவம், புராண வரலாறு, ஆன்மிக அடிப்படை அனைத்தும் ஆழமானவை. விநாயகர் முதல்பூஜை உரியவர், விக்னேஸ்வரன் (தடைகளை அகற்றுபவர்) என்று அழைக்கப்படுகிறார். எந்த நல்ல காரியமும் தடையின்றி நடைபெற வேண்டுமெனில் முதலில் அவரையே வணங்குவது மரபு.

முருகன் – விநாயகர் போட்டி கதை (ஸ்கந்தபுராணம்)

நாரதர் சிவபெருமானிடம் ஞானப் பழம் ஒன்றை  அளித்தார். சிவபெருமான் அதை முருகன், விநாயகர் இருவருக்கும் தர  விரும்பினார். ஆனால் அதை ஒருவர் மட்டுமே முழுவதுமாக உண்ண வேண்டும் என்பது விதி.  ஒரு பழம் மட்டுமே இருந்ததால், அவர் போட்டி வைத்தார்:
“உலகத்தை மூன்று முறை சுற்றிவருபவன் பழத்தைப் பெறுவான்”.

முருகன் உடனே தனது மயிலில் புறப்பட்டான். விநாயகர் சிந்தித்து, பெற்றோர்களைச் சுற்றிவந்து,
“என் உலகம் என் தந்தை, தாய்” என்றார்.
சிவபெருமான் மகிழ்ந்து பழத்தை விநாயகருக்கு வழங்கினார்.
அப்போதுதான் விநாயகருக்கு முதல்பூஜை உரிமை வழங்கப்பட்டது.

கிருஷ்ணரின் ச்யாமந்தக மணி சம்பவம்

பாகவத புராணத்தின் படி, கிருஷ்ணனுக்கு ச்யாமந்தக மணி சம்பந்தமாக தவறான குற்றச்சாட்டு வந்தது. அந்தக் குற்றச்சாட்டை நீக்க அவர் ஜாம்பவனுடன் 28 நாட்கள் போரிட்டார். போரில் தடைகள் ஏற்பட்டது, ஏனெனில் கிருஷ்ணன் காரியம் தொடங்கும் முன் விநாயகரை வணங்கவில்லை.  பின்னர்  விநாயகரை வன்னக  அவரது  அருளால் அனைத்தும் சரியானது.

அர்ஜுனனின் பாசுபதாஸ்திரம் பெறும் கதை

அர்ஜுனன், குருக்ஷேத்திரப் போருக்குத் தயாராகும் போது, பாசுபதாஸ்திரம் பெற வேண்டுமென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். அந்த தவத்தில் விநாயகரை வணங்காமல் தொடங்கியதால், அங்கு தடைகள் ஏற்பட்டன.
முதலில் அர்ஜுனன் சந்தித்தவன் ஒரு வேடன் (அது சிவபெருமான் வேடம்). அவருடன் போர் நடந்து, அர்ஜுனன் தோற்கத் தோற்க, மனம் தளர்ந்தான். அப்போதுதான் அர்ஜுனனுக்குப் புரிந்தது –
“விநாயகரை வணங்காமல் எந்த காரியமும் நிறைவேறாது”.
விநாயகரை மனதளவில் வணங்கிய பின், சிவபெருமான் உண்மையான ரூபத்தில் தோன்றி, பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனனுக்கு அருளினார்.

இதனால் அனைத்து புராணங்களும் சொல்வது ஒரே உண்மை:
எந்த காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கினால், தடைகள் நீங்கி வெற்றி உறுதி.

 தடை நீக்கும் விநாயகர் அருள் பெற்றுத் தரும் பரிகாரம்

விநாயக சதுர்த்தி வரவிருக்கிறது. இந்த பரிகாரத்தை அதற்கு ஐந்து நாள் முன்பிருந்து செய்வது நல்லது. முன் ஐந்து நாட்கள் மற்றும் பின் ஐந்து  நாட்கள்  விநாயகரை வணங்கி இந்த பரிகாரத்தினை நீங்கள் செய்யலாம். மொத்தம் பதினோரு நாட்கள். இதுமிகவும் எளிய பரிகாரம். ஒரு கைப்பிடி அளவு அரிசி மற்றும் டைமண்ட் கல்கண்டு ஒரு பிடி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். விநாயகர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி அந்தப் பொடியை நிவேதனம் செய்யுங்கள். அதற்கு முன் விநாயகருக்கு உரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள  மந்திரத்தைக் கூறுங்கள்.

 பிறகு நிவேதனம் செய்த அந்த பொடியை விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் மரத்தடியில் இதனை எறும்புகளுக்கு உணவாகப் போட்டு விடுங்கள். நீங்கள் போடும் இடம் யாருடைய காலும் படாத இடமாக இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பதினோரு நாட்கள் செய்து வர நீங்கள் எதிர் கொள்ளும் தடைகள் அனைத்தும் விலகும்.

 தடை  நீங்க நீங்கள் பிரார்த்திக்க வேண்டிய மந்திரம் பின்வருமாறு:

“ஓம் கம் கணபதயே நமஹ”

 பொருள்:

∙ ஓம் – பரம்பொருளின் ஒலித் தத்துவம்

∙ கம் – விநாயகரின் பீஜம் (மூல மந்திர சக்தி)

∙ கணபதயே – கணங்களின் அதிபதியான விநாயகர்

∙ நமஹ – வணக்கமும் சரணாகதியும்

 மற்றொரு தடை நீக்கும் மந்திரம்:

“வக்ரதுண்டாய ஹும், க்லீம் க்லீம், ஹும் ஹும்”

இந்த மந்திரத்தையும் நீங்கள் கூறலாம்.

∙ அனைத்து தடைகளையும் நீக்குகிறது.

∙ புதிய காரியங்களை தொடங்குவதற்கு முன் ஜபிக்கலாம்.

∙ மன அமைதி மற்றும் வெற்றி தருகிறது.