நாம் பார்த்துப் பார்த்து அழகாக கட்டிய வீடாக இருந்தாலும் இயற்கை சூழலை ஒட்டியதாக இருந்தால் நமது மனம் செழிப்பாக இருக்கும். நமது மனதை கொள்ளை கொள்ளும் பசுமையான தாவரங்கள் இருந்தால் நம் மனதிலும் பசுமை குடி கொள்ளும். சில தாவரங்கள் நமது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விலக்கும். சில தாவரங்கள் நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை வர விடாமல் செய்யும். வீட்டிற்கு வாஸ்து இருப்பது போல தாவரங்களிலும் வாஸ்து குணம் உண்டு. சில தாவரங்களை நமது வீட்டில் வளர்க்கலாம். சில தாவரங்களை வளர்த்தல் கூடாது. மேலும் எந்தெந்த திசையில் எந்தெந்த தாவரங்களை வளர்க்கலாம் என்ற நியதியும் உண்டு. முறையாக வளர்க்கப்படும் தாவரங்கள் நமத் வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கின்றன.
எனவே தான் பலரும் வாஸ்து செடிகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள், ஆனாலும் ஒருசில முறைகளை பின்பற்றினால் மட்டுமே அதிர்ஷ்டம் தேடி வரும், நேர்மறை எண்ணங்களும் வீட்டை சுற்றியிருக்கும்.
இந்த பதிவில் எந்த செடிகளை வளர்க்கலாம், எதை செய்யக்கூடாது என்பது குறித்துதெரிந்து கொள்வோம்.
நமது வீடுகளில் மா மரம், வாழைமரம் போன்றவற்றை வளர்க்கலாம். இவை நமக்கு காய் கனிகளை அளிப்பது மட்டும் அன்றி அவை அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
வேப்பமரம் வீட்டில் வளர்ப்பதன் மூலம் குளிர்ச்சியை பெறலாம். மருத்துவ பொருளாகவும் உதவும். மேலும் அது தூய காற்றை நமக்கு அளிப்பதன் மூலம் வீட்டில் நேர்மறையைக் கொண்டு வரும்.
மிக முக்கியமாக கருவேப்பிலை மரத்தை பாதுகாத்து வளர்த்து வந்தால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும்.
எலுமிச்சை, மல்லிகைப்பூ செடிகள் நேர்மறை எண்ணங்களை பரப்பும்.
துளசி
துளசி இறை வழிபாட்டிற்கு உரிய செடியாக புனிதமானதாக போற்றப்படுகிறது. மற்றும் லக்ஷ்மியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. எனவே, ஒவ்வொரு இந்து குடும்பத்திலும் இந்த செடியை காணலாம். வாஸ்து படி, அவை வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வளர்க்கப்பட வேண்டும்,.
மணி பிளாண்ட்
இந்த செடிகளை வாஸ்து படி சரியான திசையில் நட்டால் அவை உங்கள் வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வர உதவும். இது குறைந்த வெளிச்சத்தில் எளிதில் உயிர்வாழக்கூடியது, எனவே, உட்புறங்களுக்கு ஏற்றது. நீங்கள் அறை வெப்பநிலையில் பராமரிக்கும் போது கூட இது நன்கு வளரும்.
முல்லை
வீட்டின் வடகிழக்கு மூலையில் முல்லைக்கொடியை நட்டு வளர்த்து வந்தால் ராகுதோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது, குறிப்பாக பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
மூங்கில் .
மூங்கில் செடியை வீட்டின் உட்பகுதியில் அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து வளர்த்தால் அதன் தண்டுகள் வளர வளர செல்வம் கொழிக்கும்.
கற்றாழை
கற்றாழை செடிகளில் உள்ள ஜெல் பல பிரச்சனைகளை குணப்படுத்தும், அதனால்தான் இது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது மற்றும் உங்கள் வீட்டில் நேர்மறையான அதிர்வுகளை பரப்புகிறது. இது எப்போதாவது நீர் ஊற்றினால் போதும்.
தென் கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வீட்டு தோட்டத்தை அமைத்தல் கூடாது.
ரோஜா தவிர முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்க கூடாது பால் போன்ற வெண்மை நிறத்தில் திரவத்தை வெளியிடும் செடிகளையும் வளர்க்க வேண்டாம்.
வீட்டின் முன்வாசலை மறைத்தபடி பெரிய பெரிய மரங்களை வளர்க்கக்கூடாது, இது நேர்மறை எண்ணங்கள் உள்நுழைவதை தடுத்துவிடலாம்.
வீட்டுத்தோட்டத்தில் வளரும் செடிகள் மற்றும் இலைகள் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், காய்ந்த கருகிப்போன இலைகளை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025