Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
சொந்த வீடு வாங்க சித்திரை கிருத்திகை பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சொந்த வீடு வாங்க சித்திரை கிருத்திகை பரிகாரம்

Posted DateMay 3, 2025

சொந்த வீடு அமைய என்ன செய்ய வேண்டும்? பொதுவாக எல்லாருக்கும் வீடு என்பது தேவையானது. அதிலும் சொந்த வீடு அமைய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. என்றாலும் அதற்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். வீடு கட்ட வேண்டும் என்றாலும் வீடு வாங்க வேண்டும் என்றாலும் நாம் கடன் வாங்க வேண்டியுள்ளது. அவ்வாறு கடன் வாங்கும் போது நமது தேவை  மற்றும் தகுதி அறிந்து செயல்பட வேண்டும். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு கடனாளி ஆகி தவிப்பது கூடாது. இதனை வீடு வாங்க எண்ணும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். கடனை அடைக்கும் அளவிற்கு நமது சம்பாத்தியம் உள்ளதா? எதிர்காலத்திலும் இருக்குமா என்றெல்லாம் யோசித்து செயல்பட வேண்டும். ஒரு சிலருக்கு கையில் பணம் இருந்தாலும் சொந்த வீடு அமையாது. அப்படியே அமைந்தாலும் அதில் வசிக்க இயலாமல் போகலாம்.நாம் என்ன திட்டம் இட்டாலும் கடவுள் இடும் திட்டம் ஒன்று உள்ளது அல்லவா? எனவே நமது வீடு வாங்கும் கனவுகள் நிறைவேற நாம் இறைவனைத் தான் பற்றிக் கொள்ள வேண்டும். யாரை பற்றிக் கொள்வது. எப்படி நமக்கு தீர்வு கிடைக்கும்?  இதற்கெல்லாம் தீர்வாக அமையும் ஒரு பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

சொந்த வீடு அமைய பரிகாரம் :

வீடு மற்றும் நிலம்  என்றால் செவ்வாய் கிரகம் சம்பந்தப்பட்டதாகும். செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகர் ஆவார். முருகருக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். நாளைய தினம் சித்திரை மாதம் 29/04/2025 கிருத்திகை நடச்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க்கிழமை ஆகும். எனவே இது மிகவும் விசேஷமான நாள் ஆகும்.இன்றைய  தினத்தில்  முருகனை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். இந்த நாளில் முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு கிரக தோஷங்கள் நீங்கும். குடும்ப கஷ்டங்கள் தீரும். அதிலும் இந்த வருடம் வந்திருக்கும் சித்திரை மாத கிருத்திகை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் நிவர்த்தி செய்ய இந்த நாளில் முருகன் வழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டும்.

இப்பொழுது நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிக் காண்போம்.

இந்த பரிகாரத்தை காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு மனை அல்லது பலகையின் மீது முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு தட்டில் அழகாக அலங்காரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது துவரம் பருப்பை வையுங்கள். நடுவில் இரண்டு அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி திரி போட்டுக் கொள்ளுங்கள். முருகப் பெருமானின் படத்திற்கு முன் இந்த விளக்குகளை ஏற்றிக் கொள்ளுங்கள். செவ்வரளி அல்லது செம்பருத்தி பூவை முருகருக்கு சாற்றுங்கள். பிறகு உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைக்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தேவையான வேண்டுதலை வைக்கலாம். அல்லது நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தால் அது சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாம். பிறகு காலை மாலை என இரண்டு வேளையும் கீழே உள்ள பதிகத்தை படிக்க வேண்டும்.

மறு நாள் அந்த துவரம்பருப்பை பொடி செய்து பறவைகளுக்கு உணவாக வைத்து விடுங்கள்.

திருப்புகழ் பதிகம்

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி …… வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய …… முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.

 

நம்பிக்கையுடன் பக்தியுடன் இந்த பரிகாரத்தை செய்து முருகனிடம் மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேற எண்களின் வாழ்த்துக்கள்.