Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்

Posted DateMay 25, 2025

மே 31, 2025 அன்று காலை 11.32 மணிக்கு சுக்கிரன் மீன ராசியில் இருந்து  மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். ஜோதிடத்தில் சுக்கிரன் களத்திரகாரகன் ஆவார்.  சுகம், காதல், அழகு, ஆடம்பரங்கள், கலைகள், திருமண வாழ்க்கை, மற்றும் செல்வங்கள் போன்றவற்றை சுக்கிரன் குறிப்பார். இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிக்கு மிகவும் அனுகூலமான பலன்களை அளிக்கும். கலைத்துறையில் முன்னேற்றத்தையும், பெயர், புகழ்,  அந்தஸ்தை அளிக்கும். இந்த பதிவில்,  சுக்கிரன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறும் ராசிகளைப் பற்றிக் காண்போம். 

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களே!  சுக்கிரன் உங்கள் ராசிக்கு   ஐந்தாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதி ஆவார். அவர் இப்போது உங்கள் ராசிக்கு பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  அவர்கள்  மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். நீங்கள் விரும்பிய நற்பலன்களைப் பெறலாம். வியாபாரம் தொடர்பாக பல விதத்தில் நல்ல வாய்ப்புகளும், லாபத்தையும் பெறுவீர்கள். ஊக வணிகம் மூலம் லாபம் கிட்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். உங்களால் கணிசமான அளவில் பணம் சேமிக்க இயலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடன் பிறந்தவர்களுடன் உறவு சுமுகமாக  இருக்கும். வெள்ளிக்கிழமை  தோறும் லட்சுமி தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்ய நன்மைகள் அதிகரிக்கும். 

கடக ராசி

கடக ராசி அன்பர்களே! சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் உங்கள் நான்காவது மற்றும் பதினொன்றாம் வீட்டின் அதிபதி  ஆவார். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் முயற்சிகளின் மூலம் லாபம் பெறுவீர்கள்.  நீங்கள்  ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணிகள் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும் என்றாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் வசதிகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு காதல் உறவு, திருமண உறவாக மாறலாம். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால் அதிக மனச்சோர்வு இருக்கலாம். “ஓம் சந்திராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 28 முறை உச்சரிக்கவும். 

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களே! சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார்.  அவர் உங்கள் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி ஆவார். உங்கள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான எல்லா வித சூழலும் சாதகமாக இருக்கும். மேலும் அதை சேமிக்கவும் முடியும். மகிழ்ச்சியான சூழல் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். காதலர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரத்தை  பாராயணம் செய்யவும்.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களே! ராசிநாதன் சுக்கிர பகவான் சம சப்தம ஸ்தானத்திற்கு மாற உள்ளார். இதனால் வாழ்க்கையில் சிறிய உயரங்களை தொட முடியும். குடும்பத்திலும், பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக லாபம் பெற வாய்ப்பு உண்டு. வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். மேலும் உங்களின் வசதிகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் தகவல் தொடர்பு அனுகூலமாக இருக்கும். ”ஓம் சுக்ராய நமஹ” என்னும்  மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்க மனதில் புதிய தெம்பு பிறக்கும். 

மகர ராசி

மகர ராசிக்கு சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் நீங்க மன நிம்மதி கிடைக்கும். வாழ்க்கையில் ஆடம்பரத்தை அனுபவிப்பீர்கள். புதிய வசதிகள், அதிகாரங்கள் கிடைக்கும். நீங்கள் வேலை தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வணிகம் தொடர்பான பயணங்கள் அனுகூல பலனை பெற்றுத்தரும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியம் படிப்படியாக  மேம்படும். 

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்கள் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் உங்கள் ஒன்பதாவது மற்றும் நான்காவது வீட்டின் அதிபதி ஆவார்.  உங்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அதிர்ஷ்டகரமான நேரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் சம்பாதிக்கலாம் மற்றும் புதிய வேலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் பெறலாம்.